Monday, March 30, 2009

வன்னி மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற தேவைப்பாடு அரசிற்குண்டா?


தாரா சிறீராம்

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வன்னி மக்களின் உண்மைநிலையினை கண்டறியும்பொருட்டு நாங்கள் அப்பிரதேசங்களில் சமூகசேவையில் ஈடுபடுபவர்களையும், மதகுருமார்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தோம். எமது சுற்றுப்பயணத்தின்போது கிடைத்த தகவல்களின்படி வன்னி மக்களின் வாழ்க்கை பின்வருமாறு அமைகின்றது.

யுத்தக் காரணங்களினால் இற்றைக்கு வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையாகிய 419000; பேரில் இடம்பெயர்ந்துள்ளோர் 315000 பேர் ஆவர், இவர்களில் அதிகமானோர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர் என்பதுடன் அரசினால் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். அரசு இவ்வாறு சூனியப்பிரதேசங்களாகக் குறிப்பிட்டுள்ள இடப்பரப்பு 10 கிலோமீற்றர் சதுரப்பரப்புடையதாகும். ஆனால் இடம்பெயர்ந்துள்ளோர் தொகை 315000 பேராகும். இவ்வாறான ஒரு எண்ணிக்கைக்கு இவ் 10கிலோமீற்றர் சதுரப்பரப்பு போதுமானதா என்பது ஒரு பிரச்சனையாகும். எமது கருத்துப்படி இது எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதாகும்.

இன்னுமொரு பிரச்சனை பல்வேறு மக்கள் இந்த சூனியப்பிரதேசமாக கருதப்படும் பிரதேசத்தினுள் நுழையாமல், இவர்கள் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களினுள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதற்குக்காரணம் இப்பிரதேசங்கள் சூனியப்பிரதேசமாகக் கருதப்பட்டிருந்தாலும், இதற்குமுன் சூனியப்பிரதேசங்களாகக் கருதப்பட்ட பேசாளை மற்றும் மடு தேவாலயம் ஆகியன சூனியப்பிரதேசங்களாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்குரிய ஆணையாளரினால் (UNHCR) மேற்பார்வை (கண்காணிப்பு) செய்யப்பட்டவையாகும். இவ்வாறு எவராலும் கண்காணிப்புக்கு உட்படவில்லையென்பதனால் இடம்பெயர்ந்தோர் மிகவும் பயத்துடன் வாழ்கின்றனர்.

மற்றுமொரு விடயம் இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கான உணவுப்பிரச்சனையாகும். தற்போதைக்கு ஐக்கிய நாடுகளின் உணவுப்பொதிகளைக் கொண்டுசென்ற food convey இரண்டும் மற்றும் அரசமுகவர்களூடாகச் சென்ற இரண்டு food convey மாத்திரமே வன்னியைச் சென்றடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மூன்றாவது food convey வன்னியைச் சென்றடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கு மேலாக வன்னியிலுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால்மா (குழந்தைகளுக்குரிய), பால்மா, சீனி, தேயிலை, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, நுளம்புத்திரி, மற்றும் குடிநீர் என்பவற்றில் பாரியளவிலான தட்டுப்பாடு நிலவுகின்றது. பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 1200 என்பதுடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 350தாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தமது உணவுகளை சமைத்துக்கொள்ளவும் முடியாதுள்ளது. தட்டுப்பாடுள்ள சில உணவுப்பொருட்களின் விலை மிக உயர்வாக இருப்பதனால் இவற்றினை இடம்பெயர்ந்துள்ள மக்களால் கொள்வனவு செய்யமுடியாதுள்ளது.

தற்பொழுது வன்னியில் மழைகாலம் ஆரம்பித்துள்ளதுடன், மக்கள் பொதுவாகவே மரநிழலிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலுமே தங்கியிருந்தனர். அதனால் மழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலை மக்களை மிகவும் துன்பகரமாக நிலைக்குத் தள்ளுகின்றது. வயல்கள் நீரினால் நிரப்பப்பட்டுள்ளதனால் மக்கள் தர்மபுரமூடாக வெளியேறியுள்ளனர். இந்த தர்மபுரம் பாதையூடாக செல்லும் வாகனங்கள் மிகவேகமாக செல்வதனால் நாள்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது. மிகவும் வேகமாகச் சென்று வாகனத்தில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்தது. சிறிய பிரதேசத்தில் அதிக மக்கள் குடியிருக்கின்றனரென்பதைக்கூட கருத்திற்கொள்ளாது வாகனஓட்டுனர்கள் தமது வானகங்களைச் செலுத்துகின்றனர். இது தொடர்ந்து வீதி விபத்து ஏற்பட வழி செய்யும். இவர்கள் குடியிருப்பதற்கு தேவையான கூடாரங்களை அமைப்பதற்குரிய அடிப்படைப் பொருட்களைக்கூட அரசு வழங்கவில்லை. வன்னியில் ஒரு சீமேந்து பையின் விலை ரூபாய் 27000ஐ அண்டியுள்ளது.

சீமேந்தை வன்னியினுள் கொண்டுசெல்வதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டரீதியான தடையினால் ஐக்கிய நாடுகள் அல்லது வேறு சமூகசேவை நிறுவனங்கள் இந்த மக்களுக்கு எவ்வித நிர்மாணப் பணியினையும் செய்துகொடுக்கவில்லை. இப்பிரதேசங்களிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு பாடசாலை மாத்திரம் தமது பணியினை மேற்கொள்கின்றது. இது காலையில் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் குழந்தைகளுக்கு, மாலையில் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகளுக்கு என கல்வியினைப் புகட்டுகின்றது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீதிவிபத்து காரணமாக மாலையில் நடாத்தப்பட்டுவந்த வகுப்புக்கள் (பாடசாலை) நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள்கூட இல்லாத ஒரு நிலை நிலவுகின்றது.

மழைக்காலம் ஆரம்பித்தவுடன், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மலேரியா, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. காரணம் அதிகபட்சமான மழையினால் மலசலகூடக் குழிகள் நிரம்பியுள்ளதால் இக்குழிகளுக்கு மாற்றீடாக மண்ணெண்ணை பரல்களை வெட்டிப் பாவிப்பதனால், வடிந்தோடும் மழைநீரில் இந்த அழுக்குகள் சேர்வதனால் இந்நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை முறைகள் வழமைபோல் இடம்பெற்றாலும், இங்குள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. விஷேடமாக மழைகாரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான வைத்திய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென்பதுடன் வைத்தியஅதிகாரிகள், சுகாதார சேவைஅதிகாரிகள் எவரும் இந்த இடம்பெயர்ந்த மக்களைச் சென்று பார்வையிட முடியாதுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்குரிய மிகப்பெரிய பிரச்சனை பாம்புக்கடி. கடந்த 10 நாட்களுக்குள் வயது வந்தவர்கள், குழந்தைகளுட்பட 200க்கும் மேற்பட்டோர் பாம்புகளினால் தாக்கப்பட்டுள்ளனரென்பதுடன், சிலர் சரியான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துமுள்ளனர்.

இதேபோன்று வன்னி மக்களிடையே எவ்விதமான தொலைத்தொடர்பு சேவையும் இல்லையென்பதுடன், ஐக்கிய நாடுகள் மூலம் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ளவென அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிலையமொன்று மாத்திரமே மிகுதியாக இயங்குகின்றது. இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கு வன்னியினுள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை, மக்கள் இவ்வாறானதொரு துன்பகரமாக சூழலில் இருக்கும்போதுகூட அரசு ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சமூகசேவை அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற்றுவதன்மூலம் இம்மக்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைக்கு ஒட்டுசுட்டானிலுள்ள தமது சொந்தங்களின் வீடுகளில் சிலர் தங்கியுள்ளனர். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடுகளில் 40க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவ்வீடுகள் தற்போது பெய்துவரும் கடும் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காதவையாகும்.

தற்பொழுது வன்னி மக்கள் வறுமை, சுகாதார சீர்கேடு, தங்குமிட வசதியின்மை, இயற்கையின் நிகழ்வுகள், மரணபயம் போன்றவற்றினால் கடுமையாகத் தாக்கமடைந்துள்ளனர். சிறு குழந்தைகள் போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் வாழ்வதற்குரிய பாதுகாப்பான இடம் இலங்கையில் எங்குமேயில்லை.

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த வன்னி மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வரும்படி அரசு அழைப்பு விடுத்திருந்தது. நாம் நடத்திய ஆய்வின்படி ஐக்கிய நாடுகளின் முகவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர். அதாவது இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்கு வவுனியாவில் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதென்பது அவர்களது கருத்தாகும். இதில் ‘மனிக் பாம்’ என்ற இடம் துப்பரவு செய்யப்பட்டிருந்ததுடன் மற்றைய இரண்டு பிரதேசமும் எவ்வித முன்னேற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. மனிக்பாம் என்ற இடத்தில் அதிகபட்சமாக 4000 பேர் மாத்திரமே தங்கக்கூடியதாக வசதிகள் இருந்தபோதும், அரச அறிவுரையின்படி 60000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கலாமென்று குறிப்பிட்டிருந்தது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தின்போது வன்னியிலிருந்து 315000 பேர் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்திருப்பின், ஏற்கனவே வவுனியாவில் குடியிருக்கும் 182000 பேருடன் சேர்ந்து இந்த இடம்பெயர்ந்த மக்களும் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியிருப்பர். மற்றைய விடயம் தற்பொழுது இம்மக்களிருக்கும் இடத்திலிருந்து வவுனியா மற்றும் மன்னாரிற்கு வருவதாயின் மிகவும் தூரப்பயணமொன்றை காடுகளூடாக மேற்கொள்ளவேண்டியிருக்கும். இது மிகவும் பயங்கரமான ஒரு மார்க்கமாகும். உண்மை என்னவென்றால் வன்னி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரமாட்டார்களென்பது ஏற்கனவே அரசு அறிந்த ஒரு விடயமாகும். இது அரசின் முன்னேற்பாடுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இதனால் இன்று வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்கவேண்டுமென்பதில் அரசிற்கு எவ்விததேவையும் இல்லையென்பது எமது பிரச்சனையாகும்.

வன்னிப் பிரதேசம் இன்று அரசின் முக்கிய இலக்காக உள்ளதுடன், எதிர்வரும் சில வாரங்களில் நிலைமாறாதுபோனால், வன்னி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறிகாக மாற இடமுள்ளது.

Back to Home page...

மக்களைக் கொடுமைப்படுத்துவது பொதுவில் நிறுத்தப்படவேண்டியதாகும்


அன்டனி விக்டர் சோ செ அடிகள்
மன்னார்

கலந்துரையாடியது –
தாரா சிறீராம்


தற்போது அரசின் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மன்னாரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது?

தற்போதைய அரசின் இந்த யுத்த செயற்பாடு போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களிலும் தாக்கஞ்செலுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடப்பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்விட மிகமுக்கியமான விடயம் இங்குள்ள மக்கள் அனைவரும் மனரீதியில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவர்களது உறவுகள் வன்னிப் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சுக துக்கங்களை அறியமுடியாமலுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் இங்கு வாழும் மக்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கின்றனர்.

இன்று மன்னார் மக்களின் வாழ்க்கை எவ்வாறுள்ளது?

சாதாரண வாழ்க்கையினைப் பற்றி விபரிப்பதாயின் மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்கின்றனர், கோயிலுக்குச் செல்கின்றனர், தேவஸ்தானத்திற்குச் செல்கின்றனர். இவையெல்லாம் வெளிப்படையாகக் காணக்கூடியவையாக இருந்தாலும், மனரீதியில் இவர்கள் மிகவும் பயத்துடன்தான் வாழ்கின்றனர். எமக்கு ஏன் இப்படி நடக்கின்றது அல்லது நடக்கப்போகின்றது என்ன என்பதுதான் இவர்களின் பயமாக இருக்கின்றது. வன்னியில் இடம்பெறுபவை தொடர்பாக இவர்களால் எதுவும் அறியமுடியாதுள்ளது. இதனாலுங்கூட அவர்களின் மனதில் பயம் நிலவுகிறது.

மன்னாரிலுள்ள மக்களின் மனிதஉரிமை தொடர்பாகப் பேசினால்…

உதாரணமாக மன்னார், வவுனியா போன்ற பிரதேசங்களுடன் இந்த விடயத்தை நான் ஒப்பிடப்போவதில்லை. இருப்பினும், மன்னாரில் முன்னையதைவிட சற்று சுபமான நிலை மாறியுள்ளது. இது பிரச்சனை எதுவுமில்லை என்பதைக் குறிப்பிடவில்லை. காணாமற்போதல்கள் இடம்பெறுகின்றது. இது ஒரு பாரிய பிரச்சனை. கொலைச்சம்பவங்கள் ஆடிமாதத்திலிருந்து எமக்கு அறிக்கையிடப்படவில்லை. கைதுசெய்யும் நடவடிக்கைகள்கூட இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக கடத்தல்கள் இடம்பெறுகின்றது.

மன்னாரிலுள்ள கலிமுண்டாய் மற்றும் சிறுக்குண்டால் முகாம்களின் தற்போதைய நிலை எவ்வாறுள்ளது?

மனிதாபிமானத்துடன் பார்த்தால் இது மிகவும் வேதனைக்குரிய விடயம். இம்மக்கள் தாம் விரும்பிய இடத்தில் சென்றுவாழ இடமளிக்க வேண்டும். இருப்பினும் பாதுகாப்புத்தரப்பினரின் கருத்துப்படி இம்முகாம்களில் தேசியபாதுகாப்புக்கு பங்கம் விழைவிக்கக்கூடியவர்கள் இருக்கின்றனரென்பதாகும். இந்த அனுமானத்திற்கு எமது பதில் அவ்வாறாயின் அவர்களைத் தேர்ந்தெடுத்து நன்நடத்தை நிலையங்கள் போன்ற ஒருவழியினை அமைக்கும்படியாகும். பொதுவாக அனைவரையும் இவ்வாறு அடைத்தல் பிழையென்பது எமது கருத்தாகும். குறிப்பாக மருந்துதான் வாழ்க்கையென வாழ்பவர்களும் இங்குள்ளனர். கற்பிணித்தாய்மார்கள் உள்ளனர். வயதுவந்தவர்கள், பிள்ளைகள் என்போரும் இங்குள்ளனர். இவர்களுக்கும் சாதாரணமான நிம்மதியான ஒரு வாழ்க்கையினை கொண்டுநடாத்த ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும்.

மடு தேவாலயத்தின் நிகழ்கால நிலைமை தொடர்பில் குறிப்பிட்டால்….

மடு தேவாலயத்தை பலத்த பாதுகாப்பின்கீழ் அரசு செயற்படுத்துகின்றது. தேவாலயத்திற்குப் பொறுப்பான குரு உட்பட 11பேர் அங்கு தற்போதைக்குத் தங்கியுள்ளனர். இதற்குமேலாக இங்கு ஒருவர் வருவதாயின் அனுமதி பெறவேண்டியிருக்கும். இச்செயற்பாடு மிகவும் நீண்டகாலத்தை எடுக்கும். இரு ஒரு புனிதத்தலமாக இருந்தாலும் மக்கள் அங்கு வழிபாட்டுக்குச் செல்லமுடியாதுள்ளது. இதுவொரு பாரிய பிரச்சனையாக உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இத்தியாகத்தை செய்கின்றோம்.

தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இந்தக் கொடுமையினைப்பற்றி உங்களது கருத்து என்ன?

எமது நிலை, பிழைசெய்தவர்களிருந்தால் அவர்களை சட்டப்படி தண்டிப்பதாகும். இலங்கை ஒரு குடியரசு நாடெனின் குடியரசு நாட்டினுள் இவ்வாறு குற்றமிழைப்பவர்களை தண்டிக்க நீதிமன்றமுறையிருக்கும். இருப்பினும் பொதுவில் ஒரு சமூகத்தை மாத்திரம் கொடுமைப்படுத்துவதை எம்மால் ஏற்கமுடியாது. இதனூடாக இனங்களிடையே குரோதம் அதிகரிக்கின்றது. இதனால் பொதுவில் மேற்கொள்ளப்படும் இக்கொடுமைகளை நிறுத்த வேண்டும். இலங்கை குடியரசு நாடாயின் சிங்கள, தமிழ் எவ்வினத்தவராக இருப்பினும் கௌரவத்துடன் மனிதனாக வாழக்கூடியதாக இருக்கவேண்டும்.

தற்போதைய அரசு மனிதஉரிமையினைப் பாதுகாப்பதில்லை. இதனால் இதற்குச் சர்வதேச தலையீடு அவசியமா?

ஆம், இது முழுஉலகளவிலும் செய்யப்படும் ஒரு உதவியாகும். தலையீடல்ல. எமக்கு சர்வதேச உதவி அல்லது ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. உலகில் ஒவ்வொரு பிரதேசத்திலும் மனிதஉரிமை நிலைமை வேறுபடுகின்றது. இன்று உலக நாடுகளை எடுத்துக்கொண்டோமானால் ஒருவரிலொருவர் தங்கியுள்ளது தெளிவாகின்றது. இது இலங்கையினையும் உள்ளடக்குகின்றது. இந்நிலை இலங்கையினால் உணரப்படவேண்டிய ஒரு உண்மையாகும். விஷேடமாக உலகளாவிய ரீதியில் மனிதஉரிமை அபிவிருத்தியடைந்துள்ளது. இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசக் கொள்கைகளும் இருக்கின்றது. இவற்றைக் கருத்திற்கொண்டு சர்வதேச ரீதியில் எமக்கு உதவ முன்வரவேண்டும்.

இந்த இனரீதியான பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியமென்று நினைக்கின்றீர்களா?

கண்டிப்பாக அரசியல் தீர்வு அவசியம். என்னால் எவ்வகையான தீர்வென்று நிச்சயப்படுத்த முடியாது. எமக்குத் தெரிந்தவகையில் தமது நாட்டின் அரசியல் பிரச்சனையின்போது பல்வேறு முறைமூலம் தீர்வுகண்ட நாடுகள் பலவற்றை உலகில் காணக்கூடியதாக உள்ளது. இவற்றிலொன்றை நன்றாக ஆராய்ந்து எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றை எம்மால் தெரிவுசெய்ய முடியும். இந்த நீண்டகால யுத்தத்திற்காக பல்வேறு தரப்பினரால் பல விடயங்களை தியாகஞ்செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால் எமக்கு அரசியல் தீர்வு அவசியம்.

Sunday, March 29, 2009

அகதிமுகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காட்சியளிக்கின்றது

ருகி பிரணாந்து கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான மனிதஉரிமை அமைப்பாகிய Law and Society Trustஇன் இணைப்பாளராவார். மிகவும் பிரபல்யமான மனிதஉரிமைப் பாதுகாவலராகிய இவர் சில நாட்கள் பாங்கொக் நாட்டில் அமைந்துள்ள Forum Asiaவின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். சில நாட்களுக்குமுன் மன்னார் பிரதேசத்தை பார்வையிட்டதன்பின் இவர் ‘சமபிம’விற்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு.

இன்று அனைவரும் யுத்தத்தைப் பற்றிபேசும்போது நீங்கள் மாத்திரம் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடச் சென்றீர்கள்?

சாதாரணமாக எமது கருத்து வட, கிழக்கு மாவட்டங்கள் ஓமந்தையிலிருந்தே பிரிய ஆரம்பிக்கின்றன என்பதாகும். இருப்பினும் எமது சுற்றுப்பயணத்தின் பின் கண்ட விஷேடமான ஒரு விடயம் யாதெனின் இப்பொழுது நாடு மதவாச்சியில் பிளவுபடுத்தப்படுகின்றதென்பதாகும். கொழும்பிலிருந்து அல்லது வேறொரு பிரதேசத்திலிருந்து வவுனியாவிற்கு அல்லது மன்னாரிற்கு செல்ல விரும்புவர்கள் மதவாச்சியிலுள்ள சோதனைச்சாவடியில் இறங்கி அதிலிருந்து வேறொரு வாகனத்தில்தான் செல்லவேண்டியுள்ளது. வவுனியாவரை சென்ற ரயில்கள் தற்பொழுது செல்வது மதவாச்சிவரைக்கும் மாத்திரமே. காலை 3.45, 7.30 மற்றும் இரவு 10.30ற்கும் மதவாச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் மன்னாரிலிருந்து வரும் எவராலும் ஏற முடியாது. காரணம் மன்னார் வீதி காலை 6.00மணிக்குத்தான் திறக்கப்படுகின்றது. இந்த நேரங்கள் காலநேர அட்டவணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டவை எனவே மன்னார் வாசிகளுக்கு இவற்றில் பயணிப்பதற்கு சரியான நேரத்திற்கு மதவாச்சிக்கு வரமுடியாதுள்ளது. பொருட்களைக் கொண்டுசெல்லும்போதுகூட மதவாச்சியைக் கடப்பதாயின் வேறு வாகனங்களையே ஒழுங்குபடுத்தவேண்டியள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வாகனங்களுக்குரிய கூலி பலமடங்குகளாக அதிகரிக்கும். இவ்வனைத்து செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டியது மன்னார் சாதாரண மக்களாகும். மற்றைய விடயம் மன்னாரில் வாழும் அனேகமக்கள் கத்தோலிக்க தமிழ் மக்களாவர். மடு மாதாவின் வருடாந்த உற்சவத்தின்போது கிழக்கிலிருந்து வந்த சிங்கள-கத்தோலிக்கர்களுக்கு மதவாச்சியிலிருந்து மன்னாரிற்கு செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு இராணுவத்தினால் உணவு வழங்கப்பட்டதுடன், பஸ்களில்; ஏற்றிச்சென்று மன்னாரில் இறக்கிவிடப்பட்டனர், மீண்டும் அங்கிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதுடன், இருப்பினும் மன்னாரிலிருந்து வந்த மக்களும் தமது பிரதேசத்திலுள்ள முக்கியமான இடத்திற்குச்செல்ல இவ்வாறானதொரு ஏற்பாடு செய்துகொடுக்கப்படவில்லை.

உங்களது கண்ணோட்டத்தில் மன்னார் மக்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறுள்ளது?

இவர்களிடத்தில் காணப்படும் மிகமுக்கிய விடயம் பயமாகும். நாட்டு நிலைமையின்படி இவர்களுக்கு உதவ எவரும் இல்லையென்பது இவர்களது எண்ணமாகும். மற்றைய விடயம் மன்னாரில் தொடர்பாடல் சேவைகளிலுள்ள பின்னடைவு, மன்னாரில் அனைத்து கையடக்க தொலைபேசி அமைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களது எண்ணம் இவை இராணுவத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதென்பதாகும். எமது சுற்றுப்பயணத்தின்போது ஒரு பொலிஸ் அதிகாரி எம்மிடம் கூறியதாவது, இராணுவம் தற்பொழுது செய்துகொண்டிருக்கும் செயற்பாடுகளுக்கு கையடக்க தொலைபேசிகளின் பாவனையினால் நட்டம் அல்லது தடங்கல்கள் ஏற்படுவதால் அவற்றினைத் துண்டித்துள்ளனரென்பதாகும்.

அதேபோன்றுதான் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்குத் தோன்றும்போதெல்லாம் பொதுமக்கள் மன்னாருக்குள் பிரவேசிப்பதை தடுக்கின்றனர்.

தற்பொழுது மன்னார் நகரத்தினுள் நிலவும் நிலைமை எவ்வாறுள்ளது?

மன்னார் நகரத்தினுள் ஊரடங்கும் சட்டம் இல்லாவிடினும்கூட இரவு 7.00 அல்லது 8.00 மணியாகும்போது மக்கள் தெருவிற்கு வருவதில்லை. கடத்தல்கள் மற்றும் கொலைச்சம்பவங்கள் இன்னமும் இடம்பெறுவதாலும், இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தமக்கு தமிழ் மொழியில் பொலிஸில் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாதென்பதும் அதிகாரிகள் தமக்கு வேண்டியதுபோல் முறைப்பாடுகளை எழுதிக்கொள்வதும், முறைப்பாட்டின் பிரதிக்குப் பதிலாக அதனை சுருக்கமாக எழுதி பொதுமக்களிடம் வழங்குவதனாலும் மன்னார் மக்களுக்கு தமது உயிரைப் பற்றி எவ்விதத்திலும் நம்பிக்கையில்லையென்பதுடன், உத்தரவாதமுமில்லை.

உங்களது கருத்தின்படி வடகிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் இருக்கையில் மன்னாரில் மாத்திம் இவ்வாறானதொரு நிலைதோன்றக் காரணமென்ன?

முக்கியமான விடயம் போக்குவரத்துக் கஷ்டம். அரசு மன்னாரினுள்ளும் வேறு பிரதேசங்களிலிருந்தும் உள்வருகையினைத் தடைசெய்ய முயற்சி செய்கின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகளின் முகவர் இடம்பெயர்ந்தோரைச் சென்று பார்வையிட முயற்சி செய்தபோது, அவர் மன்னாரினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாதென அரசு குறிப்பிட்டிருந்தது.

தங்களது சுற்றுப்பயணத்தின்போது மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம்களை பார்வையிட்டீர்களா? அங்கு நீங்கள் கண்டவற்றை விபரிக்க முடியுமா?

இந்த முகாம்கள் ஒருவகையான சிறைச்சாலைகளாக காட்சியளித்தன. இந்த முகாம்களிலிருந்து சிலர் வெளியேசெல்ல தடைசெய்யப்பட்டிருந்தது. சிலர் வெளியே சென்றாலும் மாலையாகுமுன் முகாமிற்குள் வரவேண்டியிருந்தது. இங்கு உள்ளவர்கள் குற்றவாளிகளல்ல. வேளாண்மை செய்துகொண்டு, மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டவர்களும் கூறும் ஒரேயொருவிடயம் அவர்கள் யாரையும் நம்பி வாழவேண்டியவர்களல்ல (உணவிற்காக) என்பதாகும். 2770ல் முசலி பிரதேசம் மீட்கப்பட்டு தற்போதைக்கு ஒரு வருடம் கடந்த நிலையில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். கடந்த வைகாசி மாதம் நானத்தன் பிரதேசத்தில் அரசபடைகள் சுவரொட்டிகளில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர், அதாவது LTTEயுடன் தொடர்புடையவர்கள் தயவுசெய்து இராணுவமுகாமிற்கு வந்து சரணடையுமாறு என்பதாகும். இதற்குமுன் LTTEயினரினால் மக்கள் கட்டாய ஆயுதபயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இவ்சுவரொட்டிகளை பார்வையிட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலர் வைகாசி மாதத்தின்பின் இந்தியாவிற்குச் செல்ல காரணமாக அமைந்தது இச்சுவரொட்டிகளே.

LTTE அமைப்பினால் இவர்களுக்கிருந்த அச்சுறுத்தல்களென்ன? இன்னமும் அவ்வாறான பயமுறுத்தல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றதா?

தற்பொழுது அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை. இருப்பினும் LTTEயினர் தமது 18 வயது பூரணமாகிய பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் தமது அமைப்பில் இணைத்துக்கொண்டமையினால் இம்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். இருப்பினும் தமது பிள்ளைகளை வெளியேற்ற LTTE அமைப்பு அனுமதி வழங்கவில்லை. இதற்கான முக்கிய காரணம், அனேகபொதுமக்கள் படகுகள்மூலம் காட்டுவழியாக புல்மோட்டைப் பகுதியினூடாக, மேற்குக் கரையோரமாகிய தப்பி மன்னாரினுள் நுழைந்தனர். இதற்கும் மேலாக இரு தரப்பினரதும் யுத்தசெயற்பாடுகளினால் தமது உயிர்களைப் பாதுகாக்க சிலர் மன்னாரினுள் வர ஆரம்பித்தனர். இவ்வாறு வருபவர்களை இராணுவம் கலிமுண்டாயி மற்றும் திருக்குண்டால் போன்ற முகாம்களில் தங்கவைத்தனர். கடந்த பங்குனி மாதம் இச்செயற்பாடு ஆரம்பித்தது. தற்போதைக்கு கலிமுண்டாய் முகாமில் 500ற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். ஆனி மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருக்குண்டால் முகாமில் 100ற்கும் மேற்பட்டோர் வைக்கப்பட்டனர்.

இந்த முகாம்களிலுள்ள மக்கள் படையினரின் ஆதரவை நாடி வந்தவர்களா?

ஆம், மிகவும் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதனால் வந்தவர்கள் மூன்று தொடக்கம் நான்கு வயதையடைந்த சிறுவர்கள் தொடங்கி வயதுவந்த பெரியோர்கள்கூட குடும்பங்களாக இங்கிருக்கின்றனர். இவ்வனைவரினதும் சொந்தபந்தங்கள், நண்பர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இருக்கின்றனர். இருப்பினும் இவர்களைக்காண இம்மக்கள் செல்ல அனுமதிக்கப்படார். தற்பொழுது இம்மக்களின் கருத்து அவர்கள் இருந்த நிலையினைவிட அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனரென்பதாகும். தொழில்நிமித்தம் முகாம்களை விட்டு வெளியேறுவதாயின் அவர்கள் பாஸ் எடுக்கவேண்டியுள்ளது. பிணையாளர் ஒருவரை முகாமில் தங்கவைக்கவேண்டும். மீனவர்கள் மாலையானதுடன் தமது படகின் என்ஜின்களை இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும். இம்முகாம்கள் வேலி முட்கம்பிகளினால் பிற உலகிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் அரசினால் இவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளதா?

கலிமுண்டாய் முகாமில் அனைத்துத் தேவைப்பாடுகளும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் செய்யப்படுகின்றது. திரிக்குண்டால் முகாம் முக்கியமாக அரச கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது. உலக உணவுத்திட்ட அமைப்புமூலம் வழங்கப்படும் உணவு அரசினால் இம்முகாமிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த முகாமில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 126. இவர்கள் முகாம்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இருப்பினும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் தங்களது சில பாடங்களை கற்பதற்காக மன்னார் அல்லது வவுனியாவிற்கு செல்லவேண்டியிருந்தாலும் அரசு இதற்கு அனுமதி வழங்குவதில்லை. நோயாளர்கள்கூட தமது மருந்துகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பத்தில்கூட மன்னார் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதநிலை காணப்படுகிறது. (படையினர் அனுமதி வழங்குவதில்லை). முகாம்களில் சுகாதாரநிலைகூட நல்லநிலையிலில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 50 பாம்புகள்வீதம் முகாம்களில் அடித்துக்கொல்லப்படுகின்றன.

உங்களது கருத்துப்படி அரசு இவ்வாறு முகாம்களை அமைப்பதன் நோக்கமென்ன?

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முகாம்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கின்றனர். புதிய முகாம்களை ஆடி மாத்திலே அமைத்தனர். ஐக்கிய நாடுகளின் பிரசுரிக்கப்படாத அறிக்கையொன்றில் குறிப்பிட்டதற்கிணங்க அரசு தொடர்ந்து இவ்வாறான முகாம்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களுண்டென எச்சரித்திருக்கின்றனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் வவுனியாவிலுங்கூட இவ்வாறான முகாம்கள் அமைப்பதற்குரிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. அரசு வன்னியிலிருக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும்படி அழைத்து அவர்களை இந்த முகாம்களில் முடக்குகின்றனர். இந்த செயற்பாடு முற்றுமுழுதாகவும் அனைத்துலக மனிதஉரிமைக் கொள்கைகளுக்கெதிரான செயற்பாடாகும். இடம்பெயர்ந்தோர் தாம் விரும்பிய இடத்தில் வாழ உரிமையுடையவர்கள். அவர்கள் தமது குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து வாழும் உரிமையினை அரசு தடைசெய்துள்ளது. இவர்களுக்கெதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இவர்கள் முகாம்களில் கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ளவர்களின் சில பெற்றோர்கள் மன்னாரில் வாழ்கின்றனர். இருப்பினும் முகாமின் ஆதரவைத்தேடிவந்த மகன் தனது தாயைப்பார்க்கச் செல்லமுடியாத நிலையிலிருக்கின்றனர். இந்நிலை வெளியுலகிற்குத் தெரிவதில்லை. (அறிக்கையிடப்படுவதில்லை) முகாம்களினுள் சமூகசேவகர்களும், மதத்தலைவர்களும் மட்டும் தான் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அரசு இந்நிலைமையினை உலகத்திற்கு மறைக்க பெரிதும் முயற்சிக்கின்றது.

கலந்துரையாடல் - தாரா சிறீராம்


Wednesday, March 25, 2009

பயங்கரவாதமும் பயங்கரவாதியும்: வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லிற்கு (ஆக)


எனக்குத்தெரிந்த ஒரு நபர் ‘புபே’ (Buffet) என்ற சொல்லிற்குரிய கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார். “விரும்பியளவிற்குப் பகிர்ந்துண்ணுங்கள்”. உண்மையும் இதுதான் ‘புபே’ என்ற பிரெஞ்சுச் (French) சொல் இலங்கையில் புளக்கத்திற்கு வந்ததும் புகையிரத நிலையங்களில் காணப்பட்ட ‘புபே’ அனைத்தும் பவட் ஆகமாறியது. இதன்பின் உணவகங்களிலும், திருமண இல்லங்களிலும் ‘புபே’ பழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இருப்பினும் இச்சொல்லுக்குரிய சரியான மொழிபெயர்ப்பை சிங்களமொழியில் கொடுக்கக்கூடிய ஒருவர் இலங்கைப் பிரஜையாகிய சபாநாயகர் மாத்திரமே.

இதேபோன்றுதான் எமது மொழியுடன் சேர்ந்த இன்னுமொரு சொல் Terrorism மாகும். இது ஒரு லத்தீன் சொல்லாகும், பின் இது ஆங்கிலத்துடன் கலந்து எம்மிடம் புழக்கத்தில் வந்தவுடன் நாம் இதனை பயங்கரவாதமென்று அழைத்தோம். (Terror- பயங்கர, ism- வாதி Terrorism- பயங்கரவாதி) ‘புபே’ என்பதைப்போல் பயங்கரவாதத்தையும் தெளிவுபடுத்துவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். பயங்கரவாதத்தை விளக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. இதனால் இக்கடிதத்தைப் படிப்பவர் இவ்வாறு இதைக் குறிப்பிடுவர், “மடையர்களே சற்று உங்களை சூளவுள்ள நிலையினை அவதானியுங்கள், எமது நாட்டில் மாத்திரமல்ல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் எமக்குத் துணைநிற்கும் பாகிஸ்தானைக்கூட பயங்கரவாதம் அழித்துள்ளது. இதனால் இன்னமும் இதற்கென்று தனி விளக்கமும் வேண்டுமா? பயங்கரவாதமென்பது பயங்கரவாதம்தான்."

இருப்பினும், சற்று நிதானமாக யோசித்துப்பார்த்தால் உங்களால்கூட விளங்கக்கூடிய ஒரு விடயமென்னவென்றால், பயங்கரவாதத்திற்கென விளக்கமொன்று இல்லாதிருத்தல் இதன் தனித்துவமாகும். இதனால் பயங்கரவாதம் தொடர்பில் பேச ஆரம்பித்தோமானால் எமக்குக் கூறக்கூடிய ஒரு விடயம், இது தற்கொலைக்குண்டுகளையும், அப்பாவிப்பொதுமக்களின் உயிரைப் பிணையாகவைத்தலையும் குறிப்பிடும் ஒரு சொல்லல்ல.

நாம் மிகவும் இலேசான ஒரு மொழிபெயர்ப்பை/விளக்கத்தை எடுப்போமேயானால்; உதாரணமாக அரசியல் தகவலொன்றை பரிமாற்றுவதற்காக, வேண்டுமென்றே/கவனமின்றி (கவனயீனத்துடன்) பொதுமக்கள் (சிவில்) கொலைசெய்தல் அல்லது காயப்படுத்துதல் இல்லாவிடின் அவர்களது சொத்துக்களை பாரியளவில் சேதப்படுத்துதல் பயங்கரவாத வன்முறையென ஒருவரால் அனுமானிக்க முடிகிறது. தற்பொழுது இவ்வாறு இதை நோக்கினால் பயங்கரவாதமென்பது வன்முறையினைப் பயன்படுத்தும் ஒருமுறையாகும். அதாவது எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒருமுறையென்பதாகும். அதாவது எவரொருவர் விரும்பினால் தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காக வன்முறையினைத் தேர்ந்தெடுக்கும் எவராலும் பணன்படுத்தக்கூடிய ஒருமுறையாகும் … குறிப்பிட்டளவு படை (மிலிடரி) அல்லது அரசியல் மாற்றுமுறை சிலவற்றை தம்வசம் வைத்திருக்கும் பலவீனமான குழுவொன்றினால் பயன்படுத்தப்படும் ஒருமுறை. உதாரணமாக அல்கய்டா அல்லது ETAவை எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் இந்த முறையினாலேயே, மிகவும் சக்திவாய்ந்த ஒரு அமைப்பினாலும்கூட வன்முறையினைப் பயன்படுத்தும் முறையாக கையாளமுடியும். உதாரணமாக வேறு மிலிடரி முறைகளைப் பயன்படுத்தக்கூடிய கெரில்லாக்குழுவும், இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். சிவில் யுத்த நிலைமைகளின்போதும்கூட குழப்பங்களை ஏற்படுத்தும் குழுக்களால்கூட வேறு வழிமுறைகள் இருந்தபோதும்கூட இம்முறையினைப் பயன்படுத்தமுடியும். பலவீனமான அரசாங்கமொன்றிலிருக்கும் அவாவுடன் கூடிய அனைத்துக் குழுக்களும் மிலேச்சத்தனமான பல்வேறு முறைகளிடையே இம்முறையினை பயன்படுத்தலாம். உதாரணமாக சோமாலியாவை நினைவில் கொள்க.

இதேபோன்றுதான் இவ்வாறானதொரு அரசியல் வன்முறையினை அரசபடைகளால்கூட செயற்படுத்தமுடியும். 1985ல் பிரான்ஸ் நாட்டினால் கிறீன் பீஸ் அமைப்பிற்குரிய றேன்போ வொறியர் கப்பலை மூழ்கடித்தல், 1986ல் அமெரிக்கர்களால் லிபியாவின் ட்ரிபொலி நகரத்திற்கு குண்டுகளை வீசியமை என்பன அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முறைகளுக்குரிய உதாரணங்களாகும். அதேபோல் 2வது உலகப்போர் அண்மித்தபோது தோழபடைகளினால் ஜேர்மனின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டுவீசியமை, 1945ல் அமெரிக்காவால் ஜப்பானின் கிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களுக்கு அணுகுண்டுவீசியமை என்பன ஆயுதக் கலவரத்தின் பின்னணியில் வேறு வன்முறைகளையும் பயன்படுத்தும் அதேநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினை பயன்படுத்தும் செயல்களாகக் கூறமுடியும்.

இதனடிப்படையில் ‘பயங்கரவாதம்’ என்பது ஒருவிதத்தில் அரசியல் வன்முறையென்று பொருள்கோடல் செய்யப்படுகையில், இதனால் இது கட்டாயமாக ‘பிழையான’ ஒரு விடயமல்ல. ஏதாவதொரு செயலுக்காக ‘வானிலிருந்து குண்டுகளை வீசுதல்’ அல்லது படையெடுப்பின்போது அல்லது ‘சுற்றிவளைப்பு’ என்று கூறியவுடன் அச்செயல் ஒதுக்கப்படுவதில்லை என்பதைப்போல், இவ்வாறு பார்க்கும்போது அவ்செயல் அல்லது இச்செயற்பாடு பயங்கரவாத செயலாக குறிப்பிடுதல்மூலம் அச்செயற்பாட்டின் காரணத்திற்கான கலந்துரையாடலுக்கு பின்னணியினை அமைத்தலென்பதாகும்.

சரி, சரி இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கின்றேன் பயங்கரவாதமென்பதை நாம் இன்று பயன்படுத்துவது இங்கு குறிப்பிட்டதைப்போன்று, அதாவது இன்னுமொரு ‘அரசியல் வன்முறை’ என்றல்ல, முதலில் நாம் பயங்கரவாதமென்பது ‘வன்முறையினை பயன்படுத்தும் ஒருமுறையாக’ அல்லாமல் ஒருவிதமான நபர்கள் குழுவாகவும், இதனை ஒருவிதமான வழிமுறையாகவும் அல்ல. இது ஒருவிதமான யுத்த செயற்பாடாகும். ஒரு குறிப்பட்ட நபர் செய்யும் ஒரு செயற்பாடாக அல்ல. இதனை ஒருவிதமான நபராகக் காணப்பழகியுள்ளோம்.

இதனால் இப்பொழுதுள்ள பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாத குழுக்கள், பயங்கரவாக தலைவர்கள் இதே இவ்வாறானதொரு முறையில் இவ்வாறு ‘லேபல்’ ஒட்டுவதற்கு (பாகுபடுத்துதல்) யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்வதற்கு காட்சி அவசியமில்லை. ஏதாவதொரு குழு ‘பயங்கரவாதிகளாக’ பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பின் அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலிலும் ‘பயங்கரவாதிகளாகவே’ பாகுபடுத்த (லேபலிடுவதற்கு) இவர்கள் குறிப்பிட்ட செயலைச் செய்யவேண்டியதில்லை.

இரண்டாவதாக, சட்டரீதியில் இந்த பயங்கரவாதத்திற்கான பொருள்கோடல் நாம் ஏற்கனவே வழங்கியதைவிட விரிவாகவே உள்ளது. சட்டரீதியில் பயங்கரவாத்திற்கான பொருள்கோடலைப் பார்ப்போமானால் ‘சிவில் சமூகத்திற்கு தாக்குதலை மேற்கொள்ளல்’ என்பதற்கு அப்பால் சென்று சொத்துக்களுக்கெதிரான வன்முறை மற்றும் நாட்டின் அடிப்படை வசதிகளுக்கு (உட்கட்டமைப்பு வசதிகள்) ஏற்படுத்தப்படும் தாக்குதல்களையும் உள்ளடக்கும்விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சில சட்டமுறைகளின்கீழ் பாரியவகையில் சிவில் சட்டங்களை மீறும் செயற்பாடுகள்கூட ‘பயங்கரவாதம்’ என்ற கருப்பொருளுக்குள் அடக்கப்படுகின்றது.

Tuesday, March 24, 2009

தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றல் தடைசெய்யப்பட்டது


கடந்த 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதியன்று கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனி மாதம் 7ம் திகதி பொழுது விடிவதற்கும் முன்பாக ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பஸ்வண்டிகளுடன் லொட்ஜ்களைநோக்கி வந்திறங்கிய பாதுகாப்புப்படையினர், தமிழினத்தவர்களுக்கு சொந்தமான லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்புத்தரப்பினரால் கொண்டுவரப்பட்ட பஸ்வண்டிகளில் ஏறுவதற்கு வழங்கிய நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே. இவர்கள் மத்தியில் இருதய நோயாளிகள், மற்றும் பல்வேறு நோய்நொடிகளினால் பீடிக்கப்பட்டு மருத்துவத்தேவைக்காக வந்திருந்தவர்களும், கொலை அச்சுறுத்தல்களினால் தப்பியோடிவந்து மறைந்திருந்தவர்கள், ஓரிருநாட்களில் தமது திருமணத்திற்காக மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 300ற்கும் மேற்பட்டதாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஓரிருதினங்களுக்குமுன் அதாவது ஆனி மாதம் 1ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மாஅதிபர் கூறியதாவது, எவ்விதகாரணமுமின்றி கொழும்பில் தமிழினத்தவர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடாதென்பதாகும். இவ்வாறு எவ்விதகாரணமுமின்றி அல்லது எதுவும் கூறாமல் தமிழினத்தவர்களை மிகவுங்குறுகிய ஒரு நேரத்தினுள் கொழும்பிலிருந்து வெளியேற்றல் அவர்களது அடிப்படையுரிமையினை பாதிக்கும் செயலென ஊநவெநச கழச Pழடiஉல யுடவநசயெவiஎநள மூலம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இங்கு வழக்குத்தொடுநராக இருந்த (ஊPயுன்) கொள்கைகளுக்கான மத்தியநிலையத்தின் இயக்குனர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து அவர்கள் கூறியதற்கிணங்க, இவ்வாறு தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுதல் பிழையான ஒரு செயலென்பதுடன், சட்டத்திற்குமுரணான, மனிதஉரிமை மீறப்படும் ஒரு செயலுமாகுமென்பதாகும். இதனை கருத்திற்கொண்ட உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு ஆனி மாதம் 8ம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துக் கூறியதாவது, அரசபாதுகாப்புப்படைமூலம், இம்மக்களின் அடிப்படை உரிமைகளாகிய 12(1), 12(2), 14(1), H என்பன மீறப்பட்டுள்ளதென்பதையும் விளக்கி நின்றது.

இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தவுடன் அரசினால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் அவர்களது தங்குமிடங்களுக்கு அழைத்துவரப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக அவர்கள் வெளியிட்ட செய்தியில், தமிழ் மக்களுக்கு இவ்வாறானதொரு அசாதாரணத்தினை செய்தால் தமது அரசு பாரிய குற்றமொன்றை இழைத்துள்ளதுடன், தான் அதற்காக மன்னிப்புக்கோருவதாகவும் அறிவித்திருந்தார்.

இதற்கிணங்க வழக்குத்தொடுநரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் வழக்கு விசாரணைக்காக ஆனி மாதம் 27ம் திகதி எடுத்துக்கொள்ளப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பல மாதங்களாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரால் விசாரணை செய்யப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2008ம் ஆண்டு வைகாசி மாதம் 5ம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கிணங்க அரசியலமைப்பின் சரத்துக்களாகிய 11, 12(1), 12(2), 13(1), 13(2), 14(1), H அடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தமிழ் மக்கள் சார்பில் அரசினால் மீறப்பட்டுள்ளதென நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும் உயர்நீதிமன்றம் இனிவருங்காலங்களில், தமிழ் மக்கள் வெளியேற்றப்படல் தடைசெய்யும் விதத்தில் கட்டளையினை பிறப்பித்ததுடன் இங்கு அரசசார்பில் தோன்றிய சொலிசிட்ட ஜெனரல் பாலித்த பிரணாந்து அவர்கள் வருங்காலங்களில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற இடமளிக்கமாட்டாரென்று குறிப்பிட்டதுடன், இத்துடன் சேர்ந்த யாதெனும் ஒரு செயல் இடம்பெறமுன் நீதிமன்ற அனுமதியினைப் பெறுவாரெனவும் உறுதியளித்தார்.

இவ்வழக்கின் விஷேடத்துவம் யாதெனின் இந்நாட்டில் முதல்முறையாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சிறுபான்மை இனத்தவரொருவர் அடிப்படையுரிமை வழக்கொன்றை தொடுத்ததுடன், இதனை உயர்நீதிமன்றம் பொதுமக்கள் நலன் வழக்கொன்றாகக் கருதி விசாரணைசெய்ய அனுமதி வழங்கியமையாகும். இன்னுமொரு விஷேடத்துவம் யாதெனின், அரசசார்பற்ற நிறுவனமொன்று குடிமக்களின் மனிதஉரிமைமீறல் தொடர்பில் தலையிடுவதும், நீதிமன்ற செயற்பாடுகளில் உட்புகுவதும், இதன்காரணமாக தமிழ் மக்கள் சட்டத்திற்கு முரணான விதத்தில் வெளியேற்றல் தடைசெய்யப்பட்டதுமாகும்.

Monday, March 23, 2009

நாங்கள் அறியாத செஷ்

உங்களது பேச்சு பேச்சாற்றலில் சரியாக இருந்தாலும் அது உலகநியதியல்ல. தற்பொழுது அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கென நேர்மையாகச் செயற்படுகின்றது. இதற்கிடையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும்போது ஏற்படுவது என்னவெனில் தீவிரவாதத்தை தோற்கடிப்பது மந்தநிலைக்கு செல்வதாகும். மேற்குறிப்பிட்ட பதில் எனக்குக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்குமுன் க…….. நகரில் இடம்பெற்ற மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடலின் போதாகும்.

ஆயுதந்தாங்கிய குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மனிதஉரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரி;த்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கேள்வி அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது. கொலைகள், காணாமற்போதல்கள், கடத்தப்படல், சிறார்களை போரிலீடுபடுத்துதல், சித்திரவதைசெய்தல், சிவில் சமூகத்தினருக்கெதிராக யுத்தத்தாக்குதல்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் நிறுவனம் முன்வரவில்லையென்பதுடன், எவ்வித தண்டனையும் வழங்கப்படாமல் பயமில்லாமல் விரும்பியபடி குற்றச்செயல்கள் செய்வதற்கான வழிவகைகள் தோன்றியுள்ளதுடன், தேசிய மனிதஉரிமை ஆணைக்குழு தமக்கு சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட நான், எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டு பிரதேசமுட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அதிகாரமுடைய சர்வதேச மனிதஉரிமை செயற்திட்டமாகிய ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தொடர்பான உயர்தானிகரின் களக்காரியாலயத்தை இலங்கையில் நிறுவுதல் அவசியமென்பதனை, தேசிய மற்றும் சர்வதேச சங்கங்களினதும், பல மேற்கத்தேய நாடுகளின் கூட்டாகிய சர்வதேச சமூகத்தின் கருத்தும் இதுவென்பதனையும் நான் வலியுறுத்தினேன். குறிப்பிட்ட பதில் அதன் பிற்பாடே கிடைத்தது.

இதற்கு குறிப்பிட்டளவு ஒத்தான கருத்தை ஜெனிவாவில் இலங்கை முகவரான தயான் ஜயதிலக குறிப்பிட்டிருந்தார். அவரிற்கேற்ப யுத்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்படுதல் கடினம். வன்முறைகளடங்கிய யுத்தம் இடம்பெறும் ஒரு நாடு என்றவகையில் இலங்கை மனிதஉரிமையினைப் பாதுகாப்பது தொடர்பில் மிகவும் வரவேற்கத்தக்க செயற்பாடொன்றை செய்துள்ளது. முதலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, பிரபாகரனின் ஏகாதிபத்தியத்தின் கீழிருக்கும் தமிழர்களுட்பட வடக்குக், கிழக்குச் “சுதந்திரத்தை” பெற்று அதனை ஜனநாயக ஆட்சியின்கீழ் கொண்டுவந்தபின் கடந்தகால மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்பட எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறுவது இதுபோன்ற செயற்பாடுகளாகும்.

இருப்பினும் இந்த சபையின் உள்ளடக்கம் சாதாரண மக்களைக் கொண்டிருக்கவில்லை, பொலிசாரின் சித்திரவதைகளுக்கெதிராக மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களையும், மரணக்குழிகளைத் தோண்டி – கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்படி குரலெழுப்பியவர்களையும், தேர்தல் பிரசாரமென்றரீதியில் கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஒன்றுகூட்டிய, வீடுகளில், தொழில்ஸ்தாபனங்களில், பாதையில் வன்முறைகளுக்குட்படும் பெண்களுக்காக குரல்கொடுக்கும், சிறுவர்களை தேவையற்ற விடயங்களில் முன்நிறுத்துவதற்கெதிராக மட்டுமல்லாமல் கிழக்கிலிருந்து வடக்கிற்கு உறவுகளைக் காண்பதற்காக பயணஞ்செய்த ஆண்கள், மற்றும் பெண்களை உள்ளடக்கியிருந்தது. எனக்குப் பதில் கிடைத்தது தயானிடமிருந்தோ அல்லது வேறுயாராவது மஹிந்த சிந்தனையாளர்களிடமிருந்தோ அல்ல மனிதஉரிமை பாதுகாவலர் ஒருவரிடமிருந்தாகும். சபையிலிருந்த அனைவரும் அக்கருத்துடன் இணைந்தனரென்றால் அது அசாதாரணமாகும். இருப்பினும் குறிப்பிட்டளவு நபர்கள் அககருத்துடன் இணைந்திருந்தனரென்பது தெளிவானது எவ்வாறெனின் “அக்கதையிலும் உண்மையுள்ளது” என்று சிலர் குறிப்பிட்டதாலாகும்.

மனிதஉரிமை தொடர்பில் முழு உலகளாவிய பிரகடணனத்தில் குறிப்பிடுவதைப்போல் “கொடூர ஆட்சியும் அழுத்தங்களுக்கெதிராக இறுதி மாற்றுவழியான பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கவுள்ள ஒரேவழி சகலமக்களினதும் சகலமனிதஉரிமையினையும் சட்டத்தின்மூலம் பாதுகாத்தலாகும். இதனூடாக ஆயுதமேந்திய யுத்தத்திற்கு காரணமாகிய மனிதஉரிமை மீறப்படுவதுடன் யுத்தத்தின் காரணமாக மேலும் மனிதஉரிமை மீறல்களின் வேகம் அதிகரிக்கும். இதனால் செய்யக்கூடிய யுத்தத்தினுள் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்களைக் குறைப்பதற்கும், யுத்தத்திற்கு காரணமான மனிதஉரிமை மீறல்களை சரி செய்வதுமாகும்.

எமது பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட மனிதஉரிமை பாதுகாவலர்கள் இதனை அறியாது இருந்தவர்களல்ல. எனது கருத்து மிகவும் சரியானது என்று அவர்கள் குறிப்பிடக் காரணமாக அமைந்தது இதுவாகும். இருப்பினும் இப்பேச்சை இவ்வாறே ஏற்றுக்கொண்டால் கடந்தவாரம் நாங்கள் கதைத்த பிசாசின் கதையின் சபாநாயகரான எனது நண்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது பேச்சுக்களை மாற்றவும் நடைமுறையிலுள்ள நிலைமைகளுக்கெதிராக தோன்றவும் வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தெரிந்தவற்றை தெரியாதவிதத்தில் நடிப்பது உடலுக்கு சுகமானதாகும். வேறுவகையில் கூறுவதானால் இவர்கள் உண்மை நிலையினை நன்கறிவார்கள். இருந்தாலும் அதனை நம்புவதில்லை. இங்கு இவர்களது துணைக்கு வருவது எனது நண்பனின் துணைக்கு வந்த அதே பிசாசாகும். தமது குடும்பப் பிரச்சனைக்கு காரணமானது தமது மனைவியோ அல்லது பிற நபர்களோ அல்லது பணமோ அல்ல வீட்டில் குடிபுகுந்த ஒரு பிசாசு என்பதனை ஒரு சாத்திரி கூறியதனால் அவர் மனநிறைவடைந்ததுடன் அவர்கள் செய்யவேண்டிய விடயம் அந்தப் பிசாசை தேடிக்கண்டுபிடிப்பதாகும். தேசிய நண்பர்கள் சாத்திரிகளினால் கடந்தவாரம் அந்தப் பிசாசு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது கருத்திற்கேற்ப “இந்த எல்லாத் தோஷங்களுக்கும் காரணம் பிரபாகரனாகும். அவரை அழித்தவுடன் இந்தப் பிரச்சனையும் முடிவுக்குவரும்”. இந்தப் பூதத்தை அழிப்பதற்கான யாகம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய நண்பர்கள் மற்றும் மனிதஉரிமை பாதுகாவலர்களாகிய இருதரப்புமொன்றாக யாகத்தில் உட்கார்ந்திருப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு செலவுகளையும் தாங்கிக்கொள்ள தயாராகவுள்ளனர்.

பரக் ஒபாமா
பின்லாடன்மூலம்

பழக்கப்பட்ட கதைபோலுள்ளதா? நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்


மத்திய லண்டனில் தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெற்று ஆறு பேர் இறந்ததுடன், மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லண்டன் நகரத்தினுள் அரசியல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது தற்போதைக்கு தடைசெய்துள்ள பிரதமர் ஹபயாஸ் கோபூஷ், சட்டத்தினை அகற்றுமாறு கட்டளையிடுகின்றார் (கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்படி பொதுமக்கள் கட்டளையிட வழிசமைக்கும் சட்டம்). ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொலிஸ் ஆணையாளரின் கருத்தின்படி, 10000ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மிகவும் சுதந்திரமாக லண்டன் நகரத்தினுள் நடமாடுகின்றனரென்பதாகும். நகரைப் பாதுகாக்கும்முகமாக 50000ற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர், கால்வாய்களினுள் வெடிபொருட்கள் (வெடிப்படையும்) தீவிரவாதிகளினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமென்பதனை கண்டறியும்முகமாக பொலிஸின் மேற்பார்வையின்கீழ் விஷேட படையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராணியும் இந்நிலைமைதொடர்பில் கவனஞ்செலுத்துகின்றார். இத்தீவிரவாதிகளை கண்டஇடத்திலேயே தூக்கில்போட்டு கொலைசெய்யுமளவிற்கு தனது மனமும் மாறியுள்ளதாக ராணி குறிப்பிடுகின்றார். புத்திஜீவி ஒருவரின் கருத்தின்படி தீவிரவாதிகளின் நோக்கத்திற்கு பாரியளவில் துணைநிற்கும் அல்லது ஆதரவு வழங்கும் லண்டன் நகர பொதுமக்கள் இத்தாக்குதலினால் குழப்பமடைந்து பிற்போக்கான அரசின் துணையை நாடி நிற்கின்றது. இருப்பினும் தீவிரவாதத்தைமட்டுமன்றி, தீவிரவாத செயற்பாடுகளில் தாக்கத்தைச் செலுத்தும் அரசியல் அடிப்படைகளுக்கான பதிலைத் தேடுவதற்காக எதிர்கால பிரதமரின் நோக்கங்களை மாற்றியமைக்க இத்தாக்குதல் காரணமாக அமைந்ததென்பதனை காலங்கடந்தே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

இங்கு கூறப்பட்ட நடவடிக்கைகள்யாவும் நிஜமாகவே இடம்பெற்றவையாகும். ஆனால் இவை இந்நூற்றாண்டிலோ அல்லது கடந்தநூற்றாண்டிலோ இடம்பெற்றவையல்ல, இவை 1867ல் நடந்தவை. அன்றைய பிரதமராக இருந்தவர் பென்ஜமின் டிஸ்ராயேல் அன்றி ரோனி பிளேயர் அல்ல. அன்றைய நகரக பொலிஸ் ஆணையாளராக இருந்தவர் சிறிமத் இயன் பிளேயர் அல்லது சிறிமத் ஜோன் ஸ்டீவன்ஸோ அல்ல றிசர்ட் மென் என்பவரே. அன்றைய ராணியாக இருந்தவர் இரண்டாவது எலிசபெத் அன்றி விக்டோரியா ஆவார். அன்றைய பொதுமக்கள் புத்திஜீவியாக இருந்தவர் சொம்சகி அன்றி கால்மாக்ஸ் என்பவராவார். எதிர்கால பிரதமர் கோடன் பிறவுண் அன்றி கிளஸ்டன் என்பவரே. அன்றைய தீவிரவாதிகளாக இருந்தவர்கள் அல்கய்டா அன்றி அய்ரிஷ் பினியன்களாவர்.

கோனர் கர்ட்
மனிதஉரிமைகள் அழியாது நிலைத்திருக்குமா?

இடைவேளையின்பின் மீண்டும் உங்களுடன்


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின்பின் எம்மால் பேசமுடியாத ஒரு காலகட்டம் உருவாகியது. “பேசமுடியாத இடத்தில் அமைதிகாக்க வேண்டும்” என்ற வித்கஸ்டயின் என்பவரின் கருத்திற்கிணங்க “சமபிம தற்காலிகமாக அமைதிபேணியது”.

உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பேச்சுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், சிவில்சமூகம் போன்ற மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் அவசியமாகியது. அந்த அமைதியான காலகட்டத்தின்போது எமது சக்தியினையும், நேரத்தினையும் நாம் அவ்வாறானதொரு மக்கள் சக்தியினை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தினோம்.

தற்பொழுது நாம் மீண்டும் “சமபிம”வினை ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளோம்.

எமது நோக்கில் இலங்கை சமூகம் ஒரு திருப்புமுனையினை நோக்கி வந்தடைந்துள்ளது. இத்திருப்புமுனையின் ஆரம்பம் என்னவென்று எமக்குத் தெரியாது. இருப்பினும் இலங்கையின் அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் தத்துவஞானிகள், ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் ஒடுக்கப்பட்ட (அடைபட்ட) ஒரு நிலையினை அடைந்துள்ளதுடன் தமது தூதுவர் கடமையினைப்பற்றி மீண்டும் சிந்திக்கவேண்டிய தேவைப்பாடொன்று உருவாகியுள்ளது.

உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரியளவில் மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. நடைமுறையிலுள்ள லிபரல் குடியரசு சமூக அமைப்பென்று அழைக்கப்படும் பணம்படைத்த சமூகமுறை வரலாற்றில் முடிவென்பதுடன், தொன்றுதொட்டு நடைமுறையிலிருக்கும் இச்சமூக அமைப்புக்கோ அல்லது அச்சமூக அமைப்பினூடாக தேசிய அரசிற்கு வழங்கப்படும் அறிவூட்டல்கள் அல்லது சவாலிடும் மடையர்கள் என்போர் கூட்டித்தள்ளப்படுவதுடன் இதுகாலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையென்பதுடன், வடக்கில் யுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் முடிவடைந்து, சமாதானம் உருவாகுவதுடன், தார் வீதிகள் காபட் வீதிகளாக மாறி எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஆயுதங்களைக் களைந்து தபால் சேவையாக உருமாறும் (Post LTTE) என்று தம்பட்டமடித்தவர்களும் இவ் புது மாற்றம் உலகிற்கும், தெற்காசிய பிரதேசத்திற்கும் மாத்திரமன்றி இலங்கையிலும் எவ்வாறு தாக்கஞ்செலுத்துமென்பதனை யோசிக்கவேண்டியிருக்கும்.

நன்றாக ஓட்டங்களைக் குவித்த சிறந்த ஓட்டங்களுடன் திகழ்ந்த ஒரு கிறிக்கெற் வீரர் தொடர்ச்சியாக கீழ்மட்டத்தை (தோல்வியடைதல்) நோக்கி செல்லும்போது அவருடன் சேர்ந்து அவரது ரசிகர்களும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மனைவி, ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் போன்று அனைவரும் குழப்பமடைவர் (சோர்ந்துபோதல்). இவ்வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வெளிவர தனக்குப் பழக்கப்பட்ட (தனது பாங்கிலான) விதத்தில் ஓட்டங்களை குவிக்க இவ்வீரர் முயற்சி செய்தபோதிலும் அதன் பலன் மீண்டும் தோல்வியையே அடைந்தது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அவரது பயிற்றுவிப்பாளர்கள் வீரனுக்கு வழங்கும் அறிவுரை என்னவென்றால், தான் கடந்த காலங்களில் விருத்திசெய்த மனவலிமையினை சற்று மறந்து மீண்டும் கிறிக்கெற் விளையாட்டினை ஆரம்பத்தில் கற்கும்போது பின்பற்றிய முறைகளை கடைப்பிடிக்கும்படியாகும். அதாவது “Back to the Basic” என்பதாகும்.

எமது கருத்து இலங்கையின் சமூகம் தம்மைப்பற்றி புதிதாக யோசிக்க வேண்டுமென்பதாகும். இதற்காக மீண்டும் ஆரம்பப்படிமுறைகளை நோக்கிப்பயணிக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் மனிதஉரிமை மற்றும் குடியரசைப் பாதுகாப்பதற்காக “சமபிம” மூலம் முன்னெடுத்துச்செல்லவிருந்த கலந்துரையாடல்களைக்கூட இதன் காரணமாக மீண்டும் ஆரம்ப நிலைக்குள் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் கலந்துரையாடலின்போது தினமும் எழும் பிரச்சனைகளிலிருந்து அப்பால் சென்று எமது சமூகத்தின் தேவைப்பாடுகளை இனங்காண வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் எம்முடன் இணைந்திருந்து எமக்கு உதவிய “சமபிம” வாசகர்கள் இந்தத் தளம்பல் நிலையினால் சற்று நிலைகுலைந்திருக்கலாம். இருப்பினும் எம்மால் கூறக்கூடிய ஒன்று சற்றுக் குழப்பமடையாமல் இன்னும் சில வாரங்கள் எம்முடன் இணைந்திருக்கம் படியாகும்.

தங்களது எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் எமக்கு எழுதியனுப்புவது எம்மை மகிழ்ச்சியிலாழ்த்தும்.
பத்திரிகை ஆசிரியர்

சமபிம
றயிட்ஸ் நவ்
24/13விஜயபா ஒழுங்கை
நாவல வீதி
நுகேகொடை
மேலதிக விபரங்களுக்கு 0777342834