ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின் 7ஆவது அமர்வு கடந்த வாரம் ஜெனிவாவில் முடிவுற்றது. முன்னைய நேரஅட்டவணையின் பிரகாரம் மார்ச் 28ஆவது நாள் முடிவுறவேண்டியிருந்து பின் இன்னுமொரு அரைவாசி நாளுக்காக அமர்வு நீடிக்கப்பட்டது. ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் வாரிசாக கிடைத்த மனிதஉரிமை கவுன்சில் இன்னும் அதன் இளமைப் பருவத்திலுள்ளது. இதனால் இம்முறை அமர்வின்போது கூடிய கவனம் மனிதஉரிமை கவுன்சிலின் வளர்ச்சியிலும் மனிதஉரிமை தொடர்பில் உயர்தானிகர் அலுவலகத்திற்கும் கவுன்சிலுக்குமான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பன கலந்துரையாடப்பட்டது. (மனிதஉரிமை உயர்தானிகர் பதவி ஐக்கிய நாட்டு உயர்செயலாளரினால் நியமிக்கப்படுவதுடன் கவுன்சில் உயர்சபையின் கீழியங்கும் ஒரு நிறுவனமுமாகும்) கவுன்சில் இறுதியாக யாருக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை.
அமர்வுகள் ஆரம்பித்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடக்கம் 5ஆம் தேதி காலையமர்வு வரை அங்கத்துவ நாடுகளின் விசேட பிரதிநிதிகளின் தங்களது கருத்துக்களை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆமர்வுகள் ஆரம்பத்தின்போது மனிதஉரிமை உயர்தானிகர் திருமதி லூயிஸ் ஆபர் இவ்வாண்டின் 6ஆம் மாதத்துடன் நிறைவுறும் தனது முதலாவதாண்டு அங்கத்துவக்காலத்தின் பின் மீண்டும் அவ்வங்கத்துவப்பதவியினை வகிக்கப்போவதில்லையென்ற அவரது கருத்தை முன்வைத்தார். பலரது அதிருப்திற்குள்ளானதற்கான காரணம் நாளுக்குநாள அதிகரித்துவரும் பாரிய மனிதஉரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு மற்றும் அதனை அறிக்கையிடுவதற்காக இலங்கையினுள் தனது உயர்தானிகர் ஆலயத்தின் கள அலுவலகத்தை நிறுவ எடுத்த முயற்சியேயாகும்.
இம்முறை அமர்வானது இலங்கையின் அரசதரப்பினரை பொறுத்தமட்டில் அவர்களுக்கு எதிராக பல புகார்கள் எழுப்பப்பட்ட அமர்வாக இருந்தது. இருப்பினும் இலங்கையரசுக்கு ஆறுதல் தரும் விதத்தில் இலங்கைக்கெதிராக எவ்வித புகாரும் ஏற்படுத்தப்படாதவகையில் அமர்வுகள் நிறைவுற்றது. இந் நிறைவு மனிதஉரிமை கவுன்சிலின் சாதாரண செயற்பாடுகளை தெரிந்திருக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான விடயமல்ல. கவுன்சிலினுள் பல நாடுகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் மிகவும் கண்டிப்பான விதத்திலும் மென்மையான முறையிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தர்க்கத்தில் முடிவது (குறிப்பிட்ட நாட்டிற்கெதிராக ஏதாவது முடிவு எடுக்கப்படுவது) மிகவும் அரிதான சந்தர்ப்பத்திலேயேயாகும். அவ்வாறானதொரு தீர்மானமெழுவது கவுன்சிலின் அங்கத்துவ நாடுகளின் மேலதிக வாக்குகளின் முலமாகும். உதாரணமாக இலங்கையின் நிலைமையினைக் கருத்திற்கொள்வோமாயின் இலங்கையில் மேலோங்கியுள்ள மனிதஉரிமையின் நிலைமை அமர்வின்போது பல்வேறு நாடுகளின் முகவர்களினால் பேசப்பட்டது. அமர்வின் ஆரம்பத்தின்போது சுவிற்சர்லாந்தின் மனிதஉரிமைகள் அமைச்சர் இலங்கை மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் அதிககவனத்தைச் செலுத்தினார். அத்துடன் மனிதஉரிமையின் உயர்தானிகர் லூயிஸ் ஆபர் இலங்கையினுள் இன்றைய நிலைமையில் சர்வதேச தலையீடு அவசியமென்பதனையும் வலியுறித்தினார். வி.ஐ.பி முகவர்களின் அமர்வின்போது பிரித்தானிய, ஆபிரிக்க, ஆசியாவில் ஐக்கிய நாட்டு கடமைகள் தொடர்பில் உரையாடும் டிலோக் பிரவுன் அடியார்கள் நீண்ட நேரமாக இலங்கையின் நிலையினைப் பற்றி கவனம் செலுத்தினார். பாரிய விதத்தில் தீவிரவாத பயமுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைத் தீவிரவாதச் செயற்பாடுகளைக் கண்டனஞ் செய்வதுடன் தீவிரவாதத்திற்கெதிராக செயற்படும் சந்தர்ப்பத்தில் மனிதஉரிமைகளையும் மதித்து நடத்தல் வேண்டுமென்றும் கூறியிருந்தார். நாட்டினுள் காணாமற்போதல்கள்இ சட்டவிரோதமான படுகொலைகள்இ ஊடகங்களுக்கெதிராக செயற்படல் என்பவற்றும் அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கும் இத்தருணத்தில் இலங்கையிலுள்ள மனிதஉரிமை நிறுவனங்களிற்கு முக்கிய பங்கொன்றினை செயற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அக்கடமையினை செயற்படுத்துவதற்கு அவ்வமைப்புக்கள் சுயாதீனமாக இயங்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் கூறுகையில் லூயிஸ் ஆபரின் கருத்து உயர்தானிகர் அலுவலகத்தை இலங்கையில் நிறுவ ஐக்கியநாடு தமது பாரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதென்பதனை முன்வைத்தார்.
அதற்கு மேலான சுவீடன, நெதர்லாந்து போன்ற நாடுகளும் தமது அதிருப்தியை இவ்வமர்வின்போது வெளியிட்டிருந்தனர். விசேடமாக நோர்வே இலங்கையின் மனிதஉரிமை மீறல்களுக்கு நெருங்கிய தொடர்புடைய நிலையினைப் பற்றி நீண்டநேரம் கருத்துக்களை வெளியிட்டிருப்பினும் அது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பெயரினை முன்வைக்காமல் மிகவும் கவனமாக செயற்பட்டது. மனிதஉரிமை கவுன்சிலுடன் இணைந்ததாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராய நியமிக்கப்பட்டிருந்த அதிவிசேட பத்திரிகை நிருபர்கள, விசேட முகவர்கள், செயற்பாட்டுக்குழுக்கள் என்பவற்றின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் பலவிடயங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக கொடூர செயற்பாடுகள் அதேபோல் கொடூர மனிதாபிமானமற்ற கேவலமான நடத்தைகள் தண்டனைகள் தொடர்பில் விசேட நிபுணர் மன்பிரேட் நொவாக் 2007 ஒக்டோபர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சிறந்த விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் பொலிஸ் நிலையங்களில, இராணுவ முகாம்கள், சிறைச்சாலைகள் என்பவற்றினுள் இடம்பெறும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பில் மிகநீண்ட அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அக்கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் தொடர்பில் விசேட நிபுணர்கள் மனிதஉரிமை பாதுகாவலர்கள் தொடர்பில் விசேட நிபுணி என்பனவர்களின் அறிக்கைகளிலும் இலங்கையில் மிகவும் பாரதூரமான நிலையிலுள்ள மனிதஉரிமை நிலையின் குறைநிறை பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டிருந்தது. சுருங்கக்கூறின் மனிதஉரிமையின் முழு அமர்வின்போது இலங்கை குற்றவாளிகளின் கூட்டிலேயே அமர்ந்திருந்தது. அரச சார்பில் அங்கு கலந்து கொண்டவர்களுள் மனிதஉரிமையும் அதற்குப் பொறுப்பான அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனிதஉரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ ஜெனிவாவின் முகவரான தயான் ஜயதிலக உட்பட சட்டமாஅதிபர் திணைக்களம் பொலிஸ் உட்பட வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளுக்கு முழு அமர்வின்போதும் ஏற்பட்ட புகார்களுக்கெதிராக தங்களைப் பாதுகாக்கும் விதத்தில் விடையளிக்கவேண்டியிருந்தது. இதற்கான உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பல்வேறு நாட்டு முகவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருப்பதற்கும் உடனடியாக அவற்றிற்கு பதிலளிக்கும் உரிமையின்கீழ் மிகவும் செய்வினையுடனும் பதிலளிக்கும் சிறப்புற்ற அமர்வொன்று இலங்கையின் முகவர்களுக்கு கிடைத்திருந்தது. வி.ஐ.பி முகவர்களது கருத்துக்கள் உள்ளிட்ட அமர்வின் ஆரம்ப தினத்திலேயே கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவுக்கும் மனிதஉரிமையினை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் அதனை பாதுகாத்தல் தொடர்பிலும் அவரது வழமையான கருத்துக்களை தெரிவிப்பதற்குப் பதிலாக அங்கிருந்த கவலைக்குரிய நிலவரம் என்னவெனில் தம்மைப் பாதுகாக்க காரணம் கூறுவதாகும். இலங்கை உலகிலேயேயுள்ள பரிதாபமற்ற பிரிவினைவாத தீவிரவாத குழுவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை தெளிவுபடுத்திய அமைச்சர் அவ்வாறான ஒரு நிலைமை நீடிக்கும்போதும்கூட மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு தமது ஜனாதிபதியும் அரசும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எடுத்துக்காட்டினார். மனிதஉரிமை உயர்தானிகர் அலுவலகத்தின் கள காரியாலயத்தை இலங்கையில் உருவாக்குவதற்கு தமது அரசு மிகவும் கண்டிப்புடன் தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக விளக்கிய அமைச்சர் அதற்குப் பதிலாக இலங்கையினுளிருக்கும் அரச மனிதஉரிமை நிறுவனங்களின் நிலை மற்றும் தொழில் திறமையினை உயர்த்துவதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பை தமக்கு வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். தனது நாடு நிரூபிக்கக்கூடிய விமர்சனங்கைளப் போற்றுவதுடன் எப்பொழுதும் தமது அரசை மதிப்பதாக வலியுறுத்தியிருந்தார். மனிதஉரிமை ஆணைக்குழுவின் நிலையினை உயர்த்துவதற்காக பாராழுமன்ற தேர்தல் குழுவொன்றின் ஆலோசனையினை எதிர்பார்ப்பதாகவும் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் என்பனவற்றைப் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இப்பொழுது தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்புக்கருதி விசேட சட்டமூலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்திருந்தார்.
இவ்வெல்லாத் தகவல்களின் படி குறைந்து கூடியுள்ள மனிதஉரிமை நிலைமையின் பாதக நிலையினை பல நாடுகள் இவ்வமர்வின்போது மட்டுமல்லாது இதற்குமுன் இடம்பெற்ற 6ஆவது அமர்விலும் செய்த கண்டனங்களுக்கு புகார்களுக்கு காரணம் கூறும்வகையில் தப்பிழைக்கும் வகையில் விடயங்களை முன்வைத்தனர். இருப்பினும் மனிதஉரிமை அமைச்சர் மற்றும் அவரது முகவர்கள் கூறிய காரணங்கள் எவையும் உண்மைக்கு அருகிலும் வரவில்லையென்பது தெளிவாகியது. இன்னொரு வகையில் கூறுவதாயின் அமைச்சர் இருந்தது யதார்த்தமாக இலங்கை மண்ணில் இல்லாத ஒரு நிலையினை உருவாக்கிக்கொண்டு கவுன்சிலில் தனது கடமையினை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றினார்.
அமர்வு மண்டபத்தில் இவ்வாறு இடம்பெறும்போது மனிதஉரிமை கவுன்சில் வளாகத்தின் பல சிறிய மண்டபங்களினுள்ளும் இலங்கையின் மனிதஉரிமை நிலைமை தொடர்பில் பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் கருத்துக்கள் வெளியிடல் என்பன இடம்பெற்றது. சயிட் இவன்ட் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக பொருத்தமான அங்கத்துவ நாடுகள் மூலமாகவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் இலங்கைக்கு சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை அலுவலகமொன்று அவசியமற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்ற தலைப்பின்கீழ் இவ்வாறான இரண்டாம் பட்சமான ஒன்றுகூடலொன்று இலங்கை அரசின் பிரதிநிகள்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு நடத்தப்பட்டது. முஹிந்த சமரசிங்ஹ, தயான் ஜயதிலக, ரஜீவ வீரசிங்ஹ என்பவர்களுடன் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பெரிய எண்ணிக்கையில் இங்கு குறிப்பிடப்பட்ட தலைப்பின்கீழ் கருத்துக்களை தெரிவிப்பதற்கு தயாராக இருந்தபோது அதற்கு கலந்துகொண்ட கண்காணிப்பாளர்களுக்கு விடயங்களை வெளிப்படுத்துதல் ஒருபுறமிருக்க கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு அமர்வாக இக் கூட்டம் அமைந்தது. சுருங்கக்கூறின் சம்பிரதாயமாக இவ்விரண்டாம்பட்ச ஒன்றுகூடல்களுக்கு கலந்துகொள்வதற்கு விருந்தோம்புவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த பணிஸ் 30 தொடக்கம் 40 வரையிலான எண்ணிக்கை மண்டபவாயிலில் மீதியாக இருந்தது. இருப்பின் அரச பிரதிநிதிகள் மூலம் பின் ஒரு நாள் இடம்பெற்ற “சிறு உரிமைகள்” என்னும் இரண்டாம்பட்ச ஒன்றுகூடலுக்கு அவ்வாறானதொருநிலை ஏற்படவில்லையென்ற ஒரு குறிப்புமுண்டு.
7ஆவது அமர்வின்போது இலங்கையில் மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தை விழிப்பூட்டும் எண்ணத்துடன் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் ஜெனிவாவிற்கு சென்றிருந்தனர். அவர்கள் பல்வேறு மனிதஉரிமை நிறுவனங்களின் துணையுடன் இரண்டு இரண்டாம்பட்ச ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர் ஒன்று சர்வதேச மேற்பார்வை காரியாலயம் இலங்கை ஏன் அவசியமானது? ஏன்பதும் இக்கூட்டத்தின்போது அமெரிக்காவின் ஹியுமன் றயிட்ஸ் வொச் அமைப்புமூலம் இலங்கையில் காணாமற்போனோர் என்பதுடன் தொடர்புடையவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட 60 சம்பவங்கள் அடங்கிய விடயக்கொத்து “றிகறிங் நயிட்மெயார்” என்ற பத்திரத்தை வெளியிட்டனர். இலங்கையில் அரச பிரதிநிதிகள் தமது நிரந்தரவிடயத்தை வெளிப்படுத்திக்கொண்டு கூட்டத்தின்போது விடையளிக்கும் உரிமையினை செயற்படுத்தும் விதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையரசு அமர்வின் முழுப்பகுதியின்போதும் மேற்பார்வை அலுவலகத்திற்கெதிராவே தமது கருத்தை வலியுறுத்தியது. இக்கருத்தை நிலைப்படுத்துவற்காக பலவாதங்களை முன்வைத்தனர். அவற்றிலொன்று தற்போது இலங்கையிலிருக்கும் தேசிய மனிதஉரிமைப் பாதுகாப்பு நிறுவனம் அத்தொழிற்பாட்டிற்கு போதுமானதென்பதாகும். தேவைப்படுவது என்னவெனில் அந்த நிறுவனங்களின் சுறுசுறுப்புத் தன்மையினையும் தொழிற்பாட்டுத் தன்மையினையும் உயர்த்துவதற்குத் தேவையான தொழிநுட்ப பக்கபலத்தை உயர்த்துவதாகும்.
மிகவும் கொடூரமான தீவிரவாதக் கும்பலுடன் போரிலீடுபட்டிருப்பினும் இவ்வாறான நிலைமையிருக்கும் பல்வேறு நாடுகளைவிட மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதில் ஏனைய நாடுகளைவிட இலங்கை முன்னணியிலிருப்பதாக இலங்கையின் கருத்தாக இருந்தது. அவ்வாறே மனிதஉரிமைகளைப் பாதுகாக்காது அதை மீறுவோருக்கெதிராக தற்போதைக்கும் சட்டரீதியான ஏற்பாடு செய்யப்பட்;டுள்ளது. உதாரணமாக அவ்வாறான குற்றங்களை செய்ய இராணுவம் மற்றும் பொலிஸ் படைக்கெதிராக தற்போதைக்கு 600க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது காலதாமதமாக தென்பட்டாலும் இவ்வாறான நிலைகளிருக்கும் வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை வேகமாகவே செயற்படுகின்றது. மறுபுறத்தில் இப்போதைக்கு மனிதஉரிமை தொடர்பாக மேற்பார்வை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள சில நாடுகளின் கருத்துப்படி அவ்வாறானதொரு அலுவலகம் இல்லாதிருந்தால் நல்லதெனக்கூறுகின்றனர். இலங்கையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும் பல நாடுகள் வேறு நாடுகளில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் மௌனம் சாதிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. சில நாடுகள் இலங்கைக்கு கட்டளையிடுவது இலங்கை தமது ஆட்சியின்கீழிருக்கும் காலணித்துவ நாடென்ற எண்ணக்கருவிலாகும். ஒட்டுமொத்தத்தில் இக்காரணங்களுக்காக இலங்கை மனிதஉரிமை தொடர்பிலான மேற்பார்வை காரியாலயத்தை விரும்பவில்லை அல்லது எதிர்பார்க்கின்றது. எவ்வாறிருப்பினும் ஐக்கிய நாட்டின் மனிதஉரிமை கவுன்சிலின் அமர்வின் முடிவின்போது இலங்கைக்கெதிராக எவ்வித தீர்;மானமும் முன்வைக்கப்படவில்லை. இதற்குப்பதிலாக மனிதஉரிமையினை மீறுவோருக்கு பாரிய தலைவலியாகவிருந்த லூயிஸ் ஆபர் தனது பதவியினை இராஜினாமா செய்தது அனைவருக்கும் திருப்தியான முடிவாக இருந்தது. இதற்கேற்ப இலங்கையினுள் மனிதஉரிமை தொடர்பிலான மேற்பார்வை அல்லது கண்காணிப்பு அலுவலகமொன்றை அமைப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்குப்பின் நியமிக்கப்படும் உயர்தானிகர் ஆரம்பத்திலிருந்து தமது கடமையினை ஆரம்பிப்பார். இது இலங்கையில் மனிதஉரிமையினை மீறுவோருக்கு மிகவும் சந்தோசமான ஒரு செய்தியாகும். இதனால் மிகவும் பலன்மிக்க அரசு எனப்பேசும் மகிந்த சிந்தனைக்கு ஒரு சுகமான அனுபவமாகும். இலங்கை மனிதஉரிமை கவுன்சிலினுள் மிகவும் சிறந்த ஒரு இடத்திலுள்ளது என தம்பட்டமடிக்கக்கூடியதாக இந்நிலைமையிருக்கும்.
இருப்பினும் கடைசியில் கவனிக்கப்படவேண்டிய விடயமென்னவெனில் இலங்கை மனிதஉரிமைகள் கவுன்சில் அப்பாவியானதல்ல அதுவொரு பிரதிவாதியாகும். அவ்வாறாயின் பிரதிவாதிக்கெதிராக செயற்பட ஒரு முடிவெடுக்க கவுன்சிலினால் ஏன் முடியாமலுள்ளது. இந்தப் பிரதிவாதிக்கெதிராக வாக்களிப்பவர்களில் இவ்வாறான பிரதிவாதிகள் பலர் உள்ளனர். இவர்கள் எல்லோரும் அவர்களது நாட்டினுள் இலங்கையரசினைப்போன்று மனிதஉரிமையினைமீறும் பலகுறைகளுக்குமுள்ளாகியுமிருப்பவர்கள். பெயர்ரீதியாகக் குறிப்பிடுவதாயின் இலங்கையிருப்பது சிம்பாபே, சூடான, ஈராக், ஈரான, கொலம்பியா போன்ற முக்கியமானவர் மத்தியிலாகும். இதனால் கவுன்சிலினுள் இலங்கை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஜெனிவாவின் முகவராக இருக்கும் தயான் திலகரத்ன மிகவும் சவாலாகக் கூறுவது என்னவெனில் முடியுமானால் இலங்கைக்கு அபிப்பிராயம் சொல்லும்படியாகும் உண்மை. இந்த அசுத்தமான விசுவாசத்தன்மையினால் அவ்வாறானதொன்றை செய்யமுடியாமலுள்ளது.
இதனால் மனிதஉரிமைகளுக்கு இறைவன்தான் துணையென்று கூறிவிட்டு இருக்கவும் முடியாது. அசுத்தமான விசுவாசங்களை தகர்த்தெறிந்து அல்லது இருக்கும் தெரிவான விடயங்களுக்கு அப்பால் சென்று மிகவும் தந்திரோபாயமாக தெரிவுகளை தெரிந்தெடுப்பதில் சவால்களைப் பொறுப்பெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment