Monday, October 27, 2008

பாதிக்கப்பட்டவர்


‘பெயரைச் சொல்லுங்கள்.‘
‘படாசாரா‘
‘முழுப்பெயர்?‘
‘படாசாரா தம்பிமுத்து‘
‘என்ன நடந்தது?‘
‘என்னுடைய மகனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’
‘யார் செய்தார்கள்?‘
‘…………………‘
‘யார் சுட்டார்கள்?
‘மகனது குழந்தைகள் மூவரையும் நான்தான் பராமரித்து வருகின்றேன்.
ஏன்னையும் கொன்று விடுவார்கள்..’
‘நான் கேட்பது சுட்டவர்களைக் கண்டீர்களா?’
‘ஆம்’
‘எனவே யார் சுட்டது?’
‘இறந்தவர் இறந்து போய்விட்டார். புதைத்துவிட்டோம். மூன்று குழந்தைகளையும்
வாழவைப்பதற்கு ஒரு தொழில் கிடைத்தால்’
‘தங்களது கணவர்?’
‘அவர் இறந்து 18 வருடங்களாகின்றது’
‘தீடீர் மரணம்?’
‘ஆம்’
‘காரணம்?’
‘சுட்டுக்கொன்றார்கள்இ நான்கு நாட்கழுக்குப்பின் உடலைக் கண்டுபிடித்தோம்.
அரைவாசி எரிந்த நிலையில்’
‘யார் கொலை செய்தார்கள்?’
‘……………………..’
‘நான் கேட்பது யார் கொலை செய்தார்களென்று?’
‘அப்பா மரணிக்கும்பொழுது மகனுக்கு 10 வயதுஇ மகனை கஷ்டப்பட்டுப் படிப்பித்தேன். அவர்தான் எங்களை பராமரித்தது’
‘மகனின் மரணத்தின் தொடர்பில் பொலிஸிற்கு வாக்குமூலம் கொடுத்தீர்களா?’
‘ஆம்’
‘எங்களால் உங்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்து உதவமுடியும். சாட்சி சொல்ல விருப்பமா?’
‘………………………’
‘சர்வதேச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் தகவல்களை அனுப்பமுடியும்’
‘மகனின் இளைய மகனுக்கு ஐந்து வயதாகின்றது. இன்னுமொரு 10 வருடங்களின்பின் அவனையும் கொண்டுசென்று சுட்டுக்கொன்று விடுவார்களோ தெரியவில்லை. இங்கு மிஞ்சுவது பெண்கள் மாத்திரமே’
‘படாசாராஇ நான் கேட்பது ஒரு விடயம்இ நீங்கள் கூறுவது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’
‘ஐயா நான் கூறுவது ஒரு விடயம்இ நீங்கள் கேட்பது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’

பரக் ஒபாமா பின்லாடன் மூலம்

Back to HOME Page....

No comments: