Tuesday, March 24, 2009

தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றல் தடைசெய்யப்பட்டது


கடந்த 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதியன்று கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனி மாதம் 7ம் திகதி பொழுது விடிவதற்கும் முன்பாக ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பஸ்வண்டிகளுடன் லொட்ஜ்களைநோக்கி வந்திறங்கிய பாதுகாப்புப்படையினர், தமிழினத்தவர்களுக்கு சொந்தமான லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்புத்தரப்பினரால் கொண்டுவரப்பட்ட பஸ்வண்டிகளில் ஏறுவதற்கு வழங்கிய நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே. இவர்கள் மத்தியில் இருதய நோயாளிகள், மற்றும் பல்வேறு நோய்நொடிகளினால் பீடிக்கப்பட்டு மருத்துவத்தேவைக்காக வந்திருந்தவர்களும், கொலை அச்சுறுத்தல்களினால் தப்பியோடிவந்து மறைந்திருந்தவர்கள், ஓரிருநாட்களில் தமது திருமணத்திற்காக மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 300ற்கும் மேற்பட்டதாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஓரிருதினங்களுக்குமுன் அதாவது ஆனி மாதம் 1ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மாஅதிபர் கூறியதாவது, எவ்விதகாரணமுமின்றி கொழும்பில் தமிழினத்தவர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடாதென்பதாகும். இவ்வாறு எவ்விதகாரணமுமின்றி அல்லது எதுவும் கூறாமல் தமிழினத்தவர்களை மிகவுங்குறுகிய ஒரு நேரத்தினுள் கொழும்பிலிருந்து வெளியேற்றல் அவர்களது அடிப்படையுரிமையினை பாதிக்கும் செயலென ஊநவெநச கழச Pழடiஉல யுடவநசயெவiஎநள மூலம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இங்கு வழக்குத்தொடுநராக இருந்த (ஊPயுன்) கொள்கைகளுக்கான மத்தியநிலையத்தின் இயக்குனர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து அவர்கள் கூறியதற்கிணங்க, இவ்வாறு தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுதல் பிழையான ஒரு செயலென்பதுடன், சட்டத்திற்குமுரணான, மனிதஉரிமை மீறப்படும் ஒரு செயலுமாகுமென்பதாகும். இதனை கருத்திற்கொண்ட உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 8ம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துக் கூறியதாவது, அரசபாதுகாப்புப்படைமூலம், இம்மக்களின் அடிப்படை உரிமைகளாகிய 12(1), 12(2), 14(1), H என்பன மீறப்பட்டுள்ளதென்பதையும் விளக்கி நின்றது.

இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தவுடன் அரசினால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் அவர்களது தங்குமிடங்களுக்கு அழைத்துவரப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக அவர்கள் வெளியிட்ட செய்தியில், தமிழ் மக்களுக்கு இவ்வாறானதொரு அசாதாரணத்தினை செய்தால் தமது அரசு பாரிய குற்றமொன்றை இழைத்துள்ளதுடன், தான் அதற்காக மன்னிப்புக்கோருவதாகவும் அறிவித்திருந்தார்.

இதற்கிணங்க வழக்குத்தொடுநரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் வழக்கு விசாரணைக்காக ஆனி மாதம் 27ம் திகதி எடுத்துக்கொள்ளப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பல மாதங்களாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரால் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2008ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கிணங்க அரசியலமைப்பின் சரத்துக்களாகிய 11, 12(1), 12(2), 13(1), 13(2), 14(1), H அடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தமிழ் மக்கள் சார்பில் அரசினால் மீறப்பட்டுள்ளதென நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும் உயர்நீதிமன்றம் இனிவருங்காலங்களில், தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் தடைசெய்யும் விதத்தில் கட்டளையினை பிறப்பித்ததுடன் இங்கு அரசசார்பில் தோன்றிய சொலிசிட்ட ஜெனரல் பாலித்த பிரணாந்து அவர்கள் வருங்காலங்களில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற இடமளிக்கமாட்டாரென்று குறிப்பிட்டதுடன், இத்துடன் சேர்ந்த யாதெனும் ஒரு செயல் இடம்பெறமுன் நீதிமன்ற அனுமதியினைப் பெறுவாரெனவும் உறுதியளித்தார்.

இவ்வழக்கின் விஷேடத்துவம் யாதெனின் இந்நாட்டில் முதல்முறையாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சிறுபான்மை இனத்தவரொருவர் அடிப்படையுரிமை வழக்கொன்றை தொடுத்ததுடன், இதனை உயர்நீதிமன்றம் பொதுமக்கள் நலன் வழக்கொன்றாகக் கருதி விசாரணைசெய்ய அனுமதி வழங்கியமையாகும். இன்னுமொரு விஷேடத்துவம் யாதெனின், அரசசார்பற்ற நிறுவனமொன்று குடிமக்களின் மனிதஉரிமைமீறல் தொடர்பில் தலையிடுவதும், நீதிமன்ற செயற்பாடுகளில் உட்புகுவதும், இதன்காரணமாக தமிழ் மக்கள் சட்டத்திற்கு முரணான விதத்தில் வெளியேற்றல் தடைசெய்யப்பட்டதுமாகும்.

No comments: