Monday, March 30, 2009

வன்னி மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற தேவைப்பாடு அரசிற்குண்டா?


தாரா சிறீராம்

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வன்னி மக்களின் உண்மைநிலையினை கண்டறியும்பொருட்டு நாங்கள் அப்பிரதேசங்களில் சமூகசேவையில் ஈடுபடுபவர்களையும், மதகுருமார்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தோம். எமது சுற்றுப்பயணத்தின்போது கிடைத்த தகவல்களின்படி வன்னி மக்களின் வாழ்க்கை பின்வருமாறு அமைகின்றது.

யுத்தக் காரணங்களினால் இற்றைக்கு வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையாகிய 419000; பேரில் இடம்பெயர்ந்துள்ளோர் 315000 பேர் ஆவர், இவர்களில் அதிகமானோர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர் என்பதுடன் அரசினால் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். அரசு இவ்வாறு சூனியப்பிரதேசங்களாகக் குறிப்பிட்டுள்ள இடப்பரப்பு 10 கிலோமீற்றர் சதுரப்பரப்புடையதாகும். ஆனால் இடம்பெயர்ந்துள்ளோர் தொகை 315000 பேராகும். இவ்வாறான ஒரு எண்ணிக்கைக்கு இவ் 10கிலோமீற்றர் சதுரப்பரப்பு போதுமானதா என்பது ஒரு பிரச்சனையாகும். எமது கருத்துப்படி இது எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதாகும்.

இன்னுமொரு பிரச்சனை பல்வேறு மக்கள் இந்த சூனியப்பிரதேசமாக கருதப்படும் பிரதேசத்தினுள் நுழையாமல், இவர்கள் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களினுள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதற்குக்காரணம் இப்பிரதேசங்கள் சூனியப்பிரதேசமாகக் கருதப்பட்டிருந்தாலும், இதற்குமுன் சூனியப்பிரதேசங்களாகக் கருதப்பட்ட பேசாளை மற்றும் மடு தேவாலயம் ஆகியன சூனியப்பிரதேசங்களாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்குரிய ஆணையாளரினால் (UNHCR) மேற்பார்வை (கண்காணிப்பு) செய்யப்பட்டவையாகும். இவ்வாறு எவராலும் கண்காணிப்புக்கு உட்படவில்லையென்பதனால் இடம்பெயர்ந்தோர் மிகவும் பயத்துடன் வாழ்கின்றனர்.

மற்றுமொரு விடயம் இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கான உணவுப்பிரச்சனையாகும். தற்போதைக்கு ஐக்கிய நாடுகளின் உணவுப்பொதிகளைக் கொண்டுசென்ற food convey இரண்டும் மற்றும் அரசமுகவர்களூடாகச் சென்ற இரண்டு food convey மாத்திரமே வன்னியைச் சென்றடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மூன்றாவது food convey வன்னியைச் சென்றடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கு மேலாக வன்னியிலுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால்மா (குழந்தைகளுக்குரிய), பால்மா, சீனி, தேயிலை, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, நுளம்புத்திரி, மற்றும் குடிநீர் என்பவற்றில் பாரியளவிலான தட்டுப்பாடு நிலவுகின்றது. பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 1200 என்பதுடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 350தாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தமது உணவுகளை சமைத்துக்கொள்ளவும் முடியாதுள்ளது. தட்டுப்பாடுள்ள சில உணவுப்பொருட்களின் விலை மிக உயர்வாக இருப்பதனால் இவற்றினை இடம்பெயர்ந்துள்ள மக்களால் கொள்வனவு செய்யமுடியாதுள்ளது.

தற்பொழுது வன்னியில் மழைகாலம் ஆரம்பித்துள்ளதுடன், மக்கள் பொதுவாகவே மரநிழலிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலுமே தங்கியிருந்தனர். அதனால் மழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலை மக்களை மிகவும் துன்பகரமாக நிலைக்குத் தள்ளுகின்றது. வயல்கள் நீரினால் நிரப்பப்பட்டுள்ளதனால் மக்கள் தர்மபுரமூடாக வெளியேறியுள்ளனர். இந்த தர்மபுரம் பாதையூடாக செல்லும் வாகனங்கள் மிகவேகமாக செல்வதனால் நாள்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது. மிகவும் வேகமாகச் சென்று வாகனத்தில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்தது. சிறிய பிரதேசத்தில் அதிக மக்கள் குடியிருக்கின்றனரென்பதைக்கூட கருத்திற்கொள்ளாது வாகனஓட்டுனர்கள் தமது வானகங்களைச் செலுத்துகின்றனர். இது தொடர்ந்து வீதி விபத்து ஏற்பட வழி செய்யும். இவர்கள் குடியிருப்பதற்கு தேவையான கூடாரங்களை அமைப்பதற்குரிய அடிப்படைப் பொருட்களைக்கூட அரசு வழங்கவில்லை. வன்னியில் ஒரு சீமேந்து பையின் விலை ரூபாய் 27000ஐ அண்டியுள்ளது.

சீமேந்தை வன்னியினுள் கொண்டுசெல்வதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டரீதியான தடையினால் ஐக்கிய நாடுகள் அல்லது வேறு சமூகசேவை நிறுவனங்கள் இந்த மக்களுக்கு எவ்வித நிர்மாணப் பணியினையும் செய்துகொடுக்கவில்லை. இப்பிரதேசங்களிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு பாடசாலை மாத்திரம் தமது பணியினை மேற்கொள்கின்றது. இது காலையில் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் குழந்தைகளுக்கு, மாலையில் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகளுக்கு என கல்வியினைப் புகட்டுகின்றது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீதிவிபத்து காரணமாக மாலையில் நடாத்தப்பட்டுவந்த வகுப்புக்கள் (பாடசாலை) நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள்கூட இல்லாத ஒரு நிலை நிலவுகின்றது.

மழைக்காலம் ஆரம்பித்தவுடன், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மலேரியா, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. காரணம் அதிகபட்சமான மழையினால் மலசலகூடக் குழிகள் நிரம்பியுள்ளதால் இக்குழிகளுக்கு மாற்றீடாக மண்ணெண்ணை பரல்களை வெட்டிப் பாவிப்பதனால், வடிந்தோடும் மழைநீரில் இந்த அழுக்குகள் சேர்வதனால் இந்நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை முறைகள் வழமைபோல் இடம்பெற்றாலும், இங்குள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. விஷேடமாக மழைகாரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான வைத்திய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென்பதுடன் வைத்தியஅதிகாரிகள், சுகாதார சேவைஅதிகாரிகள் எவரும் இந்த இடம்பெயர்ந்த மக்களைச் சென்று பார்வையிட முடியாதுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்குரிய மிகப்பெரிய பிரச்சனை பாம்புக்கடி. கடந்த 10 நாட்களுக்குள் வயது வந்தவர்கள், குழந்தைகளுட்பட 200க்கும் மேற்பட்டோர் பாம்புகளினால் தாக்கப்பட்டுள்ளனரென்பதுடன், சிலர் சரியான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துமுள்ளனர்.

இதேபோன்று வன்னி மக்களிடையே எவ்விதமான தொலைத்தொடர்பு சேவையும் இல்லையென்பதுடன், ஐக்கிய நாடுகள் மூலம் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ளவென அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிலையமொன்று மாத்திரமே மிகுதியாக இயங்குகின்றது. இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கு வன்னியினுள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை, மக்கள் இவ்வாறானதொரு துன்பகரமாக சூழலில் இருக்கும்போதுகூட அரசு ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சமூகசேவை அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற்றுவதன்மூலம் இம்மக்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைக்கு ஒட்டுசுட்டானிலுள்ள தமது சொந்தங்களின் வீடுகளில் சிலர் தங்கியுள்ளனர். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடுகளில் 40க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவ்வீடுகள் தற்போது பெய்துவரும் கடும் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காதவையாகும்.

தற்பொழுது வன்னி மக்கள் வறுமை, சுகாதார சீர்கேடு, தங்குமிட வசதியின்மை, இயற்கையின் நிகழ்வுகள், மரணபயம் போன்றவற்றினால் கடுமையாகத் தாக்கமடைந்துள்ளனர். சிறு குழந்தைகள் போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் வாழ்வதற்குரிய பாதுகாப்பான இடம் இலங்கையில் எங்குமேயில்லை.

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த வன்னி மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வரும்படி அரசு அழைப்பு விடுத்திருந்தது. நாம் நடத்திய ஆய்வின்படி ஐக்கிய நாடுகளின் முகவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர். அதாவது இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்கு வவுனியாவில் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதென்பது அவர்களது கருத்தாகும். இதில் ‘மனிக் பாம்’ என்ற இடம் துப்பரவு செய்யப்பட்டிருந்ததுடன் மற்றைய இரண்டு பிரதேசமும் எவ்வித முன்னேற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. மனிக்பாம் என்ற இடத்தில் அதிகபட்சமாக 4000 பேர் மாத்திரமே தங்கக்கூடியதாக வசதிகள் இருந்தபோதும், அரச அறிவுரையின்படி 60000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கலாமென்று குறிப்பிட்டிருந்தது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தின்போது வன்னியிலிருந்து 315000 பேர் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்திருப்பின், ஏற்கனவே வவுனியாவில் குடியிருக்கும் 182000 பேருடன் சேர்ந்து இந்த இடம்பெயர்ந்த மக்களும் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியிருப்பர். மற்றைய விடயம் தற்பொழுது இம்மக்களிருக்கும் இடத்திலிருந்து வவுனியா மற்றும் மன்னாரிற்கு வருவதாயின் மிகவும் தூரப்பயணமொன்றை காடுகளூடாக மேற்கொள்ளவேண்டியிருக்கும். இது மிகவும் பயங்கரமான ஒரு மார்க்கமாகும். உண்மை என்னவென்றால் வன்னி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரமாட்டார்களென்பது ஏற்கனவே அரசு அறிந்த ஒரு விடயமாகும். இது அரசின் முன்னேற்பாடுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இதனால் இன்று வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்கவேண்டுமென்பதில் அரசிற்கு எவ்விததேவையும் இல்லையென்பது எமது பிரச்சனையாகும்.

வன்னிப் பிரதேசம் இன்று அரசின் முக்கிய இலக்காக உள்ளதுடன், எதிர்வரும் சில வாரங்களில் நிலைமாறாதுபோனால், வன்னி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறிகாக மாற இடமுள்ளது.

Back to Home page...

மக்களைக் கொடுமைப்படுத்துவது பொதுவில் நிறுத்தப்படவேண்டியதாகும்


அன்டனி விக்டர் சோ செ அடிகள்
மன்னார்

கலந்துரையாடியது –
தாரா சிறீராம்


தற்போது அரசின் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மன்னாரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது?

தற்போதைய அரசின் இந்த யுத்த செயற்பாடு போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களிலும் தாக்கஞ்செலுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடப்பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்விட மிகமுக்கியமான விடயம் இங்குள்ள மக்கள் அனைவரும் மனரீதியில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவர்களது உறவுகள் வன்னிப் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சுக துக்கங்களை அறியமுடியாமலுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் இங்கு வாழும் மக்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கின்றனர்.

இன்று மன்னார் மக்களின் வாழ்க்கை எவ்வாறுள்ளது?

சாதாரண வாழ்க்கையினைப் பற்றி விபரிப்பதாயின் மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்கின்றனர், கோயிலுக்குச் செல்கின்றனர், தேவஸ்தானத்திற்குச் செல்கின்றனர். இவையெல்லாம் வெளிப்படையாகக் காணக்கூடியவையாக இருந்தாலும், மனரீதியில் இவர்கள் மிகவும் பயத்துடன்தான் வாழ்கின்றனர். எமக்கு ஏன் இப்படி நடக்கின்றது அல்லது நடக்கப்போகின்றது என்ன என்பதுதான் இவர்களின் பயமாக இருக்கின்றது. வன்னியில் இடம்பெறுபவை தொடர்பாக இவர்களால் எதுவும் அறியமுடியாதுள்ளது. இதனாலுங்கூட அவர்களின் மனதில் பயம் நிலவுகிறது.

மன்னாரிலுள்ள மக்களின் மனிதஉரிமை தொடர்பாகப் பேசினால்…

உதாரணமாக மன்னார், வவுனியா போன்ற பிரதேசங்களுடன் இந்த விடயத்தை நான் ஒப்பிடப்போவதில்லை. இருப்பினும், மன்னாரில் முன்னையதைவிட சற்று சுபமான நிலை மாறியுள்ளது. இது பிரச்சனை எதுவுமில்லை என்பதைக் குறிப்பிடவில்லை. காணாமற்போதல்கள் இடம்பெறுகின்றது. இது ஒரு பாரிய பிரச்சனை. கொலைச்சம்பவங்கள் ஆடிமாதத்திலிருந்து எமக்கு அறிக்கையிடப்படவில்லை. கைதுசெய்யும் நடவடிக்கைகள்கூட இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக கடத்தல்கள் இடம்பெறுகின்றது.

மன்னாரிலுள்ள கலிமுண்டாய் மற்றும் சிறுக்குண்டால் முகாம்களின் தற்போதைய நிலை எவ்வாறுள்ளது?

மனிதாபிமானத்துடன் பார்த்தால் இது மிகவும் வேதனைக்குரிய விடயம். இம்மக்கள் தாம் விரும்பிய இடத்தில் சென்றுவாழ இடமளிக்க வேண்டும். இருப்பினும் பாதுகாப்புத்தரப்பினரின் கருத்துப்படி இம்முகாம்களில் தேசியபாதுகாப்புக்கு பங்கம் விழைவிக்கக்கூடியவர்கள் இருக்கின்றனரென்பதாகும். இந்த அனுமானத்திற்கு எமது பதில் அவ்வாறாயின் அவர்களைத் தேர்ந்தெடுத்து நன்நடத்தை நிலையங்கள் போன்ற ஒருவழியினை அமைக்கும்படியாகும். பொதுவாக அனைவரையும் இவ்வாறு அடைத்தல் பிழையென்பது எமது கருத்தாகும். குறிப்பாக மருந்துதான் வாழ்க்கையென வாழ்பவர்களும் இங்குள்ளனர். கற்பிணித்தாய்மார்கள் உள்ளனர். வயதுவந்தவர்கள், பிள்ளைகள் என்போரும் இங்குள்ளனர். இவர்களுக்கும் சாதாரணமான நிம்மதியான ஒரு வாழ்க்கையினை கொண்டுநடாத்த ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும்.

மடு தேவாலயத்தின் நிகழ்கால நிலைமை தொடர்பில் குறிப்பிட்டால்….

மடு தேவாலயத்தை பலத்த பாதுகாப்பின்கீழ் அரசு செயற்படுத்துகின்றது. தேவாலயத்திற்குப் பொறுப்பான குரு உட்பட 11பேர் அங்கு தற்போதைக்குத் தங்கியுள்ளனர். இதற்குமேலாக இங்கு ஒருவர் வருவதாயின் அனுமதி பெறவேண்டியிருக்கும். இச்செயற்பாடு மிகவும் நீண்டகாலத்தை எடுக்கும். இரு ஒரு புனிதத்தலமாக இருந்தாலும் மக்கள் அங்கு வழிபாட்டுக்குச் செல்லமுடியாதுள்ளது. இதுவொரு பாரிய பிரச்சனையாக உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இத்தியாகத்தை செய்கின்றோம்.

தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இந்தக் கொடுமையினைப்பற்றி உங்களது கருத்து என்ன?

எமது நிலை, பிழைசெய்தவர்களிருந்தால் அவர்களை சட்டப்படி தண்டிப்பதாகும். இலங்கை ஒரு குடியரசு நாடெனின் குடியரசு நாட்டினுள் இவ்வாறு குற்றமிழைப்பவர்களை தண்டிக்க நீதிமன்றமுறையிருக்கும். இருப்பினும் பொதுவில் ஒரு சமூகத்தை மாத்திரம் கொடுமைப்படுத்துவதை எம்மால் ஏற்கமுடியாது. இதனூடாக இனங்களிடையே குரோதம் அதிகரிக்கின்றது. இதனால் பொதுவில் மேற்கொள்ளப்படும் இக்கொடுமைகளை நிறுத்த வேண்டும். இலங்கை குடியரசு நாடாயின் சிங்கள, தமிழ் எவ்வினத்தவராக இருப்பினும் கௌரவத்துடன் மனிதனாக வாழக்கூடியதாக இருக்கவேண்டும்.

தற்போதைய அரசு மனிதஉரிமையினைப் பாதுகாப்பதில்லை. இதனால் இதற்குச் சர்வதேச தலையீடு அவசியமா?

ஆம், இது முழுஉலகளவிலும் செய்யப்படும் ஒரு உதவியாகும். தலையீடல்ல. எமக்கு சர்வதேச உதவி அல்லது ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. உலகில் ஒவ்வொரு பிரதேசத்திலும் மனிதஉரிமை நிலைமை வேறுபடுகின்றது. இன்று உலக நாடுகளை எடுத்துக்கொண்டோமானால் ஒருவரிலொருவர் தங்கியுள்ளது தெளிவாகின்றது. இது இலங்கையினையும் உள்ளடக்குகின்றது. இந்நிலை இலங்கையினால் உணரப்படவேண்டிய ஒரு உண்மையாகும். விஷேடமாக உலகளாவிய ரீதியில் மனிதஉரிமை அபிவிருத்தியடைந்துள்ளது. இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசக் கொள்கைகளும் இருக்கின்றது. இவற்றைக் கருத்திற்கொண்டு சர்வதேச ரீதியில் எமக்கு உதவ முன்வரவேண்டும்.

இந்த இனரீதியான பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியமென்று நினைக்கின்றீர்களா?

கண்டிப்பாக அரசியல் தீர்வு அவசியம். என்னால் எவ்வகையான தீர்வென்று நிச்சயப்படுத்த முடியாது. எமக்குத் தெரிந்தவகையில் தமது நாட்டின் அரசியல் பிரச்சனையின்போது பல்வேறு முறைமூலம் தீர்வுகண்ட நாடுகள் பலவற்றை உலகில் காணக்கூடியதாக உள்ளது. இவற்றிலொன்றை நன்றாக ஆராய்ந்து எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றை எம்மால் தெரிவுசெய்ய முடியும். இந்த நீண்டகால யுத்தத்திற்காக பல்வேறு தரப்பினரால் பல விடயங்களை தியாகஞ்செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால் எமக்கு அரசியல் தீர்வு அவசியம்.

Sunday, March 29, 2009

அகதிமுகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காட்சியளிக்கின்றது

ருகி பிரணாந்து கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான மனிதஉரிமை அமைப்பாகிய Law and Society Trustஇன் இணைப்பாளராவார். மிகவும் பிரபல்யமான மனிதஉரிமைப் பாதுகாவலராகிய இவர் சில நாட்கள் பாங்கொக் நாட்டில் அமைந்துள்ள Forum Asiaவின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். சில நாட்களுக்குமுன் மன்னார் பிரதேசத்தை பார்வையிட்டதன்பின் இவர் ‘சமபிம’விற்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு.

இன்று அனைவரும் யுத்தத்தைப் பற்றிபேசும்போது நீங்கள் மாத்திரம் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடச் சென்றீர்கள்?

சாதாரணமாக எமது கருத்து வட, கிழக்கு மாவட்டங்கள் ஓமந்தையிலிருந்தே பிரிய ஆரம்பிக்கின்றன என்பதாகும். இருப்பினும் எமது சுற்றுப்பயணத்தின் பின் கண்ட விஷேடமான ஒரு விடயம் யாதெனின் இப்பொழுது நாடு மதவாச்சியில் பிளவுபடுத்தப்படுகின்றதென்பதாகும். கொழும்பிலிருந்து அல்லது வேறொரு பிரதேசத்திலிருந்து வவுனியாவிற்கு அல்லது மன்னாரிற்கு செல்ல விரும்புவர்கள் மதவாச்சியிலுள்ள சோதனைச்சாவடியில் இறங்கி அதிலிருந்து வேறொரு வாகனத்தில்தான் செல்லவேண்டியுள்ளது. வவுனியாவரை சென்ற ரயில்கள் தற்பொழுது செல்வது மதவாச்சிவரைக்கும் மாத்திரமே. காலை 3.45, 7.30 மற்றும் இரவு 10.30ற்கும் மதவாச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் மன்னாரிலிருந்து வரும் எவராலும் ஏற முடியாது. காரணம் மன்னார் வீதி காலை 6.00மணிக்குத்தான் திறக்கப்படுகின்றது. இந்த நேரங்கள் காலநேர அட்டவணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டவை எனவே மன்னார் வாசிகளுக்கு இவற்றில் பயணிப்பதற்கு சரியான நேரத்திற்கு மதவாச்சிக்கு வரமுடியாதுள்ளது. பொருட்களைக் கொண்டுசெல்லும்போதுகூட மதவாச்சியைக் கடப்பதாயின் வேறு வாகனங்களையே ஒழுங்குபடுத்தவேண்டியள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வாகனங்களுக்குரிய கூலி பலமடங்குகளாக அதிகரிக்கும். இவ்வனைத்து செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டியது மன்னார் சாதாரண மக்களாகும். மற்றைய விடயம் மன்னாரில் வாழும் அனேகமக்கள் கத்தோலிக்க தமிழ் மக்களாவர். மடு மாதாவின் வருடாந்த உற்சவத்தின்போது கிழக்கிலிருந்து வந்த சிங்கள-கத்தோலிக்கர்களுக்கு மதவாச்சியிலிருந்து மன்னாரிற்கு செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு இராணுவத்தினால் உணவு வழங்கப்பட்டதுடன், பஸ்களில்; ஏற்றிச்சென்று மன்னாரில் இறக்கிவிடப்பட்டனர், மீண்டும் அங்கிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதுடன், இருப்பினும் மன்னாரிலிருந்து வந்த மக்களும் தமது பிரதேசத்திலுள்ள முக்கியமான இடத்திற்குச்செல்ல இவ்வாறானதொரு ஏற்பாடு செய்துகொடுக்கப்படவில்லை.

உங்களது கண்ணோட்டத்தில் மன்னார் மக்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறுள்ளது?

இவர்களிடத்தில் காணப்படும் மிகமுக்கிய விடயம் பயமாகும். நாட்டு நிலைமையின்படி இவர்களுக்கு உதவ எவரும் இல்லையென்பது இவர்களது எண்ணமாகும். மற்றைய விடயம் மன்னாரில் தொடர்பாடல் சேவைகளிலுள்ள பின்னடைவு, மன்னாரில் அனைத்து கையடக்க தொலைபேசி அமைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களது எண்ணம் இவை இராணுவத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதென்பதாகும். எமது சுற்றுப்பயணத்தின்போது ஒரு பொலிஸ் அதிகாரி எம்மிடம் கூறியதாவது, இராணுவம் தற்பொழுது செய்துகொண்டிருக்கும் செயற்பாடுகளுக்கு கையடக்க தொலைபேசிகளின் பாவனையினால் நட்டம் அல்லது தடங்கல்கள் ஏற்படுவதால் அவற்றினைத் துண்டித்துள்ளனரென்பதாகும்.

அதேபோன்றுதான் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்குத் தோன்றும்போதெல்லாம் பொதுமக்கள் மன்னாருக்குள் பிரவேசிப்பதை தடுக்கின்றனர்.

தற்பொழுது மன்னார் நகரத்தினுள் நிலவும் நிலைமை எவ்வாறுள்ளது?

மன்னார் நகரத்தினுள் ஊரடங்கும் சட்டம் இல்லாவிடினும்கூட இரவு 7.00 அல்லது 8.00 மணியாகும்போது மக்கள் தெருவிற்கு வருவதில்லை. கடத்தல்கள் மற்றும் கொலைச்சம்பவங்கள் இன்னமும் இடம்பெறுவதாலும், இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தமக்கு தமிழ் மொழியில் பொலிஸில் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாதென்பதும் அதிகாரிகள் தமக்கு வேண்டியதுபோல் முறைப்பாடுகளை எழுதிக்கொள்வதும், முறைப்பாட்டின் பிரதிக்குப் பதிலாக அதனை சுருக்கமாக எழுதி பொதுமக்களிடம் வழங்குவதனாலும் மன்னார் மக்களுக்கு தமது உயிரைப் பற்றி எவ்விதத்திலும் நம்பிக்கையில்லையென்பதுடன், உத்தரவாதமுமில்லை.

உங்களது கருத்தின்படி வடகிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் இருக்கையில் மன்னாரில் மாத்திம் இவ்வாறானதொரு நிலைதோன்றக் காரணமென்ன?

முக்கியமான விடயம் போக்குவரத்துக் கஷ்டம். அரசு மன்னாரினுள்ளும் வேறு பிரதேசங்களிலிருந்தும் உள்வருகையினைத் தடைசெய்ய முயற்சி செய்கின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகளின் முகவர் இடம்பெயர்ந்தோரைச் சென்று பார்வையிட முயற்சி செய்தபோது, அவர் மன்னாரினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாதென அரசு குறிப்பிட்டிருந்தது.

தங்களது சுற்றுப்பயணத்தின்போது மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம்களை பார்வையிட்டீர்களா? அங்கு நீங்கள் கண்டவற்றை விபரிக்க முடியுமா?

இந்த முகாம்கள் ஒருவகையான சிறைச்சாலைகளாக காட்சியளித்தன. இந்த முகாம்களிலிருந்து சிலர் வெளியேசெல்ல தடைசெய்யப்பட்டிருந்தது. சிலர் வெளியே சென்றாலும் மாலையாகுமுன் முகாமிற்குள் வரவேண்டியிருந்தது. இங்கு உள்ளவர்கள் குற்றவாளிகளல்ல. வேளாண்மை செய்துகொண்டு, மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டவர்களும் கூறும் ஒரேயொருவிடயம் அவர்கள் யாரையும் நம்பி வாழவேண்டியவர்களல்ல (உணவிற்காக) என்பதாகும். 2770ல் முசலி பிரதேசம் மீட்கப்பட்டு தற்போதைக்கு ஒரு வருடம் கடந்த நிலையில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். கடந்த வைகாசி மாதம் நானத்தன் பிரதேசத்தில் அரசபடைகள் சுவரொட்டிகளில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர், அதாவது LTTEயுடன் தொடர்புடையவர்கள் தயவுசெய்து இராணுவமுகாமிற்கு வந்து சரணடையுமாறு என்பதாகும். இதற்குமுன் LTTEயினரினால் மக்கள் கட்டாய ஆயுதபயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இவ்சுவரொட்டிகளை பார்வையிட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலர் வைகாசி மாதத்தின்பின் இந்தியாவிற்குச் செல்ல காரணமாக அமைந்தது இச்சுவரொட்டிகளே.

LTTE அமைப்பினால் இவர்களுக்கிருந்த அச்சுறுத்தல்களென்ன? இன்னமும் அவ்வாறான பயமுறுத்தல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றதா?

தற்பொழுது அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை. இருப்பினும் LTTEயினர் தமது 18 வயது பூரணமாகிய பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் தமது அமைப்பில் இணைத்துக்கொண்டமையினால் இம்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். இருப்பினும் தமது பிள்ளைகளை வெளியேற்ற LTTE அமைப்பு அனுமதி வழங்கவில்லை. இதற்கான முக்கிய காரணம், அனேகபொதுமக்கள் படகுகள்மூலம் காட்டுவழியாக புல்மோட்டைப் பகுதியினூடாக, மேற்குக் கரையோரமாகிய தப்பி மன்னாரினுள் நுழைந்தனர். இதற்கும் மேலாக இரு தரப்பினரதும் யுத்தசெயற்பாடுகளினால் தமது உயிர்களைப் பாதுகாக்க சிலர் மன்னாரினுள் வர ஆரம்பித்தனர். இவ்வாறு வருபவர்களை இராணுவம் கலிமுண்டாயி மற்றும் திருக்குண்டால் போன்ற முகாம்களில் தங்கவைத்தனர். கடந்த பங்குனி மாதம் இச்செயற்பாடு ஆரம்பித்தது. தற்போதைக்கு கலிமுண்டாய் முகாமில் 500ற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். ஆனி மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருக்குண்டால் முகாமில் 100ற்கும் மேற்பட்டோர் வைக்கப்பட்டனர்.

இந்த முகாம்களிலுள்ள மக்கள் படையினரின் ஆதரவை நாடி வந்தவர்களா?

ஆம், மிகவும் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதனால் வந்தவர்கள் மூன்று தொடக்கம் நான்கு வயதையடைந்த சிறுவர்கள் தொடங்கி வயதுவந்த பெரியோர்கள்கூட குடும்பங்களாக இங்கிருக்கின்றனர். இவ்வனைவரினதும் சொந்தபந்தங்கள், நண்பர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இருக்கின்றனர். இருப்பினும் இவர்களைக்காண இம்மக்கள் செல்ல அனுமதிக்கப்படார். தற்பொழுது இம்மக்களின் கருத்து அவர்கள் இருந்த நிலையினைவிட அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனரென்பதாகும். தொழில்நிமித்தம் முகாம்களை விட்டு வெளியேறுவதாயின் அவர்கள் பாஸ் எடுக்கவேண்டியுள்ளது. பிணையாளர் ஒருவரை முகாமில் தங்கவைக்கவேண்டும். மீனவர்கள் மாலையானதுடன் தமது படகின் என்ஜின்களை இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும். இம்முகாம்கள் வேலி முட்கம்பிகளினால் பிற உலகிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் அரசினால் இவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளதா?

கலிமுண்டாய் முகாமில் அனைத்துத் தேவைப்பாடுகளும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் செய்யப்படுகின்றது. திரிக்குண்டால் முகாம் முக்கியமாக அரச கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது. உலக உணவுத்திட்ட அமைப்புமூலம் வழங்கப்படும் உணவு அரசினால் இம்முகாமிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த முகாமில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 126. இவர்கள் முகாம்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இருப்பினும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் தங்களது சில பாடங்களை கற்பதற்காக மன்னார் அல்லது வவுனியாவிற்கு செல்லவேண்டியிருந்தாலும் அரசு இதற்கு அனுமதி வழங்குவதில்லை. நோயாளர்கள்கூட தமது மருந்துகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பத்தில்கூட மன்னார் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதநிலை காணப்படுகிறது. (படையினர் அனுமதி வழங்குவதில்லை). முகாம்களில் சுகாதாரநிலைகூட நல்லநிலையிலில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 50 பாம்புகள்வீதம் முகாம்களில் அடித்துக்கொல்லப்படுகின்றன.

உங்களது கருத்துப்படி அரசு இவ்வாறு முகாம்களை அமைப்பதன் நோக்கமென்ன?

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முகாம்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கின்றனர். புதிய முகாம்களை ஆடி மாத்திலே அமைத்தனர். ஐக்கிய நாடுகளின் பிரசுரிக்கப்படாத அறிக்கையொன்றில் குறிப்பிட்டதற்கிணங்க அரசு தொடர்ந்து இவ்வாறான முகாம்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களுண்டென எச்சரித்திருக்கின்றனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் வவுனியாவிலுங்கூட இவ்வாறான முகாம்கள் அமைப்பதற்குரிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. அரசு வன்னியிலிருக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும்படி அழைத்து அவர்களை இந்த முகாம்களில் முடக்குகின்றனர். இந்த செயற்பாடு முற்றுமுழுதாகவும் அனைத்துலக மனிதஉரிமைக் கொள்கைகளுக்கெதிரான செயற்பாடாகும். இடம்பெயர்ந்தோர் தாம் விரும்பிய இடத்தில் வாழ உரிமையுடையவர்கள். அவர்கள் தமது குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து வாழும் உரிமையினை அரசு தடைசெய்துள்ளது. இவர்களுக்கெதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இவர்கள் முகாம்களில் கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ளவர்களின் சில பெற்றோர்கள் மன்னாரில் வாழ்கின்றனர். இருப்பினும் முகாமின் ஆதரவைத்தேடிவந்த மகன் தனது தாயைப்பார்க்கச் செல்லமுடியாத நிலையிலிருக்கின்றனர். இந்நிலை வெளியுலகிற்குத் தெரிவதில்லை. (அறிக்கையிடப்படுவதில்லை) முகாம்களினுள் சமூகசேவகர்களும், மதத்தலைவர்களும் மட்டும் தான் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அரசு இந்நிலைமையினை உலகத்திற்கு மறைக்க பெரிதும் முயற்சிக்கின்றது.

கலந்துரையாடல் - தாரா சிறீராம்


Wednesday, March 25, 2009

பயங்கரவாதமும் பயங்கரவாதியும்: வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லிற்கு (ஆக)


எனக்குத்தெரிந்த ஒரு நபர் ‘புபே’ (Buffet) என்ற சொல்லிற்குரிய கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார். “விரும்பியளவிற்குப் பகிர்ந்துண்ணுங்கள்”. உண்மையும் இதுதான் ‘புபே’ என்ற பிரெஞ்சுச் (French) சொல் இலங்கையில் புளக்கத்திற்கு வந்ததும் புகையிரத நிலையங்களில் காணப்பட்ட ‘புபே’ அனைத்தும் பவட் ஆகமாறியது. இதன்பின் உணவகங்களிலும், திருமண இல்லங்களிலும் ‘புபே’ பழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இருப்பினும் இச்சொல்லுக்குரிய சரியான மொழிபெயர்ப்பை சிங்களமொழியில் கொடுக்கக்கூடிய ஒருவர் இலங்கைப் பிரஜையாகிய சபாநாயகர் மாத்திரமே.

இதேபோன்றுதான் எமது மொழியுடன் சேர்ந்த இன்னுமொரு சொல் Terrorism மாகும். இது ஒரு லத்தீன் சொல்லாகும், பின் இது ஆங்கிலத்துடன் கலந்து எம்மிடம் புழக்கத்தில் வந்தவுடன் நாம் இதனை பயங்கரவாதமென்று அழைத்தோம். (Terror- பயங்கர, ism- வாதி Terrorism- பயங்கரவாதி) ‘புபே’ என்பதைப்போல் பயங்கரவாதத்தையும் தெளிவுபடுத்துவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். பயங்கரவாதத்தை விளக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. இதனால் இக்கடிதத்தைப் படிப்பவர் இவ்வாறு இதைக் குறிப்பிடுவர், “மடையர்களே சற்று உங்களை சூளவுள்ள நிலையினை அவதானியுங்கள், எமது நாட்டில் மாத்திரமல்ல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் எமக்குத் துணைநிற்கும் பாகிஸ்தானைக்கூட பயங்கரவாதம் அழித்துள்ளது. இதனால் இன்னமும் இதற்கென்று தனி விளக்கமும் வேண்டுமா? பயங்கரவாதமென்பது பயங்கரவாதம்தான்."

இருப்பினும், சற்று நிதானமாக யோசித்துப்பார்த்தால் உங்களால்கூட விளங்கக்கூடிய ஒரு விடயமென்னவென்றால், பயங்கரவாதத்திற்கென விளக்கமொன்று இல்லாதிருத்தல் இதன் தனித்துவமாகும். இதனால் பயங்கரவாதம் தொடர்பில் பேச ஆரம்பித்தோமானால் எமக்குக் கூறக்கூடிய ஒரு விடயம், இது தற்கொலைக்குண்டுகளையும், அப்பாவிப்பொதுமக்களின் உயிரைப் பிணையாகவைத்தலையும் குறிப்பிடும் ஒரு சொல்லல்ல.

நாம் மிகவும் இலேசான ஒரு மொழிபெயர்ப்பை/விளக்கத்தை எடுப்போமேயானால்; உதாரணமாக அரசியல் தகவலொன்றை பரிமாற்றுவதற்காக, வேண்டுமென்றே/கவனமின்றி (கவனயீனத்துடன்) பொதுமக்கள் (சிவில்) கொலைசெய்தல் அல்லது காயப்படுத்துதல் இல்லாவிடின் அவர்களது சொத்துக்களை பாரியளவில் சேதப்படுத்துதல் பயங்கரவாத வன்முறையென ஒருவரால் அனுமானிக்க முடிகிறது. தற்பொழுது இவ்வாறு இதை நோக்கினால் பயங்கரவாதமென்பது வன்முறையினைப் பயன்படுத்தும் ஒருமுறையாகும். அதாவது எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒருமுறையென்பதாகும். அதாவது எவரொருவர் விரும்பினால் தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காக வன்முறையினைத் தேர்ந்தெடுக்கும் எவராலும் பணன்படுத்தக்கூடிய ஒருமுறையாகும் … குறிப்பிட்டளவு படை (மிலிடரி) அல்லது அரசியல் மாற்றுமுறை சிலவற்றை தம்வசம் வைத்திருக்கும் பலவீனமான குழுவொன்றினால் பயன்படுத்தப்படும் ஒருமுறை. உதாரணமாக அல்கய்டா அல்லது ETAவை எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் இந்த முறையினாலேயே, மிகவும் சக்திவாய்ந்த ஒரு அமைப்பினாலும்கூட வன்முறையினைப் பயன்படுத்தும் முறையாக கையாளமுடியும். உதாரணமாக வேறு மிலிடரி முறைகளைப் பயன்படுத்தக்கூடிய கெரில்லாக்குழுவும், இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். சிவில் யுத்த நிலைமைகளின்போதும்கூட குழப்பங்களை ஏற்படுத்தும் குழுக்களால்கூட வேறு வழிமுறைகள் இருந்தபோதும்கூட இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். பலவீனமான அரசாங்கமொன்றிலிருக்கும் அவாவுடன் கூடிய அனைத்துக் குழுக்களும் மிலேச்சத்தனமான பல்வேறு முறைகளிடையே இம்முறையினை பயன்படுத்தலாம். உதாரணமாக சோமாலியாவை நினைவில் கொள்க.

இதேபோன்றுதான் இவ்வாறானதொரு அரசியல் வன்முறையினை அரசபடைகளால்கூட செயற்படுத்தமுடியும். 1985ல் பிரான்ஸ் நாட்டினால் கிறீன் பீஸ் அமைப்பிற்குரிய றேன்போ வொறியர் கப்பலை மூழ்கடித்தல், 1986ல் அமெரிக்கர்களால் லிபியாவின் ட்ரிபொலி நகரத்திற்கு குண்டுகளை வீசியமை என்பன அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முறைகளுக்குரிய உதாரணங்களாகும். அதேபோல் 2வது உலகப்போர் அண்மித்தபோது தோழபடைகளினால் ஜேர்மனின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டுவீசியமை, 1945ல் அமெரிக்காவால் ஜப்பானின் கிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களுக்கு அணுகுண்டுவீசியமை என்பன ஆயுதக் கலவரத்தின் பின்னணியில் வேறு வன்முறைகளையும் பயன்படுத்தும் அதேநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினை பயன்படுத்தும் செயல்களாகக் கூறமுடியும்.

இதனடிப்படையில் ‘பயங்கரவாதம்’ என்பது ஒருவிதத்தில் அரசியல் வன்முறையென்று பொருள்கோடல் செய்யப்படுகையில், இதனால் இது கட்டாயமாக ‘பிழையான’ ஒரு விடயமல்ல. ஏதாவதொரு செயலுக்காக ‘வானிலிருந்து குண்டுகளை வீசுதல்’ அல்லது படையெடுப்பின்போது அல்லது ‘சுற்றிவளைப்பு’ என்று கூறியவுடன் அச்செயல் ஒதுக்கப்படுவதில்லை என்பதைப்போல், இவ்வாறு பார்க்கும்போது அவ்செயல் அல்லது இச்செயற்பாடு பயங்கரவாத செயலாக குறிப்பிடுதல்மூலம் அச்செயற்பாட்டின் காரணத்திற்கான கலந்துரையாடலுக்கு பின்னணியினை அமைத்தலென்பதாகும்.

சரி, சரி இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கின்றேன் பயங்கரவாதமென்பதை நாம் இன்று பயன்படுத்துவது இங்கு குறிப்பிட்டதைப்போன்று, அதாவது இன்னுமொரு ‘அரசியல் வன்முறை’ என்றல்ல, முதலில் நாம் பயங்கரவாதமென்பது ‘வன்முறையினை பயன்படுத்தும் ஒருமுறையாக’ அல்லாமல் ஒருவிதமான நபர்கள் குழுவாகவும், இதனை ஒருவிதமான வழிமுறையாகவும் அல்ல. இது ஒருவிதமான யுத்த செயற்பாடாகும். ஒரு குறிப்பட்ட நபர் செய்யும் ஒரு செயற்பாடாக அல்ல. இதனை ஒருவிதமான நபராகக் காணப்பழகியுள்ளோம்.

இதனால் இப்பொழுதுள்ள பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாத குழுக்கள், பயங்கரவாக தலைவர்கள் இதே இவ்வாறானதொரு முறையில் இவ்வாறு ‘லேபல்’ ஒட்டுவதற்கு (பாகுபடுத்துதல்) யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்வதற்கு காட்சி அவசியமில்லை. ஏதாவதொரு குழு ‘பயங்கரவாதிகளாக’ பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பின் அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலிலும் ‘பயங்கரவாதிகளாகவே’ பாகுபடுத்த (லேபலிடுவதற்கு) இவர்கள் குறிப்பிட்ட செயலைச் செய்யவேண்டியதில்லை.

இரண்டாவதாக, சட்டரீதியில் இந்த பயங்கரவாதத்திற்கான பொருள்கோடல் நாம் ஏற்கனவே வழங்கியதைவிட விரிவாகவே உள்ளது. சட்டரீதியில் பயங்கரவாத்திற்கான பொருள்கோடலைப் பார்ப்போமானால் ‘சிவில் சமூகத்திற்கு தாக்குதலை மேற்கொள்ளல்’ என்பதற்கு அப்பால் சென்று சொத்துக்களுக்கெதிரான வன்முறை மற்றும் நாட்டின் அடிப்படை வசதிகளுக்கு (உட்கட்டமைப்பு வசதிகள்) ஏற்படுத்தப்படும் தாக்குதல்களையும் உள்ளடக்கும்விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சில சட்டமுறைகளின்கீழ் பாரியவகையில் சிவில் சட்டங்களை மீறும் செயற்பாடுகள்கூட ‘பயங்கரவாதம்’ என்ற கருப்பொருளுக்குள் அடக்கப்படுகின்றது.

Tuesday, March 24, 2009

தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றல் தடைசெய்யப்பட்டது


கடந்த 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதியன்று கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனி மாதம் 7ம் திகதி பொழுது விடிவதற்கும் முன்பாக ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பஸ்வண்டிகளுடன் லொட்ஜ்களைநோக்கி வந்திறங்கிய பாதுகாப்புப்படையினர், தமிழினத்தவர்களுக்கு சொந்தமான லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்புத்தரப்பினரால் கொண்டுவரப்பட்ட பஸ்வண்டிகளில் ஏறுவதற்கு வழங்கிய நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே. இவர்கள் மத்தியில் இருதய நோயாளிகள், மற்றும் பல்வேறு நோய்நொடிகளினால் பீடிக்கப்பட்டு மருத்துவத்தேவைக்காக வந்திருந்தவர்களும், கொலை அச்சுறுத்தல்களினால் தப்பியோடிவந்து மறைந்திருந்தவர்கள், ஓரிருநாட்களில் தமது திருமணத்திற்காக மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 300ற்கும் மேற்பட்டதாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஓரிருதினங்களுக்குமுன் அதாவது ஆனி மாதம் 1ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மாஅதிபர் கூறியதாவது, எவ்விதகாரணமுமின்றி கொழும்பில் தமிழினத்தவர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடாதென்பதாகும். இவ்வாறு எவ்விதகாரணமுமின்றி அல்லது எதுவும் கூறாமல் தமிழினத்தவர்களை மிகவுங்குறுகிய ஒரு நேரத்தினுள் கொழும்பிலிருந்து வெளியேற்றல் அவர்களது அடிப்படையுரிமையினை பாதிக்கும் செயலென ஊநவெநச கழச Pழடiஉல யுடவநசயெவiஎநள மூலம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இங்கு வழக்குத்தொடுநராக இருந்த (ஊPயுன்) கொள்கைகளுக்கான மத்தியநிலையத்தின் இயக்குனர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து அவர்கள் கூறியதற்கிணங்க, இவ்வாறு தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுதல் பிழையான ஒரு செயலென்பதுடன், சட்டத்திற்குமுரணான, மனிதஉரிமை மீறப்படும் ஒரு செயலுமாகுமென்பதாகும். இதனை கருத்திற்கொண்ட உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 8ம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துக் கூறியதாவது, அரசபாதுகாப்புப்படைமூலம், இம்மக்களின் அடிப்படை உரிமைகளாகிய 12(1), 12(2), 14(1), H என்பன மீறப்பட்டுள்ளதென்பதையும் விளக்கி நின்றது.

இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தவுடன் அரசினால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் அவர்களது தங்குமிடங்களுக்கு அழைத்துவரப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக அவர்கள் வெளியிட்ட செய்தியில், தமிழ் மக்களுக்கு இவ்வாறானதொரு அசாதாரணத்தினை செய்தால் தமது அரசு பாரிய குற்றமொன்றை இழைத்துள்ளதுடன், தான் அதற்காக மன்னிப்புக்கோருவதாகவும் அறிவித்திருந்தார்.

இதற்கிணங்க வழக்குத்தொடுநரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் வழக்கு விசாரணைக்காக ஆனி மாதம் 27ம் திகதி எடுத்துக்கொள்ளப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பல மாதங்களாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரால் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2008ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கிணங்க அரசியலமைப்பின் சரத்துக்களாகிய 11, 12(1), 12(2), 13(1), 13(2), 14(1), H அடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தமிழ் மக்கள் சார்பில் அரசினால் மீறப்பட்டுள்ளதென நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும் உயர்நீதிமன்றம் இனிவருங்காலங்களில், தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் தடைசெய்யும் விதத்தில் கட்டளையினை பிறப்பித்ததுடன் இங்கு அரசசார்பில் தோன்றிய சொலிசிட்ட ஜெனரல் பாலித்த பிரணாந்து அவர்கள் வருங்காலங்களில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற இடமளிக்கமாட்டாரென்று குறிப்பிட்டதுடன், இத்துடன் சேர்ந்த யாதெனும் ஒரு செயல் இடம்பெறமுன் நீதிமன்ற அனுமதியினைப் பெறுவாரெனவும் உறுதியளித்தார்.

இவ்வழக்கின் விஷேடத்துவம் யாதெனின் இந்நாட்டில் முதல்முறையாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சிறுபான்மை இனத்தவரொருவர் அடிப்படையுரிமை வழக்கொன்றை தொடுத்ததுடன், இதனை உயர்நீதிமன்றம் பொதுமக்கள் நலன் வழக்கொன்றாகக் கருதி விசாரணைசெய்ய அனுமதி வழங்கியமையாகும். இன்னுமொரு விஷேடத்துவம் யாதெனின், அரசசார்பற்ற நிறுவனமொன்று குடிமக்களின் மனிதஉரிமைமீறல் தொடர்பில் தலையிடுவதும், நீதிமன்ற செயற்பாடுகளில் உட்புகுவதும், இதன்காரணமாக தமிழ் மக்கள் சட்டத்திற்கு முரணான விதத்தில் வெளியேற்றல் தடைசெய்யப்பட்டதுமாகும்.

Monday, March 23, 2009

நாங்கள் அறியாத செஷ்

உங்களது பேச்சு பேச்சாற்றலில் சரியாக இருந்தாலும் அது உலகநியதியல்ல. தற்பொழுது அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கென நேர்மையாகச் செயற்படுகின்றது. இதற்கிடையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும்போது ஏற்படுவது என்னவெனில் தீவிரவாதத்தை தோற்கடிப்பது மந்தநிலைக்கு செல்வதாகும். மேற்குறிப்பிட்ட பதில் எனக்குக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்குமுன் க…….. நகரில் இடம்பெற்ற மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடலின் போதாகும்.

ஆயுதந்தாங்கிய குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மனிதஉரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரி;த்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கேள்வி அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது. கொலைகள், காணாமற்போதல்கள், கடத்தப்படல், சிறார்களை போரிலீடுபடுத்துதல், சித்திரவதைசெய்தல், சிவில் சமூகத்தினருக்கெதிராக யுத்தத்தாக்குதல்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் நிறுவனம் முன்வரவில்லையென்பதுடன், எவ்வித தண்டனையும் வழங்கப்படாமல் பயமில்லாமல் விரும்பியபடி குற்றச்செயல்கள் செய்வதற்கான வழிவகைகள் தோன்றியுள்ளதுடன், தேசிய மனிதஉரிமை ஆணைக்குழு தமக்கு சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட நான், எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டு பிரதேசமுட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அதிகாரமுடைய சர்வதேச மனிதஉரிமை செயற்திட்டமாகிய ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தொடர்பான உயர்தானிகரின் களக்காரியாலயத்தை இலங்கையில் நிறுவுதல் அவசியமென்பதனை, தேசிய மற்றும் சர்வதேச சங்கங்களினதும், பல மேற்கத்தேய நாடுகளின் கூட்டாகிய சர்வதேச சமூகத்தின் கருத்தும் இதுவென்பதனையும் நான் வலியுறுத்தினேன். குறிப்பிட்ட பதில் அதன் பிற்பாடே கிடைத்தது.

இதற்கு குறிப்பிட்டளவு ஒத்தான கருத்தை ஜெனிவாவில் இலங்கை முகவரான தயான் ஜயதிலக குறிப்பிட்டிருந்தார். அவரிற்கேற்ப யுத்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்படுதல் கடினம். வன்முறைகளடங்கிய யுத்தம் இடம்பெறும் ஒரு நாடு என்றவகையில் இலங்கை மனிதஉரிமையினைப் பாதுகாப்பது தொடர்பில் மிகவும் வரவேற்கத்தக்க செயற்பாடொன்றை செய்துள்ளது. முதலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, பிரபாகரனின் ஏகாதிபத்தியத்தின் கீழிருக்கும் தமிழர்களுட்பட வடக்குக், கிழக்குச் “சுதந்திரத்தை” பெற்று அதனை ஜனநாயக ஆட்சியின்கீழ் கொண்டுவந்தபின் கடந்தகால மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்பட எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறுவது இதுபோன்ற செயற்பாடுகளாகும்.

இருப்பினும் இந்த சபையின் உள்ளடக்கம் சாதாரண மக்களைக் கொண்டிருக்கவில்லை, பொலிசாரின் சித்திரவதைகளுக்கெதிராக மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களையும், மரணக்குழிகளைத் தோண்டி – கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்படி குரலெழுப்பியவர்களையும், தேர்தல் பிரசாரமென்றரீதியில் கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஒன்றுகூட்டிய, வீடுகளில், தொழில்ஸ்தாபனங்களில், பாதையில் வன்முறைகளுக்குட்படும் பெண்களுக்காக குரல்கொடுக்கும், சிறுவர்களை தேவையற்ற விடயங்களில் முன்நிறுத்துவதற்கெதிராக மட்டுமல்லாமல் கிழக்கிலிருந்து வடக்கிற்கு உறவுகளைக் காண்பதற்காக பயணஞ்செய்த ஆண்கள், மற்றும் பெண்களை உள்ளடக்கியிருந்தது. எனக்குப் பதில் கிடைத்தது தயானிடமிருந்தோ அல்லது வேறுயாராவது மஹிந்த சிந்தனையாளர்களிடமிருந்தோ அல்ல மனிதஉரிமை பாதுகாவலர் ஒருவரிடமிருந்தாகும். சபையிலிருந்த அனைவரும் அக்கருத்துடன் இணைந்தனரென்றால் அது அசாதாரணமாகும். இருப்பினும் குறிப்பிட்டளவு நபர்கள் அககருத்துடன் இணைந்திருந்தனரென்பது தெளிவானது எவ்வாறெனின் “அக்கதையிலும் உண்மையுள்ளது” என்று சிலர் குறிப்பிட்டதாலாகும்.

மனிதஉரிமை தொடர்பில் முழு உலகளாவிய பிரகடணனத்தில் குறிப்பிடுவதைப்போல் “கொடூர ஆட்சியும் அழுத்தங்களுக்கெதிராக இறுதி மாற்றுவழியான பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கவுள்ள ஒரேவழி சகலமக்களினதும் சகலமனிதஉரிமையினையும் சட்டத்தின்மூலம் பாதுகாத்தலாகும். இதனூடாக ஆயுதமேந்திய யுத்தத்திற்கு காரணமாகிய மனிதஉரிமை மீறப்படுவதுடன் யுத்தத்தின் காரணமாக மேலும் மனிதஉரிமை மீறல்களின் வேகம் அதிகரிக்கும். இதனால் செய்யக்கூடிய யுத்தத்தினுள் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்களைக் குறைப்பதற்கும், யுத்தத்திற்கு காரணமான மனிதஉரிமை மீறல்களை சரி செய்வதுமாகும்.

எமது பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட மனிதஉரிமை பாதுகாவலர்கள் இதனை அறியாது இருந்தவர்களல்ல. எனது கருத்து மிகவும் சரியானது என்று அவர்கள் குறிப்பிடக் காரணமாக அமைந்தது இதுவாகும். இருப்பினும் இப்பேச்சை இவ்வாறே ஏற்றுக்கொண்டால் கடந்தவாரம் நாங்கள் கதைத்த பிசாசின் கதையின் சபாநாயகரான எனது நண்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது பேச்சுக்களை மாற்றவும் நடைமுறையிலுள்ள நிலைமைகளுக்கெதிராக தோன்றவும் வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தெரிந்தவற்றை தெரியாதவிதத்தில் நடிப்பது உடலுக்கு சுகமானதாகும். வேறுவகையில் கூறுவதானால் இவர்கள் உண்மை நிலையினை நன்கறிவார்கள். இருந்தாலும் அதனை நம்புவதில்லை. இங்கு இவர்களது துணைக்கு வருவது எனது நண்பனின் துணைக்கு வந்த அதே பிசாசாகும். தமது குடும்பப் பிரச்சனைக்கு காரணமானது தமது மனைவியோ அல்லது பிற நபர்களோ அல்லது பணமோ அல்ல வீட்டில் குடிபுகுந்த ஒரு பிசாசு என்பதனை ஒரு சாத்திரி கூறியதனால் அவர் மனநிறைவடைந்ததுடன் அவர்கள் செய்யவேண்டிய விடயம் அந்தப் பிசாசை தேடிக்கண்டுபிடிப்பதாகும். தேசிய நண்பர்கள் சாத்திரிகளினால் கடந்தவாரம் அந்தப் பிசாசு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது கருத்திற்கேற்ப “இந்த எல்லாத் தோஷங்களுக்கும் காரணம் பிரபாகரனாகும். அவரை அழித்தவுடன் இந்தப் பிரச்சனையும் முடிவுக்குவரும்”. இந்தப் பூதத்தை அழிப்பதற்கான யாகம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய நண்பர்கள் மற்றும் மனிதஉரிமை பாதுகாவலர்களாகிய இருதரப்புமொன்றாக யாகத்தில் உட்கார்ந்திருப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு செலவுகளையும் தாங்கிக்கொள்ள தயாராகவுள்ளனர்.

பரக் ஒபாமா
பின்லாடன்மூலம்

பழக்கப்பட்ட கதைபோலுள்ளதா? நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்


மத்திய லண்டனில் தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெற்று ஆறு பேர் இறந்ததுடன், மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லண்டன் நகரத்தினுள் அரசியல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது தற்போதைக்கு தடைசெய்துள்ள பிரதமர் ஹபயாஸ் கோபூஷ், சட்டத்தினை அகற்றுமாறு கட்டளையிடுகின்றார் (கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்படி பொதுமக்கள் கட்டளையிட வழிசமைக்கும் சட்டம்). ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொலிஸ் ஆணையாளரின் கருத்தின்படி, 10000ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மிகவும் சுதந்திரமாக லண்டன் நகரத்தினுள் நடமாடுகின்றனரென்பதாகும். நகரைப் பாதுகாக்கும்முகமாக 50000ற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர், கால்வாய்களினுள் வெடிபொருட்கள் (வெடிப்படையும்) தீவிரவாதிகளினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமென்பதனை கண்டறியும்முகமாக பொலிஸின் மேற்பார்வையின்கீழ் விஷேட படையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராணியும் இந்நிலைமைதொடர்பில் கவனஞ்செலுத்துகின்றார். இத்தீவிரவாதிகளை கண்டஇடத்திலேயே தூக்கில்போட்டு கொலைசெய்யுமளவிற்கு தனது மனமும் மாறியுள்ளதாக ராணி குறிப்பிடுகின்றார். புத்திஜீவி ஒருவரின் கருத்தின்படி தீவிரவாதிகளின் நோக்கத்திற்கு பாரியளவில் துணைநிற்கும் அல்லது ஆதரவு வழங்கும் லண்டன் நகர பொதுமக்கள் இத்தாக்குதலினால் குழப்பமடைந்து பிற்போக்கான அரசின் துணையை நாடி நிற்கின்றது. இருப்பினும் தீவிரவாதத்தைமட்டுமன்றி, தீவிரவாத செயற்பாடுகளில் தாக்கத்தைச் செலுத்தும் அரசியல் அடிப்படைகளுக்கான பதிலைத் தேடுவதற்காக எதிர்கால பிரதமரின் நோக்கங்களை மாற்றியமைக்க இத்தாக்குதல் காரணமாக அமைந்ததென்பதனை காலங்கடந்தே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

இங்கு கூறப்பட்ட நடவடிக்கைகள்யாவும் நிஜமாகவே இடம்பெற்றவையாகும். ஆனால் இவை இந்நூற்றாண்டிலோ அல்லது கடந்தநூற்றாண்டிலோ இடம்பெற்றவையல்ல, இவை 1867ல் நடந்தவை. அன்றைய பிரதமராக இருந்தவர் பென்ஜமின் டிஸ்ராயேல் அன்றி ரோனி பிளேயர் அல்ல. அன்றைய நகரக பொலிஸ் ஆணையாளராக இருந்தவர் சிறிமத் இயன் பிளேயர் அல்லது சிறிமத் ஜோன் ஸ்டீவன்ஸோ அல்ல றிசர்ட் மென் என்பவரே. அன்றைய ராணியாக இருந்தவர் இரண்டாவது எலிசபெத் அன்றி விக்டோரியா ஆவார். அன்றைய பொதுமக்கள் புத்திஜீவியாக இருந்தவர் சொம்சகி அன்றி கால்மாக்ஸ் என்பவராவார். எதிர்கால பிரதமர் கோடன் பிறவுண் அன்றி கிளஸ்டன் என்பவரே. அன்றைய தீவிரவாதிகளாக இருந்தவர்கள் அல்கய்டா அன்றி அய்ரிஷ் பினியன்களாவர்.

கோனர் கர்ட்
மனிதஉரிமைகள் அழியாது நிலைத்திருக்குமா?

இடைவேளையின்பின் மீண்டும் உங்களுடன்


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின்பின் எம்மால் பேசமுடியாத ஒரு காலகட்டம் உருவாகியது. “பேசமுடியாத இடத்தில் அமைதிகாக்க வேண்டும்” என்ற வித்கஸ்டயின் என்பவரின் கருத்திற்கிணங்க “சமபிம தற்காலிகமாக அமைதிபேணியது”.

உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பேச்சுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், சிவில்சமூகம் போன்ற மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் அவசியமாகியது. அந்த அமைதியான காலகட்டத்தின்போது எமது சக்தியினையும், நேரத்தினையும் நாம் அவ்வாறானதொரு மக்கள் சக்தியினை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தினோம்.

தற்பொழுது நாம் மீண்டும் “சமபிம”வினை ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளோம்.

எமது நோக்கில் இலங்கை சமூகம் ஒரு திருப்புமுனையினை நோக்கி வந்தடைந்துள்ளது. இத்திருப்புமுனையின் ஆரம்பம் என்னவென்று எமக்குத் தெரியாது. இருப்பினும் இலங்கையின் அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் தத்துவஞானிகள், ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் ஒடுக்கப்பட்ட (அடைபட்ட) ஒரு நிலையினை அடைந்துள்ளதுடன் தமது தூதுவர் கடமையினைப்பற்றி மீண்டும் சிந்திக்கவேண்டிய தேவைப்பாடொன்று உருவாகியுள்ளது.

உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரியளவில் மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. நடைமுறையிலுள்ள லிபரல் குடியரசு சமூக அமைப்பென்று அழைக்கப்படும் பணம்படைத்த சமூகமுறை வரலாற்றில் முடிவென்பதுடன், தொன்றுதொட்டு நடைமுறையிலிருக்கும் இச்சமூக அமைப்புக்கோ அல்லது அச்சமூக அமைப்பினூடாக தேசிய அரசிற்கு வழங்கப்படும் அறிவூட்டல்கள் அல்லது சவாலிடும் மடையர்கள் என்போர் கூட்டித்தள்ளப்படுவதுடன் இதுகாலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையென்பதுடன், வடக்கில் யுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் முடிவடைந்து, சமாதானம் உருவாகுவதுடன், தார் வீதிகள் காபட் வீதிகளாக மாறி எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஆயுதங்களைக் களைந்து தபால் சேவையாக உருமாறும் (Post LTTE) என்று தம்பட்டமடித்தவர்களும் இவ் புது மாற்றம் உலகிற்கும், தெற்காசிய பிரதேசத்திற்கும் மாத்திரமன்றி இலங்கையிலும் எவ்வாறு தாக்கஞ்செலுத்துமென்பதனை யோசிக்கவேண்டியிருக்கும்.

நன்றாக ஓட்டங்களைக் குவித்த சிறந்த ஓட்டங்களுடன் திகழ்ந்த ஒரு கிறிக்கெற் வீரர் தொடர்ச்சியாக கீழ்மட்டத்தை (தோல்வியடைதல்) நோக்கி செல்லும்போது அவருடன் சேர்ந்து அவரது ரசிகர்களும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மனைவி, ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் போன்று அனைவரும் குழப்பமடைவர் (சோர்ந்துபோதல்). இவ்வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வெளிவர தனக்குப் பழக்கப்பட்ட (தனது பாங்கிலான) விதத்தில் ஓட்டங்களை குவிக்க இவ்வீரர் முயற்சி செய்தபோதிலும் அதன் பலன் மீண்டும் தோல்வியையே அடைந்தது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அவரது பயிற்றுவிப்பாளர்கள் வீரனுக்கு வழங்கும் அறிவுரை என்னவென்றால், தான் கடந்த காலங்களில் விருத்திசெய்த மனவலிமையினை சற்று மறந்து மீண்டும் கிறிக்கெற் விளையாட்டினை ஆரம்பத்தில் கற்கும்போது பின்பற்றிய முறைகளை கடைப்பிடிக்கும்படியாகும். அதாவது “Back to the Basic” என்பதாகும்.

எமது கருத்து இலங்கையின் சமூகம் தம்மைப்பற்றி புதிதாக யோசிக்க வேண்டுமென்பதாகும். இதற்காக மீண்டும் ஆரம்பப்படிமுறைகளை நோக்கிப்பயணிக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் மனிதஉரிமை மற்றும் குடியரசைப் பாதுகாப்பதற்காக “சமபிம” மூலம் முன்னெடுத்துச்செல்லவிருந்த கலந்துரையாடல்களைக்கூட இதன் காரணமாக மீண்டும் ஆரம்ப நிலைக்குள் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் கலந்துரையாடலின்போது தினமும் எழும் பிரச்சனைகளிலிருந்து அப்பால் சென்று எமது சமூகத்தின் தேவைப்பாடுகளை இனங்காண வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் எம்முடன் இணைந்திருந்து எமக்கு உதவிய “சமபிம” வாசகர்கள் இந்தத் தளம்பல் நிலையினால் சற்று நிலைகுலைந்திருக்கலாம். இருப்பினும் எம்மால் கூறக்கூடிய ஒன்று சற்றுக் குழப்பமடையாமல் இன்னும் சில வாரங்கள் எம்முடன் இணைந்திருக்கம் படியாகும்.

தங்களது எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் எமக்கு எழுதியனுப்புவது எம்மை மகிழ்ச்சியிலாழ்த்தும்.
பத்திரிகை ஆசிரியர்

சமபிம
றயிட்ஸ் நவ்
24/13விஜயபா ஒழுங்கை
நாவல வீதி
நுகேகொடை
மேலதிக விபரங்களுக்கு 0777342834

Monday, October 27, 2008

சிங்கத்தின் வாயிலுள்ள மணங்களைப்பற்றி முயலிடம் கேட்பதைப்போல்


ஒரேயொரு ஊரில் காட்டில் ராஜாவாக சிங்கம் தெரிவுசெய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் காட்டில் அரசன் சிங்கமென்பதால் இதனை பழையகதையென்று நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும் இந்த சிங்கம் வழமையாகவே மீருகங்களைக் கொன்று பச்சையாக உண்டுவிட்டபின் தமக்குக்கீழுள்ள பொதுமக்களிடம் தனது வாயின் துர்நாற்றத்தைப் பற்றி விசாரிப்பது வழமையாகவே இருந்தது. ஒரு நாள் சிங்கம் இக்கேள்வியை முயலிடம் கேட்டது முயல் முகங்கொடுத்த நிலைமை பரிதாபமாக இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்து துர்நாற்றமெழுவதாகக் கூறினால் சிங்கத்தை ஏழனஞ் செய்வதாகப்போய்விடும்இ இதனால் முயலிற்கு மரணதண்டனை வழங்கப்படும். சிங்கத்தின் வாய் நறுமணமுள்ளததெனக் கூறினால் பொய்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரணம் சம்பவிக்கப்படும். இதனால் முயல் தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறியவிடயமென்னவெனில் தற்பொழுது தடிமல் இருப்பதால் மணங்குணந் தெரியாமலுள்ளது எனக்கூறி தன்னை காப்பாற்றிக்கொண்டது.

இலங்கை பேத்ல்யூராவறு

மட்டக்களப்பில் மாகாணசபைத் தேர்தல் பங்குனி மாதம் 10ம் திகதி இடம்பெற நியமிக்கப்பட்டிருந்தது. கடத்தல், கப்பம்பெறல், காணாமற்போதல், பிள்ளைகளை யுத்தத்தில் இணைத்துக்கொள்ளல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பினும் ஆயதங்களுடன் பிரசித்தியாக நடமாடுவதற்கும்இ தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டோம் என்ற எண்ணத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நிலைமை இருப்பினும், ஆயுதங்களைக் கைவிடுமெண்ணம் இல்லாமல் திரியும் ஒரு சிறிய கூட்டமாக இயங்கும் ஓட்டுக் குழுவாகிய பிள்ளையான் குழுவென்று அழைக்கப்படும் ரி.எம்.வி.பி. குழு ஒரு வீரராவார். இவர்களுடன் இணைந்து 17வது அரசியலமைப்பைச் சீர்திருத்தஞ் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒழிக்கு சகல சுயாதீன நிறுவனங்களையும் தமக்கேற்ற விதத்தில் செயற்படுத்த தமது செயற்பாடுகளை வெளிப்படையாகச் செயற்படுத்துவது ஜனாதிபதியின் தலைமையின் கீழுள்ள ஒரு குழுவாகும் அல்லது நிறுவனமாகும். (இந்தக் குழுவிற்கு தற்போதுள்ள கட்சிகளின் எண்ணிக்கையினை சரியாகக் குறிப்பிடுபவர்களுக்கு இலவசமாக பங்கொக் சென்றுவர பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது). இவ்விரு தரப்பினரும் ஒன்றாகக்கூடி போட்டியிடும்போது இவற்றுடன் இணைந்து போட்டியிட வருவது அரசின் பங்காளரான EPDP கட்சியும் அரசின் இராணுவத்துடன் மிகநெருங்கி செயற்படும் EPRLF (பத்மநாபக் குழு) உம் ரெ.லோ குழுவுமாகும். இதற்கெதிராகப் போட்டியிடும் கட்சியாக இயங்குவது அரசிலிருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் காங்கிரசாகும்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

இவ்வாறான ஒரு பின்ணண்pயில் தேர்தல் கண்காணிப்பு Hiacce வான் ஒன்றில் கொடியொன்றினை ஏந்தியவண்ணம் ஒவ்வொரு வீதியாகச் செல்வதேயொழிய வேறொன்றுமில்லை. TNA மற்றும் UNP ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உத்தரவாதமில்லாத நிலையில், தேர்தலில் போட்டியிடாமலிருக்கும் சூழ்நிலையில், தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு பிரதேசத்தில் பொதுமக்கள் கூட்டமைப்பில் முகவர்கள் அல்லது பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளுதல் இலேசான காரியமல்ல, கஷ்டமாக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டால் தேர்தலின்பின் அவர்களது பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித உத்தரவாதமும் வழங்கமுடியாது. ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களினால் செய்யப்படும் தேர்தல் வன்முறை செயற்பாடுகளினால் மற்றும் துஷ்பிரயோக செயற்பாடுகளுக்கெதிராக துணிச்சலுடன் செயற்படும் நபர்களுக்கேற்படப்போகும் துர்ப்பாக்கியமான நிலையினைப் புரிந்துகொள்ளல் கஷ்டமான விடயமல்ல. இப்பொழுது கிழக்குப் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டு வன்னிக்காட்டில் அடைக்கப்பட்டுள்ளனரென்று குறிப்பிடப்படும் LTTE குழுவினரும் தேர்தலுக்கெதிராக ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளதால் மேற்பார்வையாளர்களுக்கேற்படும் பாதிப்பை LTTEஇன் கணக்கிலும் இலகுவாக வரவு வைக்கக்கூடியதாக இருக்கும்.
இத்தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு தேவையான சிறந்த ஒரு சூழ்நிலை இல்லையென்பதனை தெளிவாகக் கணக்கிட்டு அதனை வெளிப்படுத்திய தேர்தல் வன்முறைகள் மேற்பார்வை நிலையம் (CMEV) தேர்தலை மேற்பார்வை செய்வதிலிருந்து விலகிக்கொண்டது. இருப்பினும் சிவில் சமூகத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதான தேர்தல் மேற்பார்வை குழுவாகிய PAFFREL (பவரல்) நிலையம் தேர்தலை மேற்பார்வை செய்தது.

கண்காணிர்பாளர்களின் காட்சி அல்லது நடிப்பு

பொலிஸிற்கே முறைப்பாடு செய்வதற்கே பொதுமக்கள் முன்வராதபோது, தேர்தல் கண்காணிப்பு நடமாடும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் முறைப்பாடு செய்வார்களென்றெண்ணுவது பைத்தியகாரத்தனமான ஒரு விடயமாகும். இதனால் மேற்பார்வையாளர்களால் அதிகபட்சமா செய்யக்கூடியது, பொலிஸிற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையின்மீது அறிக்கை சமர்ப்பிப்பதாகும். முறைப்பாடுகள் குறைவாகக் காணப்படின் தேர்தல் அமைதியாகவும், சமாதானமாகவும், சாதாரணமானதாக இருக்குமென்பது இதன் கருத்தாகும். இவ்வாறான ஒரு தேர்தலின்போது வேட்பாளர்கள் இடம்பெறுவது மிருகங்களைக் கொன்று உணவாக உண்ணும் சிங்கத்தின் வாயின் மணத்தை அனுபவிக்கச்சொல்லும் முயலின் நிலையாகும். முயலைப்போன்றே மட்டக்களப்பில் தேர்தலிடுவோரின் நிலையென்னவெனில் தமக்கு இந்நாட்களில் தடிமல் ஏற்பட்டுள்ளதால் மணங்குணம் அறியமுடியாமலுள்ளதென்றுகூறி தப்பிக் கொள்வதாகும். தேர்தல் கண்காணிப்பாளர்களால் உயர்ந்தபட்சமாக செய்யக்கூடியது, சிங்கத்தின் வாயில் இறந்த உடலின் துர்நாற்றம் வீசுகிறதென்று எந்தவொரு முயலும் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் சிங்கத்தின் வாய் மணக்கவில்லையென்று பக்கச்சார்பாக பிரச்சாரித்து அறிக்கையிடுவதாகும்.

Back to HOME page....

வடக்கில் கிளைமோர் வைக்கும் சுமணசிறி தம்பியும் கிழக்கில் தற்கொலை செய்துகொள்ளும் செல்லம்மா தம்பியும்

மன்னாரில் வசிக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைகழிவது யுத்தத்தின் மத்தியிலும் வாழ்வது பாதுகாப்பற்ற நிலையிலுமாகும். அவளது கடின வாழ்க்கைக்கோலம் புத்தளத்தில் வசிக்கும் இளைஞனுக்கு புரியாத ஒரு புதிராகும். வேறுவிதமாகக் கூறினால் வடக்கில் தங்கை செல்லம்மா படும் அவதியினை கிழக்கிலிருக்கும் தம்பி சுமணசிறிக்குப் புரியாது.

இதனை செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை சாதாரணமாக மூன்று டிரக் இன் கீழ் அடக்குவர்.


முதலாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினரிடையே இணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை.


இரண்டாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினருக்கேற்ற சமூகத்துடன் ஒன்றிணைந்திருக்கும் அறிவாளிகள் மற்றும் கலைஞர்கள் போன்றோருக்கிடையில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


மூன்றாவது டிரக் - யுத்தத்திலீடுபட்டுள்ள தரப்பினருக்கேற்ப சமூகத்திலுள்ள சாதாரண பொதுமக்கள் மத்தியில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரிற்கேற்ற விஷேடமாக இரண்டாவது பகுதியினரிற்காக செய்யப்பட்ட முயற்சி யாதெனில் தங்கை செல்லம்மா மற்றும் தம்பி நடராஜா அனுபவித்த கஷ்டங்களை தம்பி சுமணசிறிக்கும் செனெஹெலதாவிற்கும் விளக்கிக் கொடுத்தலாம் அல்லது விளக்குதலாகும். இதற்காக கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி யாத்திரிகைகள், கண்காட்சிகள், செயற்திட்டங்கள், பேச்சுவார்த்தைகள், விளக்கேற்றல், மெழுகுதிரி ஏற்றல், கொடியேற்றல் இவ்வாறு பல்வேறு செயற்பாடுகள் ஊரூராக செயற்படுத்தப்பட்டது. இச்செயற்பாடுகளின் மூலநோக்கம் சமூகத்தை தெளிவுபடுத்துவதாகும். (Awareness Raising). இதற்காக அதிகபட்டசமான விடயங்கள் சேகரிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது, அச்சடிக்கப்பட்டது, பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. இச்செயற்பாட்டின்மூலம் நேரடியாகவே பலாபலன்களை பெற்றவர்களிடையே மொழிபெயர்ப்பாளர்கள், அச்சடிப்போர் மற்றும் சிறு கடைகளை தெருவோரத்தில் அடங்குவர். (பார்சல் சுற்றுவதற்காக பத்திரிகைகளைப் பயன்படுத்தினர்).


சமாதானம் முடிவுக்கு வந்ததும் யுத்தம் மீண்டும் ஆரம்பமானது. இதன்போது மூன்று பிரிவினருக்குமுரிய செயற்பாடுகள் முடக்கப்பட்டதுடன் சமாதானமும் மழுங்கியதும் வெளிநாட்டுப் பறவைகளும் பறந்து சென்றன. சுமாதானப் பாடலை இசைத்த தேசியப் பறவைகளும் யுத்தப் பாடல்களை பாடத்தொடங்கின. நாங்கள் யுத்தகாலத்திலிருக்கும் தங்கை செனெஹெலதாவிடம் மன்னாரிலிருக்கும் தம்பி நடராஜாவின் இன்னல் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் கேள்வியெழுப்பினால் எமக்குக் கிடைக்கும் பதில் என்னவாக அமையும்?


தம்பி நடராஜாவின் கஷ்டங்களை அனுபவிப்பது யுத்தத்தினால், அதிலிருந்து தப்பி நடராஜாவை பாதுகாப்பதாயின் பிரபாகரனை இல்லாதொழிக்க வேண்டுமென்றும் இதனால் தம்பி நடராஜாவுக்கு கௌரவமான இறப்பைப் பெற்றுக்கொடுப்பதாயின் யுத்தத்திலீடுபட வேண்டுமென்றும் தங்கை செனெஹெலதா குறிப்பிடுகின்றார். இவ் யுத்தத்தில் தற்பொழுது புலி தரப்பினருடன் இணைந்துள்ள தம்பி நடராஜாவின் அண்ணனை கொலைசெய்ய நேரிடுமென்றும், இதனால் இவர்களது உறவினர்களை மதவாச்சியை தாண்ட அனுமதிக்கக் கூடாதென்றும், கொழும்யிற்கு வந்துள்ள நடராஜாவின் மச்சானைக் கைதுசெய்து தொடர்ந்து தடுத்து வைக்கவேண்டுமென்றும், நடராஜாவின் குடும்ப அங்கத்தவர்களை தமது பிறப்பிடத்தை விட்டுச்சென்று முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகுமென்பது அவனது பதிலாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்


‘பெயரைச் சொல்லுங்கள்.‘
‘படாசாரா‘
‘முழுப்பெயர்?‘
‘படாசாரா தம்பிமுத்து‘
‘என்ன நடந்தது?‘
‘என்னுடைய மகனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’
‘யார் செய்தார்கள்?‘
‘…………………‘
‘யார் சுட்டார்கள்?
‘மகனது குழந்தைகள் மூவரையும் நான்தான் பராமரித்து வருகின்றேன்.
ஏன்னையும் கொன்று விடுவார்கள்..’
‘நான் கேட்பது சுட்டவர்களைக் கண்டீர்களா?’
‘ஆம்’
‘எனவே யார் சுட்டது?’
‘இறந்தவர் இறந்து போய்விட்டார். புதைத்துவிட்டோம். மூன்று குழந்தைகளையும்
வாழவைப்பதற்கு ஒரு தொழில் கிடைத்தால்’
‘தங்களது கணவர்?’
‘அவர் இறந்து 18 வருடங்களாகின்றது’
‘தீடீர் மரணம்?’
‘ஆம்’
‘காரணம்?’
‘சுட்டுக்கொன்றார்கள்இ நான்கு நாட்கழுக்குப்பின் உடலைக் கண்டுபிடித்தோம்.
அரைவாசி எரிந்த நிலையில்’
‘யார் கொலை செய்தார்கள்?’
‘……………………..’
‘நான் கேட்பது யார் கொலை செய்தார்களென்று?’
‘அப்பா மரணிக்கும்பொழுது மகனுக்கு 10 வயதுஇ மகனை கஷ்டப்பட்டுப் படிப்பித்தேன். அவர்தான் எங்களை பராமரித்தது’
‘மகனின் மரணத்தின் தொடர்பில் பொலிஸிற்கு வாக்குமூலம் கொடுத்தீர்களா?’
‘ஆம்’
‘எங்களால் உங்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்து உதவமுடியும். சாட்சி சொல்ல விருப்பமா?’
‘………………………’
‘சர்வதேச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் தகவல்களை அனுப்பமுடியும்’
‘மகனின் இளைய மகனுக்கு ஐந்து வயதாகின்றது. இன்னுமொரு 10 வருடங்களின்பின் அவனையும் கொண்டுசென்று சுட்டுக்கொன்று விடுவார்களோ தெரியவில்லை. இங்கு மிஞ்சுவது பெண்கள் மாத்திரமே’
‘படாசாராஇ நான் கேட்பது ஒரு விடயம்இ நீங்கள் கூறுவது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’
‘ஐயா நான் கூறுவது ஒரு விடயம்இ நீங்கள் கேட்பது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’

பரக் ஒபாமா பின்லாடன் மூலம்

Back to HOME Page....

Wednesday, October 8, 2008

எல்லா குற்றங்களுக்கும் மரணம்தான் தண்டனை

7ம் நூற்றாண்டில் ட்ரக்கோ என்பவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின்கீழ் எல்லா குற்றங்களுக்குமான தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அலைந்து திரிதல், மரக்கறி, பழங்களை களவாடுதல் போன்றவற்றுடன் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பொழுது சிறுகுற்றங்களுக்கும் பாரியகுற்றங்களுக்கும் மரணதண்டனை விதிப்பது பாரபட்சம் என்ற கருத்து எழுந்தபோது ட்ரக்கோ அதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.


ட்ரக்கோ கூறிய விதம்


“சிறுகுற்றங்களுக்கும் மரணதண்டனையே உகந்தது. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனையைவிட மேலான தண்டனை இல்லாதபடியினால் அக்குற்றங்களுக்கும் மரணதண்டனையே அங்கீகரிக்கின்றேன்”



மனிதனை சட்டத்தின்கீழ் கைதுசெய்வதற்கும், மாட்டை கொலைசெய்வதற்கு கொண்டுசெல்வதற்குமிடையில் தெளிவான வித்தியாசமுண்டு. லிபரல் அரசின்கீழ் (இலகுவான) இன்று வாழும் மனிதர்கள் ட்ரக்கோ காலகட்டத்தில் வாழ்ந்ததைவிட அதிஸ்டசாலிகள் என்று எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்படுவதும், தடுத்துவைக்கப்படுவதும் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாகும். சுதந்திர சமூகத்தில் இவ்வாறு சட்டத்தின்மூலம் மட்டுமே செய்யமுடியும். அவ்வாறு இல்லாமல் சுதந்திரத்தை மட்டுப்படுத்துதல் என்பது உரிமையை கட்டுப்படுத்துவதாகும். இக்கருத்தின்படி தேவையற்றவிதத்தில் மனிதர்களை கைதுசெய்து தடுத்துவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசினை விபரிப்பதாயின் அவ்வரசை சுதந்திர அரசு என்று கூறமுடியாது. அதனை அதிகாரமுடைய அரசு என்றே அழைக்கவேண்டும்.



புத்தகத்தில் உள்ளவிதம்



நேரத்திற்கு மழை பெய்கிறது, நேரத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது சுதந்திர, சோசலிச, ஜனனாயக அரசின் கீழ் வாழுகின்றோம் என்று எண்ணும் மக்களுக்கு அவர்களது உரிமையும் சிறந்ததாகவே தெரிகிறது. சட்டத்திற்கு அடிபணிந்தே இச்சுதந்திர அரசு செயற்படுவதாக இம்மக்கள் எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்பட காரணம் இருக்கவேண்டும். கைதுசெய்யப்பட்டவுடன் உறவினர்களுக்கு ஒரு பற்றுசீட்டின்மூலம் அதனை தெரியப்படுத்தவேண்டும். அல்லது வேறு எந்த வகையிலாவது கைதினை தெரியப்படுத்தவேண்டும். சித்திரவதை செய்தல் முழுமையா தடைசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்து ஆஜர்படுத்தாமல் தடுத்துவைத்தல் ஒரு குறிப்பட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின், மனித சுதந்திரத்தை பாதிக்காதவிதத்தில் அரசின் செயற்பாடு சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டதாக இம்மக்கள் எண்ணுகின்றனர்.



மேற்குறிப்பிட்ட விதத்திற்கு மாறாக ஒருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்டுவைக்கப்படுவாராயின் அது மனிதஉரிமையினைமீறும் செயற்பாடு என மக்கள் எண்ணுகின்றனர். இதன்போது இச்செயற்பாட்டை நீதிமன்றத்திற்கு முன் கொண்டுசென்று தேவையற்றவிதத்தில் தடுத்து வைக்கப்பட்டவரை விடுதலை செய்து அவரது உரிமையினை பாதுகாப்பதுடன் சட்டத்தை கையிலைடுக்கும் அலுவலருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று இம்மக்கள் எண்ணுகின்றனர்.



வேலை செய்யப்படும் விதம்



இச்சந்தர்ப்பத்திலே மக்கள் பாரிய இழப்பை எதிர்கொள்கின்றனர். இதன்போதுதான் இவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டம்இ அவசரகாலச்சட்டம் என்பவற்றை காணுகின்றனர். அத்துடன் இம்மக்கள் பின்வருவனவற்றையும் உணர்கின்றனர்.



சாதாரண சட்டத்தின்கீழ் மக்களைப் பாதுகாக்க அரசின்மீது சுமத்தப்பட்ட மட்டுப்பாடுகள் பல பயங்கரவாதத்தை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களின்மூலம் நேர் எதிர் மறையாக்கப்பட்டுள்ளது. இப்பயங்கரவாத சட்டங்களானது நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்களை எந்தவித குற்றமுமின்றி நீண்ட காலத்திற்கு மனிதாபிமானமற்ற கட்டளைகளின் பிரகாரம் தடுத்துவைத்தலை சட்டரீதியாக்கயுள்ளது.



நாம் எனது உரிமைகளை எமக்கு எடுத்து கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றோம். எனவே தான் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தமுடியுமென அவர் கூறினார்.



செய்யதக்கவை



இந்நிலைமையின்கீழ் பொதுமக்களுக்கு இரண்டு வழிமுறைகளுண்டு. ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்தவர்களுக்கெதிராக ஏதம் முறைப்பாடுகளிருப்பின் அவர்களுக்கெதிராக சாதாரண சட்டத்தின்கீழ் தொழிற்படும் வண்ணமும் முறைப்பாடு இருப்பின் ஆஜர்படுத்தும்படியும் இல்லாவிடின் அவர்களை விடுதலை செய்யும்படியும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன் அத்துடன் நிறுத்தாது மனிதசுதந்திரத்தை மட்டுப்படுத்த வழிசெய்யும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டம் மற்றும் அதற்கேற்ற சமமான விதிகள் அடங்கிய அவசரகாலச்சட்டம்போன்ற கொடூரமான சட்டங்களை செயற்பாட்டிலிருந்து நிறுத்தும்வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கலாம்.



இரண்டாவது வழிமுறை குடியரசு “நாங்கள்” மற்றும் தீவிரவாதி “மற்றைய நபர்” என்ற இருவர் மத்தியில் தெளிவான பிரிவினை ஏற்படுத்தல். இதன்போது எம்மை இச்சந்தர்ப்பத்தில் த செயற்பபாதிப்பது சாதாரண சட்டம் என்பதுடன் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டும் ரக்கோனியானு சட்டம் உகந்ததென எண்ணி மனசை தேற்றிக்கொள்ள முடியும். இக்கருத்துகளுக்கேற்ப சென்று, தீவிரவாதத் தடுப்புச் சட்டம் அரசின்மூலம் தீவிரவாதிகளுக்கு மாத்திரம் ஏற்புடையதாக்கியதால் கைதுசெய்யப்பட்டவர்கள் சில சந்தர்ப்பங்களில் தீவிரவாதிகளென்பது யாருக்குத் தெரியுமென்று கூறிக்கொண்டு அவர்கள்து வேலையை மாத்திரம் செய்துகொள்வர்.



டேய் நாங்களும் மனிதர்கள்தான்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவரது பிரதான கொள்ளை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகும். இலிங்கனின் எதிர்த்தரப்பு நீதியரசராக இருந்தவர் டக்லஸ் என்பவராவார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக செயற்பட்ட இலிங்கனின் கருத்துக்கு இவர் எதிர்ப்பாக இருந்தார்.

அடிமைத்தனத்தின் பௌதீக தோற்றம்

எண்ணக்கருஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களுள் பலர் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்த விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்காக விவசாயிகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதென்பது கிழக்கமெரிக்காவின் பாரிய விவசாய நிலங்கள் அதன் வாழ்வாதாரங்களை இழப்பதென்பதாகும். இதற்கப்பால் அம்மக்கள் சுதந்திரக்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்குப்பிராந்தியத்தில் பொதுமக்களின் தராதரத்தில் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த விடயமென்னவெனில் சுதந்திர ஆபிரிக்காவின் அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட வளர்ச்சியாகும். இது அடிமைத்தனத்தினை மேலும் மேலோங்கச்செய்தது.

அடிமைத்தனத்தினை ஒழிப்பது தொடர்பிலான யோசனையின் பௌதீக எண்ணக்கருவை வெளியிட்டது வடபகுதி விவசாய மக்கள் முகங்கொடுத்த பிரச்சனையாகும். அடிமைத்தனமென்பது “சட்டரீதியானதாக” இருப்பினும் அம்மனிதாபிமானமற்ற வாழ்க்கைக்கோலத்தின் கொள்கைகளின்கீழ் மேற்கொண்டும் வாழ்வதை எதிர்த்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் அவர்களது உயிர்களைக்கூட மதியாது அடிமைகளாக வைத்திருப்பவர்களது பிடிpயிலிருந்து தப்பி வடபகுதிக்குச் சென்று குடியேறுவதற்கான காரணம் இதுவாகும். இதன் காரணமாக வடபகுதிகளில் மக்களின் செறிவு விஷேடமாக நகரப்பகுதிகளில் பொதுமக்களின் செறிவு அதிகரித்ததுடன் ஆபிரிக்க அமெரிக்கர்கள் போன்ற சட்டவிரோத குடிமக்கள் சேவை குறைந்த ஊதியத்துடன் பெற தொழில்வழங்குனர்கள் முன்வந்ததால் வெள்ளையினத்து அமெரிக்கர்களை தொழிலுக்கமர்த்துவதில் கட்டுப்பாடொன்று நிலவியது அல்லது குறைவொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. அடிமைத்தனம் சட்டரீதியாக இருந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடிவந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்ரீதியானவர்களாக பதிவுசெய்யப்பட முடியாமலிருந்ததன் காரணத்தினால் அடிமைத்தனத்தையொழிப்பது தொடர்பில் சட்டங்கொண்டுவரப்படல் அவசியமானதாகும்.

பரிசுத்த எண்ணக்கரு

இருப்பினும் இவ் பௌதீக எண்ணக்கருவிற்குப்பதிலாக இவ்விவாதத்தில் பரிசுத்த எண்ணக்கருவும் நிலவியது. ஆபிரகாம் லிங்கனின் விவாதமென்னவெனில் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பில் குறிப்பிட்டதைப்போன்று “அனைத்து மக்களும் சமமென்பதையும்இ இதனால் சமமாக கவனிப்புக்கும் உரித்துடையவர்களாவர்” என்பதனையும் விவாதித்திருந்தார். இவ்வாறு குறிப்பிட்டுடிருப்பதனால் சுதந்திர மக்கள் மற்றும் அடிமைகளென்றவகையில் இரு பிரிவினரை நடத்துதல் அசாதாரணனெ;பதாகும் என்பதுடன் பிழையெனவும் வலியுறுத்தினார். அனைவரும் சமமான விதத்தில் படைக்கப்பட்டுள்ளனரென்பது கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு படிப்பினையென்பதனால் இவ்வாதம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையத் தொடங்கியது.
தற்போது எதிர்த்தரப்பை ஆதரிப்பவரான டக்ளஸ் பாரிய சிக்கலினை எதிர்நோக்கினார். “அனைத்து மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற எண்ணக்கருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இவரால் முடியாதுள்ளது. மறுபுறத்தில் இது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்களால் குறிப்பிட்ட விடயமாகும். (இலங்கை போன்றல்ல அமெரிக்க அரசியலமைப்பை மீற ஒருவரும் முன்வருவதில்லை அல்லது ஒருவருக்கும் தைரியமில்லை. மறுபுறத்தில் அது கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கொள்கையினை கற்றுக்கொடுப்பதாகவுள்ளது.

மாவீரரின் பிரச்சனை

இதன்தோற்றம் எவ்வாறெனின் எலார அரசைத் தோற்கடித்து அனுராபுரத்தைக் கைப்பற்றி இலங்கையை ஒருவரது ஆட்சியின்கீழ் கொண்டுவந்து துடுகமுனு அரசன் தமது யுத்தத்தினால் இறந்த மக்களை நினைவுகூர்ந்து வெறுப்பேற்பட்டதன்பின் அவ்விடத்திற்கு வந்த மாவீரர் ஏற்பட்ட குழறுபடியைப் போன்றது. பௌத்தசமயத்தின் கற்பித்தலின்படி மனிதர்களைக் கொலைசெய்வது பாவமல்ல என்று எவராலும் குறிப்பிட முடியாது. இது நற்பண்புக் கொள்கையாகும். இருப்பினும் மறுபுறத்தில் “சிங்கள இனத்தவர் பௌத்த கொள்கையின் பிரகாரத்திற்காகவும்” போர்செய்து வென்ற அரசர்கள் வாய்மணக்க வைக்கவும் முடியாது என்ற விடயத்தை அல்லது கருதுகோளை மறுக்கமுடியாது.

நீதியரசர் டக்ளஸ் இச்சந்தர்ப்பத்தில் செய்ததென்னவெனில் மாவீரர் உள்ளிட்ட இவ்வாறான சந்தர்ப்பத்திற்கு முகங்கொடுத்த வேறு பலர் இவ்வாறான சந்தர்ப்பத்திலெடுக்கும் வழிமுறைகளை பின்பற்றியமையேயாகும்.

டக்ளஸ் குறிப்பிட்டிருந்ததாவது அரசியலமைப்பில் சகலரும் சமமானவர்களென்று குறிப்பிட்டிருப்பது தம்மைப்போன்ற வெள்ளையினத்தவரை அன்றி கறுப்பினத்து அடிமைகளையல்ல. இதுதான் அரசியலமைப்பை நிர்மாணிப்பவர்களுக்கு பொறுப்பாக அல்லது சொந்தமாக இருந்தே அரசியலமைப்பை உருவாக்கியவர்களுலொருவரான பேவர்சனை எடுத்துக் காட்டினார். அடிமைகளும் சாதாரண மக்களைப் போன்று சமமானவர்களென்றால் பேவர்சன் அடிமைகளின் சொந்தக்காரன் அல்லது பொறுப்பாளனாக செயற்படமுடியாது. இவ்விவாதத்தின்போது ஆபிரகாம் லிங்கள் குறிப்பிட்டதாவது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்கள் சகலரும் சாமானவர்கள் உன்று குறிப்பிட்டிருப்பது தற்பொழுது உலகில் எல்லோரும் சமமானவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பொய்யினை ஏற்றுக்கொண்டலாகாது. மறுபுறத்தில் அரசியலமைப்பின் சீர்திருத்தத்தின்மூலம் ஒரு மாயாஜாலம் சக்தியில் சகல மக்களும் சமமானவர்களென்று குறிப்பிடவில்லை. அவர்கள் செய்தது சகலரும் சமமானவர்களென்ற உரிமையினை சீர்திருத்தமொன்றின்மூலம் அறிவிப்பதாகும். உரிமையினை முதலில் வலியுறுத்தியதனூடாக அல்லது குறிப்பிட்டதனூடாக அதனை பலாத்காரம் செய்தல் கூடியளவு விரைவில் அடுத்தபடியாக செய்யப்படல்வேண்டும். சமத்துவத்தை உண்மையாகவே ஈட்டுவதாயின் நாங்கள் மிக நீண்டபயணஞ் செய்யவேண்டியிருந்தது. அதனை ஒருபோதும் பூரணமாக அடையமுடியாது போகலாம். இருப்பினும் அதனை அண்மித்துச்செல்லக்கூடியதாக இருக்கும். சமத்துவத்தையடைதலென்பது ஒரு போராட்டமாகும்.

அடிமைத்தனத்தை ஒழித்தலும் சிவில்யுத்தமும்

ஜனாதிபதி தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் வெற்றியடைந்தார். அவர் அடிமைத்தனத்தையொழித்து சமத்துவத்தையடைய செய்த பயணத்தின்போது இன்னுமொரு படிமுறையினை முன்னெடுத்துவைத்தார். இருப்பினும் எதிர்ப்பு இல்லாமலில்லை. கிழக்கு இராச்சியம் இத்தீர்மானத்திற்கெதிராக ஐக்கிய சமஸ்டி முறையிலிருந்து விலகி றிச்மன்ட் இராச்சியத்தை தலைநகராக்கி கூட்டாட்சிமுறையினை உருவாக்கி தழுவிய சங்கத்தை உருவாக்கினார். வுடக்கு மற்றும் கிழக்கு இராணுவத்தினரிடையே அமெரிக்க சிவில் யுத்தம் ஆரம்பித்தது. இச்சந்தர்ப்பத்தில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் யுத்தத்தின்போது ஆயுதமேந்திப் போராடினர். இறுதியில் கிழக்குக் கூட்டாட்சி இராணுவத்தினரை தோற்கடித்து வொஷிங்டன் வெற்றியடைந்தது. அடிமைத்தனத்தை முடிவுக்குக்கொண்டுவர சட்டங்கள் இயங்கத்தொடங்கின அல்லது சட்டங்கள் செயற்பட்டன.

இருப்பினும் இவற்றினால் சமத்துவம் உருவாக்கப்படவில்லை. அமெரிக்கப் பெண்கள் தேர்தலில் வாக்கிட மற்றும் சமமான உரிமைகளை அனுபவிக்க மேலும் நீண்ட காலத்திற்கு போராடவேண்டியிருந்தது. ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்டத்தினால் சமத்துவத்தை அடைய மேலும் நீண்டபயணம் செல்லவேண்டியிருந்தது.

இன்றுவரை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி ஆதரவாளரைத் தெரிவுசெய்வதில் முன்னணியில் தோள்கொடுத்து நிற்பவர்கள் அன்றிருந்த டக்ளஸ் இற்கேற்க மனிதர்களாகக் கருதப்படாத இரண்டு நபர்களாவர். ஹிலாரி க்கிளின்டன் வெள்ளையினத்துப் பெண்ணாவார். பரக் ஒபாமா ஆபிரிக்க அமெரிக்கரொருவர். இவர்கள் இருவருளொருவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஜனாதிபதியானால் இது சமத்துவத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் இன்னுமொரு அத்தியாயமாகும். இருப்பினும் சட்டத்தினூடாக சமத்துவத்தையடைந்துள்ள பெண்களுக்கு லடினோவரிற்கு இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும் ஆசிய அமெரிக்கர்களுக்கும் உண்மை நிலையினையடைவதற்கு இன்னும் நீண்டபயணம் போராடிச்செல்ல வேண்டியிருக்கும்.

பணப்பலம்மிக்க அமெரிக்காவில் வாழும் பலபிரிவினர் சமத்துவத்தை உண்மையாகவே அடைந்துகொள்வதற்கும், அத்துடன் நாடுபூராகவும் வாழும் ஏழைப்பொதுமக்கள் சமத்துவத்தையடைவதற்கும் எதிர்காலத்தில் போராடவேண்டியிருக்கும். அவ்வாறானதொரு சமத்துவத்தையடையும்வரை உண்மையிலே சமத்துவம் சமூகத்தில் நிலவமாட்டாது. இருப்பினும் இவ்வுரிமை பிரசுரிக்கப்பட்டிருப்பதனால் தற்பொழுது செய்யவேண்டியது என்னவெனில் அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்த அதாவது கனவை நனவாக்க போராடவேண்டியுள்ளது.

சமத்துவமென்பது சகலரும் சட்டத்தின்முன் சமமாகப் பாதுகாக்கப்படவேண்டுமென்ற மனிதஉரிமையாகும். ஐக்கிய நாட்டின் மனிதஉரிமை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதனை எல்லா நாடும் ஏற்றுக்கொண்டு அதனை தமது நாட்டு எல்லையினுள் நடைமுறைப்படுத்த சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யுமென்று வாக்குக்கொடுத்துள்ளது. இதனால் சமத்துவத்திற்குரிய உரிமையும் மற்றைய மனிதஉரிமைகளைப்போன்று காலத்தை மிஞ்சும் உரிமைகளாகும்.

Back to Home page...

மனிதஉரிமை பாதுகாவலர்கள் சிவில் பாதுகாவலர்களாதல்

மனிதஉரிமை செயற்திட்டத்தின்போது சந்தித்த பிரதேசரீதியிலான மனிதஉரிமை செயற்பாட்டின் குழு என்னிடம் கூறியதாவது அவர்கள் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு சபையில் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனரெனக் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு வந்து சிவில் பாதுகாப்பு செயற்குழுவில் தங்களையும் இணையுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். “நீங்களில்லாவிடில் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலிருக்குமென்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யுத்தப்பிரதேசங்களில் சேவையாற்றுவதற்காக அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பொலிஸில் தற்போது சேவையாற்றுபவர்கள் தேவையானளவில் அதாவது 100ற்கு 25 வீதமானோர் மாத்திரமாகும். இதனால் பொதுமக்களின் சேவை இக்குறைபாட்டினைத்தீர்க்க அவசியமாகவுள்ளது. சிவில் பாதுகாப்பு செயற்குழு இருப்பது அந்நோக்கத்திற்காகவேயாகும். முன்னர் குறிப்பிட்ட மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டிருப்பது இச்செயற்பாட்டிற்கேயாகும்.

“தற்பொழுது பொலிஸ் முன்னர் போன்றில்லை” என்று அவர்கள் கூறினர். “மனிதஉரிமைகள் தெபாடர்பில் பொலிஸாரும் கவனஞ்செலுத்துகின்றனர்”. பின்னர் ஒரு தினத்தில் அவர்களது ஒரு பிரதேச செயற்குழுவாக மனிதஉரிமைகள் தொடர்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியது. விரிவுரையாளர்களாக கலந்துகொண்டவர்களுள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் பொலிஸ் உபபரிசோதகர் ஒருவரும் இருந்தார். “பொலிஸ் உபபரிசோதகர் அதிகாரி மனிதஉரிமை தொடர்பாக மிக உயர்வாகப் பேசினார்” கூட்டத்தின் தலைப்பு பின்வருமாறு அமைந்தது. “சிறந்த ஆட்சிக்கு மனிதஉரிமை தடையாகுமா?”

தற்பொழுது இவ் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் பொலிஸில் வரவேற்புப்பகுதிகளில் கடமையாற்றுகின்றனர். சோதனைச்சாவடிகளில் பொதுமக்களது உடமைகளை பரிசோதிப்பதில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் மற்றும் அவர்களது நடத்தை தொடர்பில் கண்காணித்து பொலிஸிற்கு அதுதொடர்பில் செய்திகளைப் பரிமாறுகின்றனர் அல்லது நபர்களை பொலிஸிடம் பொறுப்புக்கொடுக்கின்றனர். பொலிஸில் பொதுமக்களின் செயற்பாடு தொடர்பில் பொறுப்பாக ஒரு உத்தியோகத்தர் உள்ளார். சீருடையிலிருப்பதுமில்லை சிவில் பாதுகாப்பு செயற்குழு உறுப்பினர்களை தொடர்புபடுத்துவது இவரூடாகவேயாகும்.

எவ்வாறிருப்பினும் பொதுமக்களுக்கும் பொலிஸிற்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருங்கியதாகத் தோன்றுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக சிவில் சமூகத்தினரை அரசுடன் இணைத்து அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின்மூலம் பொதுமக்களை இணைக்கும் கொள்கை பலாபலன்களையடைந்துள்ளதேயென்று கூறவேண்டும். “முதல் மாதிரியல்ல பொலிஸார் எம்மை நன்றாகக் கவனிக்கின்றார்கள்” என்று மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு புறத்தில் மனிதஉரிமை தொடர்பில் நல்ல அனுபவமுள்ளவர்கள் பொலிசுடன் இணைந்து உதவமுன்வரல் மனிதஉரிமை மீறப்படுதலைக் குறைக்க ஒருகாரணமாகும் என்பது இவர்களது கருத்தாகும். “ஒருவர் முறைப்பாடு செய்யவந்தால் முதல்மாதிரி என்னடா வந்தனி என்று கேட்பதில்லை. நாங்கள் என்னடா ஐயா தயவுசெய்து இங்குவந்து உங்கள் முறைப்பாட்டை செய்யுங்கள் என்றே கூறுகின்றோம்”. சிறு முறைப்பாட்டு பகுதி தமது பெயரை மாற்றியுள்ளது எவ்வாறிருப்பினும் இங்கு கொன்பிலிக்ட் ஒவ் இன்டரஸ்ட் ஒன்று ஏற்படாதென்று நான் கேள்வி எழுப்பினேன். இவ்வாறெடுத்துக்கொன்டால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் சித்திரவதைகள் அல்லது வேறுவிதமான மனிதஉரிமை மீறல்கள் அல்லது தமது கடமைகளை செய்யாதுவிடல் அல்லது கடமைகளிலிருந்து விலகல் என்பன தொடர்பிலான முறைப்பாடுகள் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் என்றவகையில் உமக்குக் கிடைக்கின்றது எனக்கொண்டால் இதன்போது நடப்பது என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபர் இதற்காக பொலிஸிற்கெதிராக செயற்படவேண்டுமென்பதாகும். இதன்போது இங்கு பிரச்சனை எழாதா? இல்லை அவ்வாறானதொரு பிரச்சனை எழுந்தால் எங்களால் பொலிசுடன் கதைத்து அதனை முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் அல்லது தீர்க்க்கூடியதாக இருக்கும்.

தற்கால யுத்தத்தின் தொனிப்பொருள் “எங்களுக்காக நாங்களென்பதாகும்” இவ்வாக்கியத்தின் ஆரம்பப்பகுதியில் அல்லது முதற்பகுதியில் அடங்குபவர்கள் அரசதரப்பினர்களான பொலிசும் இராணுவமுமாகும். பிற்பகுதியிலிருக்கும் நாங்களென்ற சொல் பொதுமக்களை வலியுறுத்துகின்றது. சுருங்கக்கூறின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது எங்களுக்காக நாங்களென்ற பனர்களை ஏந்தியவண்ணமாகும். இவ்வாறான ஒரு நிலையிருக்கும்போது எங்களது பிரதேச மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் எங்களுக்காக உழைப்பதில் எந்தவிதமான புதுமையுமில்லை.

இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும் சிங்களம் பேசும் பொதுமக்களுடன் மனிதஉரிமை பாகாப்புத்தொடர்பில் செயற்படும்போது மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொள்ளுதல் மிகஅவசியமாகும் இல்லது விளங்கிக்கொள்ளுதல் மிகஅவசியமாகும். பிரபாகரன் மற்றும் எல்.ரி.ரி.ஈ யினரை அழிக்கும் கடைசி யுத்தத்தில் கிழக்கு இணைந்துள்ளதுடன் “தீவிரவாதத்தை“ தோற்கடிப்பதற்கான யுத்தத்தில் தமது சுதந்திரத்தை மீது வைப்பதற்கும் பொதுமக்கள் இணங்கியுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் மனிதஉரிமையினை பாதுகாப்பதற்காக குரலெழுப்புதல் தீவிரவாதற்குத் தேவையற்றவிதத்தில் ஒத்தாசை வழங்குதல் என்ற எண்ணக்கரு பொதுமக்கள்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைத்தலென்ற விதத்தில் ஒழிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வாயால் அடிக்கடி அக்கருத்து வெயளியில்வரல் புதுமைக்கான காரணமல்ல.

1994ற்குப்பின் பல்வேறு இடையீடுகள்மூலம் குறைந்தபட்சமேனும் சட்டத்தினுள் நின்றுகொண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உரிமைகள் எல்லாவற்றையும் தட்டிக்கழித்துக்கொண்டு அரசு செயற்பட்டது. இவ்வாறான ஒரு நிலைமை நிலவும்போது அதற்கு சிறிதளவேனும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அல்லது குரலெழுப்பாமல் பொதுமக்கள் அதனை யதார்த்தமாக எண்ணி அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை காணக்கூடியதாக உள்ளது.

மீன் பிடிக்கும் குசல்ஹாமிக்கு கவுன்சிலின் நுழைவாயிலை முடிவிடவும்

மனிதஉரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைபெறும் அரசுகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் வைகாசி மாதம் 21ம் திகதி நியுயோர்க் நகரில் ஐக்கியநாடுகளின் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதில் உறுப்புரிமை பெறுவதாயின் ஒரு நாடு குறைந்தபட்சமேனும் 96 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததுடன் அதன் உபதலைவராகவும் பணியாற்றியது.

வைகாசி மாதத்தில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலின்போது உறுப்புரிமைநாடு தெரிவுசெய்யப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிருந்தது. இருப்பினும் இலங்கை உறுப்புரிமை நாடாக கடந்த இரண்டு வருடங்கள் தொழிற்பட்டது. இதன்போது எல்லா இனத்தவரும் மனிதஉரிமைகள் தொடர்ந்தேர்ச்சியாக மிகவும் பாரதூரமானவகையில் மீறப்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. நாடுப+ராகவும் பல்வேறுதரப்பினர் (மக்கள்) வற்புறுத்தப்பட்டு கடத்தப்பட்டனர், கொலைசெய்யப்பட்டனர், காணாமற்போனர், சட்டரீதியற்றவிதத்தில் கைதுசெய்யப்படல் மற்றும் தடுத்துவைக்கபபடல் பல்வேறு கொடூர மற்றும் மனிதாபிமானமற்றமுறையில் நடாத்துதல் என்பவை வழமையில் பேசப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான மனிதஉரிமை மீறல்களை தடுத்துநிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை எடுக்கும்படி நாடடினுள்ளிருந்தும் மற்றும் சர்வதேசரீதியிலும் அழுத்தங்கள் இலங்கையரசிற்குக் கொடுக்கப்பட்டிருப்பினும் அரசு அவற்றை கவனிக்கவில்லை. மிகவும் தெளிவாகத் தென்பட்ட நிலையென்னவென்றால் வேண்டுமென்றே அரசு அக்கோரிக்கைகளை புறந்தள்ளியதென்பதாகும். அதுமாத்திரமல்ல மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்ற ரீதியில் குற்ற்ஞ்சாட்டப்பட்டவர்களுள் மிகவும் பாரிய எண்ண்pக்கையிலானோர் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டாலும் குற்றவாளியாக்கப்படடிரு;நதாலும் அதாவது சட்டத்தின் பிடிpயிலிருந்து தப்பி மிகவும் சுகமான வாழ்க்கையினை வாழ்கின்றனரென்பது தெளிவாகின்றது.



மனிதஉரிமை மீறல்களை ஆராய்வதற்காக நாட்டினுள் இயங்கும் மனிதஉரிமை ஆணைக்குழுக்களில் எவ்விதமான சுயாதீனத்தன்மையினையும் காணமுடியாதுள்ளதுடன் அவற்றின் தொழிற்பாடும் மந்தமாக இருந்ததென்பது எல்லோருக்கும் மிகவும் தெளிவாகத் தெரிந்த விடயமாகுமென்பதும் இது பாரிய பிரச்சனையாகவும் இருந்தது. பாரிய கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகூட ஒரு வெள்ளை யானையின் நிலையினை ஒத்ததாக இருக்கின்றது. இவ்வாறிடம்பெறும் பாரிய மனிதஉரிமை மீறல்களுக்கு பரிகாரம் நாட்டினுள் கிடைப்பதில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச மேற்பார்வை அலுவலகமொன்றினை நாட்டினுள் நிறுவுவது தொடர்பாக பல்வேறு மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தேவையினை எழுப்பியபோதும் அரசு அதுதொடர்பில் காட்டிய பாரிய எதிர்ப்புக் காரணமாக இன்றுவரைக்கும் எவ்வித பலாபலனையும் அனுபவிக்கமுடியாமலுள்ளது. இவ்வாறு மனிதஉரிமை தொடர்பில் எவ்வித மதிப்புமற்ற நாடு பாரியளவிலான மனிதஉரிமை மீறல்களை ஆசிர்வதிக்கும் ஒரு நாடு மேற்கொண்டும் மனிதஉரிமை கவுன்சிலில் அங்கம்வகிக்க வேண்டுமா? உலகம்பூராவும் மனிதஉரிமை வளர்ச்சியினை ஏற்படுத்த செயற்பாட்டு ரீதியில் எடுத்துக்காட்டாக இயங்கவேண்டிய கவுன்சிலின் உறுப்பினரொருவர் தமது நாளாந்தக் கடமைகளினால் அதனை மீறும்போது ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தராதரங்களுக்கேற்படும் கதியென்ன? இன்னொருவகையில் கூறுவதனால் மீண்டும் கவுன்சில் உறுப்புரிமை இலங்கையரசிற்குக்கிடைத்தால் அதற்குரிய காரணம் தாங்கள் மனிதஉரிமையினை மதித்து செயற்படுவதுதானென தம்பட்டமடிக்குமென்பதுடன் தங்களைப் பாதுகாக்க (போர்வையொன்றை போர்த்துக்கொள்ள) செம்மறியாட்டைப்போன்ற (எருது) ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசிற்குக்கிடைக்கும். ஏதாவதொருவகையில் இம்முறை இலங்கையரசு கவுன்சிலின் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டால் மனிதஉரிமை தொடர்பில் சர்வதேசத்தின் வெறுப்புக்கும் பல பிரச்சனைகளுக்கும் ஆளாகுமென்பது தெளிவாகின்றது. இதனால் இலங்கையரசு தற்போதைக்கும் மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்புரிமையினை மீளப்பெறுவதற்கு கடும்முயற்சியினை ஆரம்பித்துள்ளது.



இந்தப் பின்னணியின்கீழ் மனிதஉரிமைகள் மற்றும் பல சிவில் சமூகங்கள் இலங்கையில் யதார்த்தத்தை விளக்கியுள்ளது. மீண்டும் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட வாக்களிப்பதென்பது ஐக்கிய நாடுகளின் மேன்மை தங்கிய கொள்கைகளை தராதரங்களை பகிடிக்கும் உள்ளாக்காவண்ணம் செயற்படும்படி சங்கத்திலுள்ள உறுப்புரிமை நாடுகளிடம் தனித்தனியாகவும் வௌ;வேறாகவும் கேட்கப்பட்டிருந்தது.



உங்களிடம் நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்பது என்னவெனில் இலங்கையினை இவ்வருடம் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கு துணைநிற்கவேண்டாம் என்பதாகும். எவ்வாறிருப்பினும் எங்களது நாட்டு சிவில் மக்களது உரிமைகள் மேலும் மீறப்படாமலிருக்க வழிசெய்யக்கூடிய முழுமொத்த சர்வதேச மேற்பார்வையின் கீழாகும். இதனால் மனிதஉரிமை சபைக்கு வாக்குகளை பரிசீலிக்கும் செயற்பாட்டின்போது நாட்டினுள் நிலவும் மனிதஉரிமைகள் தொடர்பான கவலைக்குரிய நிலைமை தொடர்பில் இலங்கையரசின் பொறுப்பினை காண்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் சகல உறுப்புரிமை நாடுகளிடமிருந்தும் கேட்டுக்கொள்கின்றோம்.



இவ்வாண்டும் இலங்கை மீண்டும் தெரிவுசெய்யப்படாவண்ணமிருக்க வழிசெய்து கொடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். அதாவது இலங்கைக்கு உறுப்புரிமை ஆதரவு வழங்கவேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு செய்வதன்மூலம் இலங்கையரசிற்கு ஐக்கிய நாடுகளின் சங்கம் போன்றவற்றுக்கிடையிலான தேசிய நிறுவனங்களில் பங்காளராக மேலும் தொடர்ந்து செயற்படவேண்டுமானால் தமது கோவை செயற்படும் விதங்களை மாற்றியமைக்க உங்களது அரசுமூலம் முக்கிய செய்தியொன்று பரிமாறப்படுமென்பது தெளிவாகும். அரசியல் தேவைப்பாடொன்றில்லாமல் தொழிநுட்பஆதரவின்மூலம் மட்டும் இலங்கையின் மனிதஉரிமை நிலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Back to Home page...

ஐஐஜிஈபி முறையினை வேருடன் அழித்தல்

சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் சட்டமாஅதிபர் கூறியதாவது “சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை குழுவொன்றை இலங்கை;ககுக் கொண்டுவரல் இவர்களது சூழ்ச்சியாக இருந்தது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியதாவது இவர்களுக்கு பொறுப்புக் கொடுத்திருந்த கடமையினை செய்யாது வேறொரு வேலையினை செய்ததாக இவர் கூறியிருந்தார்”. மந்திரி விஜித ஹேரத் கூறியதாவது “சூழ்ச்சியாளர்களுக்கு இலங்கைக்குள் நுழைய இடங்கொடுத்த அரசு கடைசியில் பல பேச்சுக்களுக்கும் ஆளாகியது இது அரசின் பிழையாகும்”. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ் சுயாதீன மாண்புமிகுக் குழுவினை அலரிமாளிகைக்கு அழைத்து அவர்களை பேய்க்காட்டியதாக (தெஹி கபுவே) பல வெப்தளங்களும் (தமிழில் போடுங்கள்) பத்திரிகைகளும் அறிக்கையிட்டது. திவயின ஞாயிறு தினங்களில் வெளிவரும் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததாவது “ஜனாதிபதி இந்த சுயாதீனக்குழுவினர்களை பேசும்போது” மாண்புமிக்கவர்கள்” ஏதும் கூறாமல் கீழே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனரென்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாண்புமிக்ககுழு எல்.ரி.ரி.ஈஇற்கு சார்பாக செயற்பட்டனரென்று திவயின மேலும் கூறும்போது சில சட்டத்தரணிகளையும் மேற்கோள்காட்டியிருந்தது”.

இலங்கையில் வசிப்பவர்களின் இவ்வாறான பல கருத்துக்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் என்பவற்றைப் பார்க்கும்போது தென்படுவது என்னவெனில் சர்வதேச சுயாதீன மாண்புமிகுக்குழு “சூழ்ச்சியான, எல்ரிரிஈஇற்கு சார்பானவர்கள், இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்னவென்று” புரியாதவர்களாக, இவர்களுக்கு பேசும்போது கீழேபார்த்துக்கொண்டிருக்கும் பொம்மைஆட்காட்டிகள் என்பது பலரது கருத்தாக இருந்தது.

இதற்கமைய சர்வதேச மாண்புமிக்கோர் இவர்களால் செய்யமுடியாத வேலையொன்றினை பாரமெடுப்பதன்மூலம் தற்கொலையினை எய்தினரா? அல்லது தற்கொலை செய்துகொண்டவர்கள் வேறு யாராவதா?
பதினொருபேர் உள்ளடங்கலாக சர்வதேச மாண்புமிகுக் குழுவினை இலங்கைக்கு வரவழைத்தது ஜனாதிபதியாகும். ஜனாதிபதி இவர்களிடம் கேட்டிருந்தது என்னவென்றால் பிரதானமாக அவர்களது காலத்தின்போது (2005 ஆவணி 1ம் திகிதி தொடக்கம் 2006 ஐப்பசி 16ம் திகதி வரை) இடம்பெற்ற பாரிய கொலைகள் யாரால்இ எவ்வாறு இடம்பெற்றதென்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் தொழிற்பாடு சர்வதேச தராதரத்திற்கேற்ப இருக்கின்றதா அல்லது தொழிற்படுகின்றதா என்பதனை மேற்பார்வை செய்து அதனை அறிக்கையிடும்படியாகும். இதற்கமைய 2007 மாசி மாதத்தில் மாண்புமிகுக் குழுவினர் அவர்களது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் தொடர்பில் மாண்புமிகு குழு மேற்பார்வை அறிக்கைகள் பலவற்றை வெளியிட்டனர். முதலாவது அறிக்கையினை ஜனாதிபதிக்கு 2007ம் ஆண்டு 6ம் மாதம் 1ம் திகதி ஆணைக்குழு சமர்ப்பித்தது. இரண்டாவது அறிக்கை 2007ம் ஆண்டு 9ம் மாதம் 18ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையினூடாக அவர்கள் தொடர்ச்சியாக கூறியது என்னவென்றால் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் (பேசிக் இன்டநஸனல் நோம்ஸ் அன்ட் ஸ்ரடட்ஸ்)இற்கு ஏற்ப அமையவில்லையென்பதாகும். அவர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் சில.

1. சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டை முன்வைக்கின்றனர். சாட்சியாளர்கள் சாட்சிகளை முன்னெடுக்கின்றனர். இக்கொடூர செயற்பாடுகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றது சட்டமாஅதிபரின் வழிகாட்டலின்படியோகும். அவ்விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லையென்பதனால்தான் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களது மேற்பார்வையின்கீழ் சரியான முறையில் மேற்கொள்ளப்படாத விசாரணைகளுக்கெதிராக சாட்சிகளை வழிநடத்த சட்டமாஅதிபரின் திணைக்களம் செயற்படுவதனால் அவர்களது கடமையினை நிறைவேற்றுவதில் (கொன்பிளிக்ட் ஒவ் இன்ரெஸ்ட்) உருவாகியுள்ளது.

2. ஆணைக்குழுவின் சாட்சிக்கு அழைக்கபபடும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்புத்தொடர்பில் சரியானதொரு வழிமுறை இல்லாத காரணத்தினால் குற்றவாளிகளுக்கெதிராக சரியான சாட்சிகள் சாட்சிகொடுக்க முன்வருவதில்லை.

3. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தெளிவற்றதாக இருப்பதுடன் மந்தமாகவும் தென்படுகின்றது.

4. அரச திணைக்களம் அல்லது நிறுவனங்களிலிருந்து (சில விடயங்கள் சாட்சிகளை சேகரிக்கும்போது) ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்குத்தேவையான ஆதரவு கிடைப்பதில்லை.

5. ஜனாதிபதி அலுவலகத்தினூடாக ஆணைக்குழுவின் சகல செயற்பாடுகளும் அல்லது முக்கிய செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுவதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அதற்குக்கிடைக்கும் பணவசதியிலும் பற்றாக்குறைத்தன்மை நிலவுகின்றது.

இவ்வாறான முறைப்பாடுகளை கூறிய மாண்புமிகு குழு முன்னெடுத்துக்கூறியதாவது இவ்வாறான பழிச்சொற்களை சரிசெய்வதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றத்தவறுவதால் கிடைக்கும் பலாபலன் என்னவெனில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம் மற்றும் சக்தி சர்வதேச தராதரத்திற்கேற்ப அமையவில்லையென்பதாகும். 2007 ஆவணி 20ம் திகதி இந்த சுயாதீனக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இந்த விடயங்கள் தொடர்பில் அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மந்தமானநிலை தொடர்பாக மாண்புமிகுக் குழு முன்னிறுத்திய கருத்துக்கள் தொடர்பில் அரசு தொடர்ச்சியாகக் கவனியாது இருந்ததுடன் அவற்றினை எதிர்த்தும் செயற்பட்டனர். ஆணைக்குழுவின் தலைவர் இதுதொடர்பில் தமது விருப்பமற்ற தன்மையினை கருத்துவடிவில் ஊடகங்களினூடாக தெரிவித்தார். அதுமாத்திரதமன்றி அவர்களது கடமை தொடர்பில் மாண்புமிகு குழு செய்தமுன்மொழிகளை தற்போதைய அரசின் சட்டமாஅதிபர் அதுதொடர்பில் விடையளிக்கையில் செயற்பட்டவிதம் மிகவும் பிற்போக்கானதாக தென்பட்டது. சட்டமாஅதிபர் அதற்கு பதிலளித்த விதத்தை மாண்புமிகு குழு பின்வருமாறு எடுத்துக்கூறியது. சர்வதேச மாண்புமிகு குழுவின் முக்கியம் வாய்ந்த தகவல்களின் உள்ளடக்கம் தொடர்பில் தமது அதிருப்தியினை தெரிவிக்கும் உரிமை சட்டமாஅதிபருக்குண்டு. மாண்புமிகு குழுவின் அங்கத்தவர்கள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நேர்மையான விதத்தில் மதிப்பளிக்கின்றனர். அதேபோன்று சட்டமாஅதிபரின் பதவிக்கேற்றவிதத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றது என்பதனையும் அவர்கள் அவர்கள் நம்புகின்றனர். மாண்புமிகு குழுவினர்மூலம் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முக்கியபிரச்சனைகளை புறந்தள்ளியும் மியவும் கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி குறிப்பிட்ட கடிதம் வரையப்பட்டுள்ளதென்பது மாண்புமிகுக் குழுவின் கருத்தாகும்.

முடிவில் மாண்புமிகுக் குழு தமது கடமைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனடிப்படையில் 2008 பங்குனி 31ம் திகதி அவர்களது சேவையினை இடைநிறுத்தியது. சித்திரை 14ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் பின் அவர்களது இறுதி அறிக்கையினை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் உண்மையினைக் கண்டுபிடிப்பதற்கு அரசுக்கு எந்தவிதமான அரசியல் தேவைப்பாடும் இல்லையென்பதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். மாண்புமிகுக் குழுவுக்கெதிராக பழிச்சொல்லும் அரசின் மற்றும் தேசப்பக்தியுடைய ஊடகசெயற்பாடுகள் அதன்பின்தான்; ஆரம்பித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டதன் பின் தேசிய பிரச்சனைகள் தொடர்பான வழிமுறையாகவிருந்தது. “அழித்து முடிவுக்குக் கொண்டுவரல் என்ற வழிமுறையாகும்”. யுத்தத்தில் ஈடுபடும் இவ்விருதரப்பினரும் இவ்வழிமுறையினை எதிர்த்துச் செயற்பட முடியாமல்போனதுடன் இதன் பலாபலனாக் கிடைத்தது யாதெனில் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெற்றதாகவும் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெறும்போது அதற்கெதிராகச் செயற்பட தேசிய மனிதஉரிமை பாதுகாப்பு நிறுவனங்களிற்கு முடியாமலுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனடிப்படையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு அறிக்கை செய்வதற்கு அல்லது வெளியிடுவதற்கு மற்றும் பிரசித்திப்படுத்துவதற்கு சர்வதேச மனிதஉரிமை அலுவலகமொன்றை இலங்கையினுள் நிறுவுவது அவசியமென்பது தொடர்பில் நாட்டினுள்ளும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஒரு கருத்து நிலவியது. ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின்போது மட்டுமன்றி அதற்கு வெளியேயும் இக்கருத்து பாரிய அவதானத்திற்குள்ளாகியது. அரசு இந்த யோசனைக்கெதிராக செயற்பட்டது. அரசின் நோக்கமென்னவெனின் நாட்டினுள்ளிருக்கும் நிறுவனங்களினூடாக பிரச்சனைகளை முடிவுக்குள் கொண்டுவர முடியுமென்பதாகும். இதற்கேற்ப 2006 கார்த்திகை மாதம் 3ம் திகதி ஜனாதிபதி ராஜபக்ச மூலம் பாரியளவில் மனிதஉரிமைகள் மீறப்பட்ட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைசெய்து இதற்குப்பொறுப்பானவர்களை கண்டுபிடிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதற்கிடையில் சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதன் நோக்கமாக ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வதேச தராதரத்திற்கேற்ப செயற்படுகின்றதா என்பதனை அவதானிப்பதற்கொருவர் என்ற அடிப்படையில் மிகவும் திறமைவாய்ந்த ஒருவரை அனுப்பும்படி பல நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்ப அந்த நாடுகள் மிகவும் புத்திசாலிகளை தெரிவுசெய்து அனுப்பிவைத்தது. இந்தியா இதற்கு அனுப்பிய நபர் தங்களது நாட்டின் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசராக இருப்பினும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களை நன்கறிந்து அனுபவம் பெற்றவராகவுமிருந்த திரு. பி. என். பகவதி. பிரான்ஸினால் அனுப்பப்பட்டவர் திரு. பேனாட் குஸ்ஓனர் ஆவார். (அதன்பின் அவர் அந்நாட்டு சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அனுப்பப்பட்ட நபர் சுறறுலா மற்றும் அபிவிருத்தி அமைச்சராக இருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. பியரே கொட் ஆவார்). இந்தோனேஷியாவால் அனுப்பப்பட்ட நபர் திரு. மாசுகி தருஸ்மான் ஆவார். இவ்வாறு அமெரிக்கா, ஜப்பான, இங்கிலாந்து, நெதாடலாநடது, கனடா, சயிப்ரஸ் போன்ற நாடுகள் தமது நாட்டிலிருந்தும் பிரமுகர்களை அனுப்பிவைத்தனர். இதற்கேற்ப இந்த மாண்புமிக்கவர்கள் பேச்சுக்கு ஆளாகுபவர்களும் குறைகூறுபவர்களும் எண்ணுவதுபோல் அவர்களது பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்குமளவிற்கு பொம்மைகளல்ல. மாண்புமிக்க இவர்கள் மிகவும் கீர்த்தியுடைய சட்டரீதியான மற்றும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களில் மிகவும் பிரசித்திவாய்ந்த இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நாடுபூராவுமுள்ள அனுபவங்களைப்பெற்ற திறமைசாலிகளாவர்.

மாண்புமிக்க மற்றும் இலங்கை அரசிற்கிடையிலேற்பட்ட பிரச்சனை என்ன?

ஆணைக்குழுவின் விசாரணைக்கென நியமிக்கப்பட்டிருந்த பல கொலைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தரப்பினர் அரச இராணுவப்படையும் பொலிஸ_ருமாகும். விஷேடமாக தற்போது விசாரணையின் அரைப்பகுதியினை அண்டியுள்ள மூதூர் ஏசீஎவ் வழக்கின் 17பேர் கொலைவழக்கு மற்றும் திருகோணமலையில் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களது கொலைவழக்கு தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படுவது அரச தரப்பினராகும். இதனடிப்படையில் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எவ்வாறிருப்பினும் தமது படையின் கீர்த்தியினை பாதுகாக்கவேண்டியது அரசுக்குரிய பாரியகடமை என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. சர்வதேச தராதரத்திற்கும் கொள்கைகளுக்குமேற்ப செயற்படும் ஆணைக்குழுவினால் அவ்வாறான ஒரு நோக்கம் நிறைவேறுவதென்பது உண்மையாகும். இதற்காக முடியுமானவரைக்கும் அத்தராதரங்களை கவனியாதுவிடல் முக்கியமாகும். இச்சுயாதீனக்குழு சூழ்ச்சியாளர்களாகவும் வேண்டப்படாதவர்களாகவும் அரசுக்கும் இராணுவப்படைக்கும் தென்பட மூலகாரணமாக அமைவதென்னவெனில் ஆணைக்குழுவினை சர்வதேச தராதரங்களுக்கு செயற்படும்படி தொடர்ச்சியாக இவர்கள் கட்டளையிட்டது. செய்திகளை வெளியிட்டது. சட்டமாஅதிபருடன் பேச்சில் ஈடுபட்டது. ஜனாதிபதியினை சந்தித்து இதுதொடர்பில் குறிப்பிட்டபடியினாலுமாகும்.

இருப்பினும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பொறுப்பு மத்தியில் பிரச்சினை தொடர்பில் அவர்களது மேற்பார்வை ஒரு துளியேனும் கவனஞ்செலுத்தவில்லை. ஒரு வருடத்திற்குள் முடிவுறுத்தப்படவேண்டுமெனக்கூறி பொறுப்புக் கொடுக்கப்பட்ட செயற்பாடுகளில் ஆணைக்குழு ஆரம்பமாகி இரண்டு வருடங்களாகியும் விசாரணைகளிடம்பெறுவது மூதூர் “அக்ஷன் பாம்” பணியாளர்கள் 17பேர் தொடர்பான கொலையும் திருகோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவர்களது கொலை தொடர்பான விடயமுமாகும். இதன்படி ஆணைக்குழுவின் செயற்பாடு மிகவும் மந்தமான நிலையிலுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உதாரணமாகக் கூறுவதாயின் கடந்த மாசி மாதத்தில் 10 நாட்களாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த பண்டபத்தில் “தயடகிறுள” என்ற நிகழ்ச்சி இடம்பெற்றபோது ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆணைக்குழுவில் சாட்சிகொடுக்கும் சாட்சியாளர்களது பாதுகாப்புத்தொடர்பில் எவ்விதமான முக்கிய ஏற்பாடும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டமும் பாலகிரி தோஷத்திற்குட்பட்டுள்ளது. மாண்புமிக்கவர்களின் மேற்பார்வையின்படி ஆணைக்குழுவின்முன் சாட்சி கொடுப்பதற்கு கண்களால் சம்பவத்தை நேரில்கண்ட சிவில் சமூகத்தினரெவரும் முன்வரவில்லை. தமக்கு தெரிந்தவற்றை சொல்லுவதற்குப்பதிலாக திறமையற்றவிதத்தில் தோன்றுவதற்கு பாதுகாப்புப் படைத்தரப்பின் சாட்சியாளர்கள் விரும்புகின்றனர். இதனடிப்படையில் மாண்புமிக்கவர்களின் கருதுகோள் என்னவெனில் “கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு அல்லது அதிகாரம் எனபவற்றை சிறந்தவகையில் செயற்படுத்த ஆணைக்குழுவினால் முடியாததென்பதாகும்.

தற்போது அரசின் கோபத்திற்கு இக்கருத்தே காரணமாக அமைகின்றது. மாண்புமிக்கவர்களை சந்தித்தபோது ஜனாதிபதியால் கேட்கப்பட்டதாவது “எனக்கு அரசியல் நோக்கம் இல்லையெனில் ஆணைக்குழுவினை எதற்காக நியமித்தேன்” என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. மனிதஉரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு அரசியல் தேவைப்பாடொன்று அவசியமாகும். இருப்பினும் ஆணைக்குழுவொன்றினை அமைப்பதால் மட்டும் அவ்வரசியல் தேவைப்பாடு தோன்றவில்லையென்பது அதற்கும்மேலான ஒரு உண்மையர்கும். பலர் கூறுவதனால் மட்டும் ஆரவாரித்து ஆணைக்குழுவொன்றினை அமைத்து பின் அவற்றை வேண்டுமென்றே அங்கவீனமாக்கி பலனற்ற இயற்கை மரணத்திற்குட்படுத்திவிடல் எமது நாட்டின் சம்பிரதாயமாகும். அதற்கிருக்கும் மிகவும் நெருங்கிய உதாரணம் அரசியலமைப்பின் 17வது சீர்திருத்தத்தின்மூலம் நியமிக்கப்பட்ட அரசியலைமைப்புச் சீர்திருத்தச்சபை மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களாகவும் தென்படும் விதத்தில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கேற்பட்ட நிலையுமிதுவாகும்.

அரசின் கருத்துப்படி மாண்புமிகு ஆணைக்குழுவின் கூட்டங்களில் பங்குபெறாமல் அதனை குறைசொல்வதனையே தொழிலாகக் கொண்டிருந்ததென்பதாகும். இது சட்டத்தைப்பற்றி எதுவுமறியாது செய்யப்படும் இழுத்தடிப்புக்களேயாகும். வழக்கொன்றை நடத்துகின்றோமென்ற கருத்தில் காலையிலிருந்து இரவுவரைக்கும் நீதிமன்றத்தின் கதிரைகளை சூடாக்கத்தேவையில்லை. இதற்கு சட்டப்புத்தகமே போதுமானது. இன்னுமொருவகையில் கூறுவதாயின் 2007 மார்கழி மாதம் 17ம் திகதி வரைக்கும் இவ்விருவழக்குகளின் அமர்வுகள் 76ற்கு மாண்புமிக்கவர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் கலந்துகொண்டனரென்பது இவர்களது கருத்தாகும். அத்துடன் மகவும் உற்சாகத்துடனும் விருப்பத்துடனும் வழக்கின் அமர்வுகளை கண்காணிப்பதற்காகவும் மிகவும் உயர்ந்த தகுதிகளைக்கொண்ட உதவிமுகவர்கள்மூலம் கொழும்பு மற்றும் அதற்கேற்ற இடங்களில் விசாரணைகள் ஆராய்ச்சிகளை முற்றுமுழுதாக மேற்பார்வை செய்ததாக இவர்கள் கூறியிருந்தனர். ஆத்துடன் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை ஒன்றாகக்கூடி ஆணைக்குழுவின் நிலைமையினை கலந்தாலோசிப்பதற்கும் இவர்கள் பொறுப்பாக இருந்தனரென்பதுடன் அதனை சரிவரவும் செய்தனர்.

அரசின் எண்ணமென்னவெனில் அது நினைப்பதை மாண்புமிக்கவர்கள் கூறவேண்டுமென்பதாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக பகவதி போன்ற இந்திய பிரதமநீதியரசர் எங்களது நாட்டரசிற்கு தேவையானதை கூறுபவர்களல்ல. அவர்கள் கூறுபவை சட்டத்திற்கேற்ற விடயங்களாகும். அரசிற்கேற்ற விடயங்கள் இடம்பெறாதபோதும் தேவையற்ற விடயங்கள் இடம்பெறும்போதும் சட்டம் மற்றும் சாதாரணத்துவத்தை அறிந்தவர்கள் அதற்கெதிராவது சாதாரண விடயமே. இதன்போது அவர்கள் சட்டத்தை மீறுபவர்களுக்கு தலைவலியாகின்றனர். இது தற்போதுள்ள நிலைமையாகும்.