Wednesday, March 25, 2009

பயங்கரவாதமும் பயங்கரவாதியும்: வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லிற்கு (ஆக)


எனக்குத்தெரிந்த ஒரு நபர் ‘புபே’ (Buffet) என்ற சொல்லிற்குரிய கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார். “விரும்பியளவிற்குப் பகிர்ந்துண்ணுங்கள்”. உண்மையும் இதுதான் ‘புபே’ என்ற பிரெஞ்சுச் (French) சொல் இலங்கையில் புளக்கத்திற்கு வந்ததும் புகையிரத நிலையங்களில் காணப்பட்ட ‘புபே’ அனைத்தும் பவட் ஆகமாறியது. இதன்பின் உணவகங்களிலும், திருமண இல்லங்களிலும் ‘புபே’ பழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இருப்பினும் இச்சொல்லுக்குரிய சரியான மொழிபெயர்ப்பை சிங்களமொழியில் கொடுக்கக்கூடிய ஒருவர் இலங்கைப் பிரஜையாகிய சபாநாயகர் மாத்திரமே.

இதேபோன்றுதான் எமது மொழியுடன் சேர்ந்த இன்னுமொரு சொல் Terrorism மாகும். இது ஒரு லத்தீன் சொல்லாகும், பின் இது ஆங்கிலத்துடன் கலந்து எம்மிடம் புழக்கத்தில் வந்தவுடன் நாம் இதனை பயங்கரவாதமென்று அழைத்தோம். (Terror- பயங்கர, ism- வாதி Terrorism- பயங்கரவாதி) ‘புபே’ என்பதைப்போல் பயங்கரவாதத்தையும் தெளிவுபடுத்துவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். பயங்கரவாதத்தை விளக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. இதனால் இக்கடிதத்தைப் படிப்பவர் இவ்வாறு இதைக் குறிப்பிடுவர், “மடையர்களே சற்று உங்களை சூளவுள்ள நிலையினை அவதானியுங்கள், எமது நாட்டில் மாத்திரமல்ல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் எமக்குத் துணைநிற்கும் பாகிஸ்தானைக்கூட பயங்கரவாதம் அழித்துள்ளது. இதனால் இன்னமும் இதற்கென்று தனி விளக்கமும் வேண்டுமா? பயங்கரவாதமென்பது பயங்கரவாதம்தான்."

இருப்பினும், சற்று நிதானமாக யோசித்துப்பார்த்தால் உங்களால்கூட விளங்கக்கூடிய ஒரு விடயமென்னவென்றால், பயங்கரவாதத்திற்கென விளக்கமொன்று இல்லாதிருத்தல் இதன் தனித்துவமாகும். இதனால் பயங்கரவாதம் தொடர்பில் பேச ஆரம்பித்தோமானால் எமக்குக் கூறக்கூடிய ஒரு விடயம், இது தற்கொலைக்குண்டுகளையும், அப்பாவிப்பொதுமக்களின் உயிரைப் பிணையாகவைத்தலையும் குறிப்பிடும் ஒரு சொல்லல்ல.

நாம் மிகவும் இலேசான ஒரு மொழிபெயர்ப்பை/விளக்கத்தை எடுப்போமேயானால்; உதாரணமாக அரசியல் தகவலொன்றை பரிமாற்றுவதற்காக, வேண்டுமென்றே/கவனமின்றி (கவனயீனத்துடன்) பொதுமக்கள் (சிவில்) கொலைசெய்தல் அல்லது காயப்படுத்துதல் இல்லாவிடின் அவர்களது சொத்துக்களை பாரியளவில் சேதப்படுத்துதல் பயங்கரவாத வன்முறையென ஒருவரால் அனுமானிக்க முடிகிறது. தற்பொழுது இவ்வாறு இதை நோக்கினால் பயங்கரவாதமென்பது வன்முறையினைப் பயன்படுத்தும் ஒருமுறையாகும். அதாவது எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒருமுறையென்பதாகும். அதாவது எவரொருவர் விரும்பினால் தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காக வன்முறையினைத் தேர்ந்தெடுக்கும் எவராலும் பணன்படுத்தக்கூடிய ஒருமுறையாகும் … குறிப்பிட்டளவு படை (மிலிடரி) அல்லது அரசியல் மாற்றுமுறை சிலவற்றை தம்வசம் வைத்திருக்கும் பலவீனமான குழுவொன்றினால் பயன்படுத்தப்படும் ஒருமுறை. உதாரணமாக அல்கய்டா அல்லது ETAவை எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் இந்த முறையினாலேயே, மிகவும் சக்திவாய்ந்த ஒரு அமைப்பினாலும்கூட வன்முறையினைப் பயன்படுத்தும் முறையாக கையாளமுடியும். உதாரணமாக வேறு மிலிடரி முறைகளைப் பயன்படுத்தக்கூடிய கெரில்லாக்குழுவும், இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். சிவில் யுத்த நிலைமைகளின்போதும்கூட குழப்பங்களை ஏற்படுத்தும் குழுக்களால்கூட வேறு வழிமுறைகள் இருந்தபோதும்கூட இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். பலவீனமான அரசாங்கமொன்றிலிருக்கும் அவாவுடன் கூடிய அனைத்துக் குழுக்களும் மிலேச்சத்தனமான பல்வேறு முறைகளிடையே இம்முறையினை பயன்படுத்தலாம். உதாரணமாக சோமாலியாவை நினைவில் கொள்க.

இதேபோன்றுதான் இவ்வாறானதொரு அரசியல் வன்முறையினை அரசபடைகளால்கூட செயற்படுத்தமுடியும். 1985ல் பிரான்ஸ் நாட்டினால் கிறீன் பீஸ் அமைப்பிற்குரிய றேன்போ வொறியர் கப்பலை மூழ்கடித்தல், 1986ல் அமெரிக்கர்களால் லிபியாவின் ட்ரிபொலி நகரத்திற்கு குண்டுகளை வீசியமை என்பன அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முறைகளுக்குரிய உதாரணங்களாகும். அதேபோல் 2வது உலகப்போர் அண்மித்தபோது தோழபடைகளினால் ஜேர்மனின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டுவீசியமை, 1945ல் அமெரிக்காவால் ஜப்பானின் கிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களுக்கு அணுகுண்டுவீசியமை என்பன ஆயுதக் கலவரத்தின் பின்னணியில் வேறு வன்முறைகளையும் பயன்படுத்தும் அதேநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினை பயன்படுத்தும் செயல்களாகக் கூறமுடியும்.

இதனடிப்படையில் ‘பயங்கரவாதம்’ என்பது ஒருவிதத்தில் அரசியல் வன்முறையென்று பொருள்கோடல் செய்யப்படுகையில், இதனால் இது கட்டாயமாக ‘பிழையான’ ஒரு விடயமல்ல. ஏதாவதொரு செயலுக்காக ‘வானிலிருந்து குண்டுகளை வீசுதல்’ அல்லது படையெடுப்பின்போது அல்லது ‘சுற்றிவளைப்பு’ என்று கூறியவுடன் அச்செயல் ஒதுக்கப்படுவதில்லை என்பதைப்போல், இவ்வாறு பார்க்கும்போது அவ்செயல் அல்லது இச்செயற்பாடு பயங்கரவாத செயலாக குறிப்பிடுதல்மூலம் அச்செயற்பாட்டின் காரணத்திற்கான கலந்துரையாடலுக்கு பின்னணியினை அமைத்தலென்பதாகும்.

சரி, சரி இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கின்றேன் பயங்கரவாதமென்பதை நாம் இன்று பயன்படுத்துவது இங்கு குறிப்பிட்டதைப்போன்று, அதாவது இன்னுமொரு ‘அரசியல் வன்முறை’ என்றல்ல, முதலில் நாம் பயங்கரவாதமென்பது ‘வன்முறையினை பயன்படுத்தும் ஒருமுறையாக’ அல்லாமல் ஒருவிதமான நபர்கள் குழுவாகவும், இதனை ஒருவிதமான வழிமுறையாகவும் அல்ல. இது ஒருவிதமான யுத்த செயற்பாடாகும். ஒரு குறிப்பட்ட நபர் செய்யும் ஒரு செயற்பாடாக அல்ல. இதனை ஒருவிதமான நபராகக் காணப்பழகியுள்ளோம்.

இதனால் இப்பொழுதுள்ள பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாத குழுக்கள், பயங்கரவாக தலைவர்கள் இதே இவ்வாறானதொரு முறையில் இவ்வாறு ‘லேபல்’ ஒட்டுவதற்கு (பாகுபடுத்துதல்) யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்வதற்கு காட்சி அவசியமில்லை. ஏதாவதொரு குழு ‘பயங்கரவாதிகளாக’ பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பின் அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலிலும் ‘பயங்கரவாதிகளாகவே’ பாகுபடுத்த (லேபலிடுவதற்கு) இவர்கள் குறிப்பிட்ட செயலைச் செய்யவேண்டியதில்லை.

இரண்டாவதாக, சட்டரீதியில் இந்த பயங்கரவாதத்திற்கான பொருள்கோடல் நாம் ஏற்கனவே வழங்கியதைவிட விரிவாகவே உள்ளது. சட்டரீதியில் பயங்கரவாத்திற்கான பொருள்கோடலைப் பார்ப்போமானால் ‘சிவில் சமூகத்திற்கு தாக்குதலை மேற்கொள்ளல்’ என்பதற்கு அப்பால் சென்று சொத்துக்களுக்கெதிரான வன்முறை மற்றும் நாட்டின் அடிப்படை வசதிகளுக்கு (உட்கட்டமைப்பு வசதிகள்) ஏற்படுத்தப்படும் தாக்குதல்களையும் உள்ளடக்கும்விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சில சட்டமுறைகளின்கீழ் பாரியவகையில் சிவில் சட்டங்களை மீறும் செயற்பாடுகள்கூட ‘பயங்கரவாதம்’ என்ற கருப்பொருளுக்குள் அடக்கப்படுகின்றது.

No comments: