Wednesday, October 8, 2008

மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு சர்வதேச ரீதியான அவதானிப்பு இலங்கைக்கு அவசியமா?


மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு நிலையமொன்றும் புலக் காரியாலயமும் இலங்கையினுள் நிறுவுதல் அவசியமென்று ஏன் கூறுகின்றீர்கள்?

இது சம்பந்தமாக முயற்சியுள்ள தேசிய மற்றும் சர்வதேச நபர்கள் நிறுவனங்கள் நீண்டகாலமாக கூறுவது என்னவென்றால் இலங்கையில் மனிதஉரிமை தொடர்பான பாரதூரமான நிலை காரணமாக சர்வதேச அவதானிப்பு மையமொன்று அவசியமென்று எழுந்துள்ளது என்று கூறுகின்றனர் குறிப்பாக மனிதஉரிமை பாதிக்கப்படும் அளவும் தன்மையும் மனிதஉரிமை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய நிறுவனங்களில் திறமை ரீதியான மட்டுப்பாடுகள் யுத்தப்பிரதேசங்களிலிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கிருக்கும் தேவைப்பாடுகள் என்பவற்றை நோக்குமிடத்து அவ்வாறான ஒரு நிறுவனம் அவசியமாகின்றது. குற்றஞ் செய்பவர்கள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாது நீண்டகாலமாக தண்டனைகள் எதுவுமின்றி இருப்பதும் அரச நிறுவனங்களைப்போன்று எல்.ரி.ரி.ஈயினாலும் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கேற்படும் அச்சுறுத்தல்கள் மேலோங்கிவருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு கண்காணிப்பு நிறுவனத்தின் அவசியப்பாடு நன்கு புலப்படுகின்றது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்பமுறைகள் தோல்வியடைந்துள்ளது என்று ஏன் கூறுகின்றீர்கள்? இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவினால் இக்கடமையினைச் செய்ய முடியாதா?

நகரத்தைவிட்டு வெளியில் குறிப்பாக யுத்தம் இடம்பெறும் இடங்களில் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு இருக்கும் கடப்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனிதஉரிமை மீறல்களை சிறந்த முறையில் விசாரணை செய்வதற்கோ குற்றவாளிகளை சட்டத்தின்முன் கொண்டுவருவதற்கோ பொலிஸ் மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. குற்றவாளிகள் நீண்டகாலத்திற்கு தண்டனைகள் ஏதும் அனுபவிக்காது இருப்பதற்கான நிலவரமொன்று உருவாகியுள்ளது. எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டிற்குளிருக்கும் பிரதேசங்கள் எவ்விதத்திலும் சுயாதீனமாக மனிதஉரிமை நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கு இடங்கொடுக்காதுள்ளதுடன் நாட்டில் குற்றவியல்கோவையினை அப்பிரதேசங்களில் செயற்படுத்துவதற்கும் எல்.ரி.ரி.ஈ இடங்கொடுப்பதில்லை. மேற்குறிப்பிட்ட கொடூரமான செயற்பாடுகளின் காரணமாக சிவில் சமூகத்தினரிடையே பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலவரம் உருவாகியுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்பவர்களும் சாட்சியாளர்களும் பாதுகாக்கப்படுவதற்கான வழிமுறையொனறில்லாத காரணத்தினால் பாதிப்புக்குட்படும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸிற்கோ வேறு உயர் அதிகாரிக்கோ தனது பிரச்சனைகளைக்கூறுவதற்குத் தயங்குகின்றனர். காரணம் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்ற பயமேயாகும். விசேட மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கும் சரியான வழிமுறைகளை கற்பிப்தற்கும் இம் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு சக்தி இருப்பினும் தொடர்ச்சியாக அச்சக்தியினை செயற்படுத்துவதற்கு ஆணைக்குழுவால் முடியாதுள்ளது. இதற்கான பிரதான காரணம் அரசு மற்றும் எல்.ரி.ரி.ஈ இருவரும் ஆணைக்குழுவிற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்காமையேயாகும். கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட விபரங்களை கண்காணிக்கும் செயற்திட்டத்தின் பின் டிசம்பர் 2003இல் அறிக்கையொன்று வெளியிட்ட ஆணைக்குழு இவ்வாறு கூறியிருந்தது. “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதஉரிமைகளின் நிலையினை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கோ செயற்படுத்துவதற்கோ திறமையுள்ள தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒன்றேனும் இயங்கவில்லையென்பது எனது நம்பிக்கையாகும். அதற்கான சக்தி எந்தவொரு நபருக்கோ நிறுவனத்திற்கோ இல்லை”. இவ்விடயம் ஆணைக்குழுமூலம் சித்திரை 2005இல் மேற்கொண்ட ஓர் செயற்திட்டத்தின்பின் மீண்டும் உறுதியாக உள்ளது. எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டிற்குளுள்ள பிரதேசங்களில் மனிதஉரிமை ஆணைக்குழு செயற்படுவதில்லை என்பதுடன் அவ்வாணைக்குழுவிற்கு அப்பிரதேசத்திற்குள் நுளைவதற்கும் முடியாதுள்ளது.

மனிதஉரிமைகள் மீறப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மனிதஉரிமை தொழில்நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை நிலையத்தினால் செய்யக்கூடியது என்ன?

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து பெற்றுள்ள அனுபவங்களுக்கேற்ப இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மற்றும் ஓரங்காட்டாத (பாரபட்சம் காட்டாத) மனிதஉரிமை மேற்பார்வை நிலையத்தினால் மிகமுக்கிய பணியொன்றினை மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும். அவ்வாறானதொரு நிலையத்தினால் பொதுமக்ககையும் பாதுகாக்கமுடியும். சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனிதஉரிமை மீறல்களின் உண்மை நிலையினை அறிந்துகொள்வதுடன் அதற்குமேலாக சிவில் சமூகத்தினருக்கு உதவமுடியும். அதுமாத்திரமன்றி சமூகத்தினுள் யுத்தியை ஏற்படுத்துவதுடன் ஏனைய தேசிய மனிதஉரிமைகள் தொழில்நுட்பங்களை மீண்டும் பலப்படுத்த உதவமுடியும்.

கடந்த காலங்களில் அரசுக்கும் எல்.ரி.ரி.ஈற்குமிடையில் நிலவிய யுத்தநிறுத்தம் சிலகாலம் செயற்படாதிருந்து தற்பொழுது முற்றுமுழுதாக செயற்படாதிருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதான உடன்படிக்கை இல்லாதிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச மனிதஉரிமை மேற்பார்வைகள் வருகைதருதல் யதார்த்தமாகுமா?
யுத்தநிறுத்த உடன்படிக்கை இல்லாத சந்தர்ப்பத்திலும் அரசுக்கும் எல்.ரி.ரி.ஈஇனருக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை உருவாவதற்கு முன்னதான காலப்பகுதியிலும் அவ்வாறானதொரு மேற்பார்வை நிலையத்தின் தேவைப்பாடு அவசியமாக இருந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையத்திற்கு தரப்பினரிடையே இல்லாதுபோன நம்பிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவமுடியும். யுத்தம் மேலும் மேலோங்குவதைத் தடுப்பதற்கும் அரசியல் ரீதியில் கலந்துகொள்ளவும் வழிசமைத்துக் கொடுக்கமுடியும்.

உயர்தானிகர் அலுவலகமொன்றை இலங்கை நிறுவவேண்டும் என்பதற்கான யோசனையின் போது இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவெனில் அவ்வாறானதொரு அலுவலகத்தை இலங்கையில் நிறுவுதல் ……….. தீங்குவிளைவிக்கும் என்பதனால் இதற்கானதேவைப்பாட்டை சிறிதளவேனும் ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுக்கின்றது. இதற்குப்பதிலாக தற்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் தேசிய நிறுவனங்களின் திறமையினை வளரச்செய்வதற்கான தொழில்நுட்ப உதவியினை வழங்குவதற்காக அரசு ஐக்கியநாடுகள் ஸ்தானத்தின் உதவியினை கேட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கியநாடுகளின் இணைப்பின் கீழியங்கும் மனிதஉரிமை தொடர்பிலான சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் 2004ல் இருந்து இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
மனிதஉரிமைகள் தொடர்பிலான உயர்தானிகர் அலுவலகத்தை இலங்கையின் தலைநகரத்திலும் ஏனைய பிறபிரதேசங்களிலும் நிறுவ இலங்கை அரசின் அனுமதி அவசியமா?
அனுமதியினைப்பெற வேண்டும். அது நிறுவப்படும்போது அரசிற்கும் உயர்தானிகர் அலுவலகத்திற்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு அதன் அடிப்படையிலேயாகும்.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் உயர்தானிகர் காரியாலயத்தின் பிரதான காரியாலயம் இலங்கையில் நிறுவப்பட்டால் அதன் செயற்பாடு எவ்வகையில் அமைந்திருக்கும்?

அவ்வாறானதொரு சர்வதேச மேற்பார்வையாளர் அலுவகத்தின் சுபாவம் தீர்;மானிக்கப்படுவது அரசு ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் உயர்தானிகர் போன்றோகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தத்தில் தங்கியுள்ளது. அவ்வாறானதொரு மேற்பார்வை நிலையம் ஒன்று காணக்கிடைத்தலென்பது மனிதஉரிமை மீறல்களை தடுக்கஉதவும். மனிதஉரிமை மீறல்களுக்கான எதிராக அனைத்துத்தரப்பினரும் உடனடியாக மேற்கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுதல் போன்ற செயற்திட்டத்தினூடாக அந்நிலையம் தனது பதிலடியினை கண்டுகொள்ளும். அதற்குமப்பால் நீண்டகால அபிவிருத்திகள் தேசிய மனிதஉரிமை நிறுவனங்களின் திறமையினை வளர்ச்சி செய்தல் என்பனவையும் இதனூடாக எதிர்பார்க்கப்படலாம்.

ஒரு மேற்பார்வை நிலையம் செயற்படுவது அனேக மேற்பார்வையாளர்கள் இயங்கும் சர்வதேச நிறுவனம் போன்றதா?

இல்லை. எல்லாவகையான மேற்பார்வை அலுவலகங்களாலும் அரச மற்றும் அரசசார்பற்ற தேசிய மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் வேலைசெய்யும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் சமூகம்இ அரச நிறுவனங்கள்இ ஐக்கியநாட்டு முகவர் அலுவலகங்கள்இ சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் விசேட பிரதிநிதிகளிடையே ஒரு இணைப்புப் பாலமாக செயற்பட இது உதவும்.

நல்லது மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை உருவாகினால் இவ்வாறானதொரு அலுவலகத்தின் அவசியமென்ன?

நிச்சயமாக யுத்தம் இடம்பெறும் சிலநாடுகளில் சமாதான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமான யுத்தத்தில் ஈடுப்படுள்ள தரப்பினர்கள் மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் பங்கினை அவர்களது சமாதான உடன்படிக்கையில் குறிப்பிடுவர். அவ்வாறும் இல்லாவிடின் பிறிதொரு மனிதஉரிமை உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு அவ்வுடன்படிக்கைக்கேற்ப செயற்படுகின்றனரா என அவதானிப்பதற்கு ஜக்கியநாடுகளின் அமைப்பிற்கு அழைப்பு விடுப்பர்.

மேற்பார்வை காரியாலயங்கள் அமைப்பது தொடர்பில் பேசும்போது அதன் சுயாதீனதன்மை பற்றி பல்வேறுவிதமான கேள்விகள் எழுகின்றது. மிகவும் நம்பிக்கையானவகையில் தனது கடமைகளைச் செய்வதற்கு அவ்வாறானதொரு அலுவலகத்திற்கு அவசியமான விதிமுறைகள் என்ன?

யுத்தத்தினுள் சிக்கியுள்ள அல்லது யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களாலும் மீறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விடயங்களை சேகரிப்பதற்கு அதற்கு முடியுமாக இருக்கும். அதேபோன்று நாட்டின் சகல பிரதேசமும் அத்தேடுதலில் அடங்கவேண்டும். எல்.ரி.ரி.ஈஇன் கட்டுப்பாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்குள்ளும் நுழைவதற்கு அதற்கு முடியுமாக இருக்கவேண்டும். அதேபோன்று அரச நிறுவனங்கள் தொடர்பில் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அடுத்த தரப்பினர் தொடர்பில் நுழையும் திறமை அதற்குமேலாக இருக்கவேண்டும். எந்தவொரு நபருடனும் சுதந்;தரமாக மற்றும் தனித்துவமாக கலந்துரையாட அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சகல தரப்பினரின் இடமிருந்தும் விடயங்கள் சேகரிப்பதற்கும் ஒருங்கிசைவான ஒப்பந்தமொன்றின்மூலம் மேற்பார்வை அலுவலகத்திற்கு அனுமதி வழங்கியிருத்தல் அவசியமானதாகும். நீண்டகால அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக தேசிய மனிதஉரிமை நிறுவனங்களின் அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப ஒத்தாசையினை வழங்குவதற்கும் அதற்கு பலமிருக்க வேண்டும். அதேபோதன்று மனிதஉரிமை நிறுவனங்களுடனும் சிவில் சமூகத்துடனும் சுதந்திரமாக தொடர்புகொள்ள அதற்கு இயலுமாக இருக்கவேண்டும். பிரசித்திவாய்ந்த பிரசுரங்கள் மற்றும் அறிக்கைகள் என்பனவற்றை வெளியிடுவதற்கும் மனிதஉரிமை உயர்தானிகர் காரியாலயத்திற்கு தனது அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கும் இவ்வாறான மேற்பார்வை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கவேண்டும்.

No comments: