Monday, September 22, 2008

லூயிஸ் ஆபர் கூறிவை…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஒக்டோபர் 9-12ஆம் திகதிவரை இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எனக்கு அரச தரப்பினர்களையும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் போறோருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட சந்தர்ப்பங் கிடைத்ததையிட்டு முதலில் நன்றி கூறுகின்றேன். (யுத்தம் இடம்பெறும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசம்). இருப்பினும் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை சந்திக்கக் கிடைக்காததை உள்ளிட்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். காரணம் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சிறுவர்களை அவர்களது படையில் இணைத்தல், பொது மக்களைக் கடத்துதல், அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் உட்பட எல்.ரி.ரி.ஈயினரினால் செய்யப்படும் பாரதூரமான மனிதஉரிமைகளும், மனிதஉரிமை சட்டங்களை மீறுதல் தொடர்பிலும் அவர்களது கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரக்கூடியதாக இருந்திருக்கும்.

எனது பயணத்தின்பொழுது கடந்த இரண்டு வருடங்களுள் இடம்பெற்ற மொத்த கடத்தல்களையும் காணாமல்போதல்களைப்பற்றியும் விசேட கவனத்தைச் செலுத்தினேன். மேற்குறிப்பிட்ட காரணங்கள் தொடர்பாக பல்வேறுவகையிலான முயற்சிகள் அரசினால் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பினும் அவற்றுள் பல இன்னும் பரீட்சார்த்தமாகக்கூட செய்துபார்க்ப்படவில்லை. அத்துடன் கைதுசெய்யப்பட்ட பலர் உட்பட அவசரகாலச்சட்டத்தின்கீழ் தடுத்துவைத்தல் தொடர்பிலும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நான் விசேட கவனம் செலுத்தினேன். கவலைக்குரிய விடயமென்னவென்றால் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்காக இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் அப்பாதுகாப்பை வழங்குவதற்கு முடியாமலுள்ளது அல்லது பாதுகாப்பை வழங்கவில்லை என்பதேயாகும்.

கவலைக்குரிய விடயமென்னவெனில் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு தேசியநிறுவனங்களும் தொழிநுட்பமுறைகளும் தேவையான பாதுகாப்பினை வழங்கவில்லையென்பதாகும். விசேடமாக ஆரம்ப காலங்களில் சர்வதேச ரீதியாக சிறந்த கீர்த்தியினைப் பெற்றிருந்த இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவினால் ஆணையாளர்களை அமர்த்தியதன் காரணமாக தனது சுயாதீனத் தன்மையினைப் பழுதுபடுத்தியுள்ளதுடன் அதன் செயற்பாடுகளில் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் மேலாக மிகவும் மேலான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ள விடயங்களாகிய படுகொலைகள்இ காணாமல்போதல் சம்பந்தமாக விசாரணைகளை நடத்துவதற்கு இற்றைக்கு ஓராண்டுக்கு முன் ஜனாதிபதியினூடாக உருவாக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு தனது செயற்பாட்டிற்குள் அடங்கும் விடயங்களில் ஒரு விடயத்தையாவது முழுமையாக விசாரைண செய்ய முன்வரவில்லை. விசாரணை ஆணைக்குழு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் ரீதியாக தனது செயற்பாட்டை மேற்கொள்கின்றதா? என்ற சந்தேகம் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராற்வதற்காக சர்வதேச மட்டத்தில் அழைப்பினை ஏற்று வந்திருந்த குழுவிற்கும் சந்தேகமெழுந்துள்ளது. மனிதஉரிமைகள் தொடர்பான தகவல்களை மிகவும் இலகுவான விதத்தில் விளம்பரப்படுத்துதல் அவசியமாக உள்ளதுடன் அதற்கேற்ற ஒரு பின்னணியில் மனிதஉரிமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கும் அதனை அறிக்கை ரீதியில் பிரசித்திப்படுத்துவதற்கும் உந்துகோலான, சுயாதீனமான ஒரு பின்னணி மிகவும் அவசியமாகவுள்ளது. இதன் காரணமாக தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புப் பெற்றுக்கொடுப்பதற்கும் அறிக்கைகளைப் பிரசித்துப்படுத்துவதற்கும் பூரணமான சக்தி மிகுந்த மனிதஉரிமை சம்பந்தமான உயர்தானிகர் அலுவலகமொன்றினை நாட்டினுள் உருவாக்குவதன் மூலம் அரசு சிறந்த பலாபலன்களைப் பெறக்கூடுமென நான் எனது யோசனைகளை முன்வைத்தேன். எனது சுற்றுப்பயணத்தின் பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட தேசிய கொள்கையுடன் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய மனிதஉரிமை தொடர்பிலான உயர்தானிகர் அலுவலகமொன்றினை இணைத்துக்கொள்ளக்கூடிய வழிவகைகள் தொடர்பில் எனது காரியாலயத்தில் இலங்கை அரச அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.

அலுவலகம் தேசிய மனிதஉரிமை தொடர்பிலான வழிமுறைகளினை உருவாக்குவதற்காக இலங்கையின் அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொண்டும் செய்து கொடுக்கப்படும். இருப்பினும் பாதுகாப்புத்தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான இடைவெளியினை நிரப்புவதற்கு இது போதுமானதாக அமையமாட்டாது.