Wednesday, October 8, 2008

மனிதஉரிமையினைப் பாதுகாத்தல் தொடர்பில் சர்வதேச வேலைத்திட்டம்


ஒரு நாட்டினுள் மனிதஉரிமையுடன் தொடர்புடைய பாரிய பிரச்சனைகள் உருவாகுவதும் பின்பு அவை மறைந்து போவதுமாக இருக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலிருக்கும் முக்கியமான எண்ணக்கரு என்னவென்றால் சர்வதேச மனிதஉரிமை பிரிவு ஒன்று இலங்கைக்கு அவசியமா என்பதாகும். இன்று நாம் எதிர்பார்ப்பது மனிதஉரிமையினை பாதுகாப்பது சர்வதேச வேலைத்திட்டத்தின் அவசியத்தன்மையினைப்பற்றி இலங்கையரசு வேறுதரப்பினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் சர்வதேச சமூகம் அதுதொடர்பில் கொண்டுள்ள கருத்துக்கள் என்பவற்றைப்பற்றி வாதமொன்றினை ஏற்படுத்தலாகும்.

குளிர்ச்சியான யுத்தகாலத்தின்போது உலகிலுள்ள நாடுகள் சோசலிசம் மற்றும் சோசலிசமற்ற விதத்தில் பிரதான இரண்டு பலம்வாய்ந்த பாசறைகளாகப் பிரிக்கப்பட்டது. சோசலிச நாடுகள் அரசகேந்திர நிலையமென்ற எண்ணக்கருவை கொண்டிருந்தனர். சோசலிசமற்ற (மேற்கத்தேய) நாடுகள் சர்வதேச கொள்கையொன்றினைப் பின்பற்றினர்.
சோசலிச அரசிற்கேற்ப சர்வதேச சமூகத்தின் கடமை என்னவென்றால் ஒரு நாட்டினுனுள்ள சட்ட முறைமைகளுள் பொதுமக்களுக்குத் தேவையானளவு சந்தர்ப்ப வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அராஜக அரசினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டுப்பாட்டுரீதியிலான ஏற்றுக்கொள்ளலை ஏற்படுத்துதல். அதாவது எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதஉரிமைகள் எவையென்பது தொடர்பில் பரந்தளவிலான சட்டத்தை அல்லது திரளானதிட்டம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்குவரல். சர்வதேச சமூகத்தினூடாக அவ்வேற்பாட்டை எடுப்பதன்மூலம் ஒவ்வொரு அரசின்மூலமும் அங்கு குறிப்பிடப்பட்ட பரந்தளவிலான சட்டங்களை ஒவ்வொருவருக்கும் தகுந்தவகையில் ஏற்று நடத்தல் வேண்டும். அராஜக அரசின்மூலம்தான் இது செய்யப்படுகிறது. உரிமைகள் என்றால் என்ன, ஆட்சிப் பலத்தை செயற்படுத்தும் அதிகாரிகளின் பலமென்ன, உரிமை மீறப்படும்போது உதவிகோரும் மக்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ள கோவை முறையென்ன என்பன தேசிய சட்டத்தினூடாக விளங்கப்படுத்தப்படும். உதாரணமாக இலங்கையின் அரசியலமைப்பில் 10-14வது சரத்துகளில் அரசினால் அடிப்படை உரிமைப பகுதியில் சட்டத்தின்மூலம் ஏற்படுத்தக்கூடிய எல்லைகளென்பது தொடர்பிலும் 17உம் 126வதும் சரத்துக்களில் ஒரு நபரின் மேற்குறிப்பிட்ட உரிமைகள் மீறப்படுமாயின் மேற்கொள்ளக்கூடிய விதிமுறைகள் அல்லது கோவைகள் எவையெனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தின்போது சரியான விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு செய்யக்கூடியவை எதுவும் கிடையாது. அராஜக அரசின்மூலம் தீர்மானங்களெடுக்கப்படும,இ இருப்பினும் அராஜக அரசின்மூலம் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவது எவ்வாறெனின் மனிதஉரிமைகளை பின்பற்ற வேண்டுமென்பதுடன் அதனை செயற்படுத்த வேண்டிய விதம் எவ்வாறென்பது தொடர்பில் (சர்வதேச விதிகளினால் உருவாக்ப்பட்ட எல்லையினுள்) இருந்தே அவற்றை செயற்படுத்த வேண்டும். இது ரிலே விளையாட்டின் போது அதன் கம்பை மற்றைய நபரிடம் கொடுப்பதைப் போன்றது.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகம் தேசிய தொழிநுட்பத்தை நோக்கி உரிமைகளைப் பாதுகாக்கும் நடை கம்பை மாற்றும். சோசலிச நாடுகளைக் கருத்திற்கொள்வோமாயின் இங்கு விளங்குவது என்னவென்றால் ஒரு நாட்டை வற்புறுத்துவதென்பது வேறொரு அரசினாலோ அல்லது சர்வதேச சமூகத்திற்கேற்ற ஒரு விடயமல்ல. அவ்வாறு செய்யப்படுமாயின் அது சர்வதேச சட்டத்தின் முக்கிய கொள்கைகளிலொன்றான “அரசினது உள்ளகச் செயற்பாடுகளில் தலையிட்டு அச்செயற்பாடுகளில் ஈடுபடத் தடைசெய்தலென்ற எண்ணக்கருத்திற்கெதிரானதாகும்”. இக்கொள்கையின் அவசியமற்ற நோக்கமென்னவென்றால் அரசின் அராஜக தன்மையினை பாதுகாத்தலாகும்.

வேறு நாடுகளின் செயற்பாடுகளில் தலையிடுவதைத் தடுத்தல் அதிகாரத் தன்மையான விதிக்குள்ள ஒரேயொருமுறையென்பதுடன் மனிதஉரிமை மீறப்படுதல் உலக சமாதானத்திற்கு பயமுறுத்தலாக உள்ளவிதத்தில் மிகவும் பாரதூரமாகவும் ஒழுங்கு முறையாகவும் நடப்பதென்றால் மாத்திரம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகம் தலையிட உரிமையினைப் பெறும். அங்குள்ள நிலையினை கலந்தாலோசிக்கும்போது ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்திற்கு முடியும். உதாரணமாக அவர்களால் மீட்கப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட அராபி நாடுகளில் செய்யப்பட்ட மீறல்களினால் ஈஸ்ரேல் தடைவிதித்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சோசலிச நாடுகள் சர்வதேச சமூகத்தின் தலையீட்டினை அங்கீகரிக்கும். இலங்கையில் இன்றைய நிலைமை தொடர்பில் ஏனைய சோசலிச நாடுகள் தலையிடும் அதிகாரக் கொள்கையினை ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் அவர்களிடம் இலங்கை தொடர்பிலிருக்கும் விசேட விருப்பமோ தெளிவோ அதற்கான காரணமல்ல. அவ்வாறு செய்வது மீண்டும் அவ்வரசுகளின் கோவை அல்லது நடைமுறையினை அச்சுறுத்தலுக்கு இட்டுச்செல்லும். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையின் நிலைமை சீனாவின் செயற்பாட்டினைவிட மேலோங்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இலங்கையின் விடயங்களில் தலையிட அல்லது அதிகாரமுடைய கொள்கைகளினை ஏற்றுக்கொள்வர்.

இலங்கையில் மனிதஉரிமையினை பாதுகாத்தல் தொடர்பிலுள்ள செயற்பாடுகளில் இவ்வாறான ஒரு நோக்கத்தை பின்பற்றுகின்றது. அவ்வாறே குறிப்பிட்ட சில சோசலிச நாடுகள் சர்வதேச சமூகத்தின் தலையிடலுக்கெதிராக முன்வைத்த கருத்துக்களும் இவையே.

அதேபோன்று பல மேற்கத்தேய நாடுகள் விசேடமாக ஸ்கன்டினேவியா மற்றும் பல மேற்கத்தேய ஜரோப்பியாவை எடுத்துக்கொண்டால் அவர்களின் கருத்து என்னவென்றால் நவீன அரசு ஒருவகையான கண்ணாடி வீடு என்பதாகும். எல்லோராலும் உள்ளே என்ன நடக்கின்றது என்பதனை வெளியிலிருந்து பார்க்கக்கூடியதாகவிருக்கும் என்பதுடன் அவை சர்வதேச தராதரத்திற்கேற்ப உள்ளதா என்பதனை வெளியிலிருந்து நோக்கக்கூடியதாக இருக்கும். மேற்கத்தேய நாடுகளை பொறுத்தமட்டில் வெளிப்பாடான மேற்பார்வையினை பல வழிகளில் மேற்கொள்ளமுடியும். அதிலொருமுறை அரசு தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசப் பின்னணிகளை ஏற்று நடக்கின்றனவா என்பதனை உறுதிசெய்வதன் நோக்கத்தின் சர்வதேச மேற்பார்வை தொழிநுட்பத்தினை உருவாக்குதலாகும்.

சில மேற்கத்தேய நாடுகளின் எண்ணக்கருவின்படி மனிதஉரிமை தொடர்பிலான சர்வதேச மட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலும் அப்பொறுப்பை தேசியமட்டத்தில் செயற்படுத்துதல் தொடர்பில் சிறந்தவொரு வேறுபாட்டை வெளிப்படுத்துதலுமாகும். அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. அதாவது வெயிப்படையாக உருவாகும் சர்வதேசப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரச நிறுவனங்கள் வழமையாகத் தோல்வியடையும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேசப் பொறுப்புக்களை தேசிய விதிகளாக மாற்றியமைக்கும் பொறுப்புடைய தேசிய நிறுவனங்கள் இப்பொறுப்பை தேசிய அராஜக தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தும். இருப்பினும் சர்வதேச விதிகளின் பலன் என்னவென்றால் அவ்விதிகளை ஏற்றுக்கொள்வதற்கு உறுதுணையாகவுள்ள ஓர் அரசின் பொறுப்பாகும். அரச ஆட்சியாளர்கள் வேறு வழிகளில் தமது பலத்தைக் கொண்டுசெல்வதற்கு பயன்படுவது நாட்டின் பொதுமக்களையாகும். இதனால் அரச தேவைப்பாடாக இல்லாமல் மக்களின் தேவைக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சர்வதேச தரத்தை சிறந்தமுறையில் பின்பற்றுகின்றனர் என்பதனை உறுதிசெய்யக்கூடியது சர்வதேச சமூகத்தின் கண்களால் மட்டுமே.

No comments: